குட்டி குட்டி பச்சை பட்டாணியில் கொட்டிக்கிடக்கும் நன்மைகள்
Health Tips: உணவுக்கு ருசியை சேர்ப்பதுடன் பச்சை பட்டாணி பல உடல்நல பிரச்சனைகளையும் நீக்க உதவுகிறது. இதில் வைட்டமின் ஏ, பி, சி, ஈ, கே மற்றும் மெக்னீசியம், பொட்டாசியம், துத்தநாகம், கேடசின் மற்றும் எபிகாடெசின் போன்ற தனிமங்கள் உள்ளன.
Health Tips: பருவகால பழங்கள் மற்றும் காய்களை உட்கொள்வது நம் உடல் ஆரோக்கியத்திற்கு மிக நல்லது. இவை அந்தந்த பருவ காலத்திற்கு ஏற்ற ஊட்டச்சத்துகளையும், நோய் எதிர்ப்பு சக்தியையும் நம் உடலுக்கு அளிக்கின்றன. தற்போது குளிர் காலம் துவங்கிவிட்டது. இந்த காலத்தில் நமது உடல் ஆரோக்கியத்தை பேண சில காய்களை கண்டிப்பாக உட்கொள்ள வேண்டும். குளிர்காலத்தில் பிரத்யேகமாக கிடைக்கும் சில காய்கள் நம் உணவின் சுவையை அதிகரிப்பதொடு நம்மை ஆற்றலோடும் இருக்கச்செய்கின்றன. அவற்றில் ஒன்றை பற்றி இந்த பதிவில் காணலாம்.
ஒவ்வொரு ஆண்டும் குளிர்காலத்தில், பல்வேறு வகையான பச்சை காய்கறிகள் சந்தைகளில் ஃப்ரெஷ்ஷாக கிடைக்கின்றன. இவற்றில் பச்சை பட்டாணியும் ஒன்று. பல வகையான உணவு வகைகளை இதன் மூலம் செய்யலாம். மேலும் இவை கறிகளிலும், உப்புமா, கலந்த சாதங்கள், பிரியாணி, கிச்சடி போன்றவற்றிலும் சேர்க்கப்படுகின்றன. உணவுக்கு ருசியை சேர்ப்பதுடன் பச்சை பட்டாணி பல உடல்நல பிரச்சனைகளையும் நீக்க உதவுகிறது. பச்சைப் பட்டாணியில் வைட்டமின் ஏ, பி, சி, ஈ, கே மற்றும் மெக்னீசியம், பொட்டாசியம், துத்தநாகம், கேடசின் மற்றும் எபிகாடெசின் போன்ற தனிமங்கள் உள்ளன.
பச்சை பட்டாணி செரிமானத்தில் உதவுவதுடன் நீரிழிவு நோயாளிகளுக்கும் நன்மை பயக்கும் என்று கருதப்படுகிறது. இதில் குறைந்த ஜிஐ அளவு உள்ளது. இது சர்க்கரையை கட்டுப்படுத்த உதவுகிறது. இரத்த சர்க்கரை அளவு அதிகமாக இருப்பவர்கள் குளிர்காலத்தில் பச்சை பட்டாணியை கண்டிப்பாக சாப்பிடலாம்.
பச்சை பட்டாணி சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் (Health Benefits of Green Peas)
1. செரிமானம் (Home Remedy For Digestion)
பச்சை பட்டாணியில் நார்ச்சத்து உள்ளது. இது செரிமானத்தை சிறப்பாக வைத்திருக்க உதவும். பச்சை பட்டாணியை தினமும் உட்கொள்வது குடலில் உள்ள நல்ல பாக்டீரியாக்களின் வளர்ச்சிக்கு உதவுகிறது. இது வயிறு தொடர்பான பிரச்சனைகளை அகற்ற உதவுகிறது.
2. உடல் பருமன் (Home Remedy For Obesity)
பச்சைப் பட்டாணியில் இரும்புச்சத்து, ஃபோலேட், வைட்டமின் ஏ, பாஸ்பரஸ் ஆகியவை இருப்பதால், உடல் ஆரோக்கியத்துடன் உடல் எடையைக் குறைக்கவும் உதவுகிறது. உடல் எடையை குறைக்க வேண்டுமானால் பச்சை பட்டாணியை உணவில் சேர்த்துக்கொள்ளலாம்.
மேலும் படிக்க | பச்சைப் பூண்டில் இவ்வளவு நன்மைகளா? உடல் எடையை கச்சிதமாக்கும் உள்ளி பூடு
3. சர்க்கரை நோய் (Home Remedy For Diabetes)
பச்சை பட்டாணி சாப்பிடுவது நீரிழிவு நோயாளிகளுக்கு நன்மை பயக்கும் என்று கருதப்படுகிறது. குளிர்காலத்தில் பச்சை பட்டாணியை தினமும் சாப்பிட்டு வந்தால் நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்தலாம்.
4. இதய ஆரோக்கியம் (Home Remedy For Heart Health)
பட்டாணியில் கரையக்கூடிய நார்ச்சத்து உள்ளது, இது கொலஸ்ட்ரால் அளவை சீராக்கும். உங்கள் இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க, குளிர்காலத்தில் பச்சை பட்டாணி சாப்பிடலாம்.
5. எடை குறையும் (Home Remedy For weight Loss)
குளிர்காலத்தில் உடல் எடையை குறைப்பது மிகவும் கடினம். அத்தகைய சூழ்நிலையில், பச்சை பட்டாணியை உணவில் ஒரு பகுதியாக்கினால் உடல் எடையை குறைப்பதில் உதவி கிடைக்கும். இதில் போதுமான அளவு புரதம் உள்ளது. இது தவிர, பச்சை பட்டாணியில் இரும்புச்சத்து, ஃபோலேட், வைட்டமின் ஏ, பாஸ்பரஸ் ஆகியவை உள்ளன. பச்சை பட்டாணி தசை வலிமையை ஊக்குவிக்கிறது.
(பொறுப்பு துறப்பு: அன்புள்ள வாசகரே, எங்கள் செய்திகளைப் படித்ததற்கு நன்றி. இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | உச்சி முதல் பாதம் வரை.... நன்மைகளை வாரி வழங்கும் தனியா நீர்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ