பயறு வகைகளில் ராணி காராமணி! நீரிழிவை போக்கும், எலும்புகளை வலுவாக்கும் தட்டைப்பயறு

Nutritious Food For Healthy Life: நார்ச்சத்து, கால்சியம், மக்னீசியம், பாஸ்பரஸ், பொட்டாசியம், புரதச்சத்து உட்பட பல ஊட்டச்சத்துக்கள் அதிக அளவில் பொதிந்துள்ள காராமணி தீர்க்கும் நோய்களின் பட்டியல் நீளமானது

Written by - Malathi Tamilselvan | Last Updated : Nov 17, 2023, 07:08 AM IST
  • காராமணியில் உள்ள நார்ச்சத்து உடல் எடையை குறைக்கும்
  • தட்டைப்பயறில் உள்ள கால்சியம் எலும்பை வலுவாக்கும்
  • புற்றுநோயை எதிர்க்கும் பயத்தங்காய்
பயறு வகைகளில் ராணி காராமணி! நீரிழிவை போக்கும், எலும்புகளை வலுவாக்கும் தட்டைப்பயறு title=

நமது உணவில் பருப்புகளுக்குக் கொடுக்கும் முக்கியத்துவத்தை நாம் பயிறுகளுக்குக் கொடுப்பதில்ல்லை. உண்மையில், நமது உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் பருப்புகளில் இருப்பதைவிட பயறுகளில் அதிகம் உள்ளது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் தினசரி உணவில் ஏதேனும் ஒரு பயிறு சேர்த்துக் கொள்ள வேண்டும்.

நமது உடல் ஆரோக்கியத்திற்கு தேவையான ஊட்டச்சத்துக்களைக் கொடுத்து ஆயுளை கூட்டக்கூடிய பயறு வகைகளில் முக்கியமானது தட்டைப்பயறு என்று சொல்லப்படும் பயத்தங்காய். பொதுவாக காரமணி என்று அழைக்கப்படும் இந்த பயறு, பார்ப்பதற்கு பீன்ஸ் போலவே இருக்கும்.

தட்டைப்பயறில் நார்ச்சத்து, கால்சியம், மக்னீசியம், பாஸ்பரஸ், பொட்டாசியம், புரதச்சத்து, போன்ற சத்துக்கள் அதிக அளவில் உள்ளதால் உடல் எடையை குறைக்க நினைப்போருக்கு மிகவும் உகந்தது காரமணி. ஏனென்றால், உடலிலுள்ள கழிவுகளை வெளியேற்றக்கூடிய தன்மை இந்த காராமணிக்கு உண்டு என்பதுடன், அரை கப் காரமணியில் 1 கிராம் கொழுப்பு மட்டுமே இருப்பதால் சட்டென உடல் எடைக் குறையும்.

மேலும் படிக்க | நீரிழிவை ஒழித்துக் கட்ட... வெறும் வயிற்றில் குடிக்க வேண்டிய ‘6’ பானங்கள்!

காரமணியில் கிளைசெமிக் குறியீடு மிகவும் குறைவாக உள்ளதால் நீரிழிவு நோயாளிகளுக்கு மிகவும் சிறந்தது காராமணி. சர்க்கரை நோயாளிகள் தட்டைப்பயறை அதிக அளவில் எடுத்துக் கொண்டால் அவர்களது இன்சுலின் சுரப்பு சீராகும் என்பதால், நீரிழிவு நோயாளிகளுக்கு காராமணி ஒரு வரப்பிரசாதம் என்றே சொல்லலாம். 

உயர் இரத்த சர்க்கரை பிரச்சனைகளால் பாதிக்கப்படுபவர்களுக்கு பல்வேறு வீட்டு வைத்தியம் பரிந்துரைக்கப்படுகிறது. ஆனால் அவை அனைத்தையும் விட, காராமணி பயறு சிறந்தது. ஏனென்றால், காராமணி பயறில் நீரிழிவு மட்டுமல்ல, பல்வேறு நோய்களை சீராக்கும் மருத்துவ குணங்கள் புதைந்திருக்கின்றன.

காராமணியில் உள்ள வைட்டமின் சி, புரதம் மற்றும் ஆண்டிஆக்ஸிடெண்ட் ஆகியவை சருமத்தை பரமரிக்கின்றன. ஆண்டிஆக்ஸிடெண்ட் சருமம் முதிர்வதைத் தடுப்பதுடன், புற ஊதா கதிர்களில் இருந்து பாதுகாக்கிறது. எனவே, காராமணியை வார்த்தில் மூன்று நாட்கள் சேர்த்துக் கொண்டால் சருமம் இளமையாக இருக்கும்.

மேலும் படிக்க | வெளுத்துக்கட்டும் வெந்தயம்.. பல பிரச்சனைகளின் ஒரே தீர்வு

காராமணியை உங்கள் டயட்டில் சேர்த்துக் கொண்டால் எந்தெந்த நோய்களின் ஆபத்து குறையும் தெரியுமா?

காராமணியில் உள்ல கால்சியம், மெக்னீசியம், மங்கனீசு எலும்புகளை வலிமையாக்கும், பற்களை வலுவாக்கும்
அதிக நார்ச்சத்து கொண்ட தட்டப்பயறு மலச்சிக்கலைப் போக்கும்
ஆன்ட்டி ஆக்சிடென்ட்ஸ் நிறைந்துள்ளதால், சருமம் இளமையாக இருக்கும், புற்றுநோய் தடுப்பாக செயல்படும் 
நார்ச்சத்து அதிகம் மலச்சிக்கல் வராது
காராமணியில் உள்ள மெக்னீசியம் இன்சுலின் சுரப்பியை சீராக்கி நீரிழிவை கட்டுபடுத்தும் 
கோலின் என்ற வைட்டமின் B நிறைந்த தட்டைப்பயிறு, கல்லீரல் கோளாறுகள் ஏற்படாமல் பாதுகாக்கும், இதய செயலிழப்பு ஏற்படாமல் பாதுகாக்கும்  
அதிக அளவில் ஃபோலேட் சத்து இருப்பதால் கர்பிணிகள் காராமணியை உண்பதால் குழந்தையின் மூளை வளர்ச்சி சீராக இருக்கும்.

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன்னர் கண்டிப்பாக மருத்துவர்களின் ஆலோசனையைப் பெறவும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்கணுமா? வீட்டிலேயே செய்யக்கூடிய சூப்பர் உணவுகள்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News