கோடைகாலத்தில் கட்டாயம் சாப்பிட வேண்டிய காய்கறிகள்
Benefits Of Eating Bottle Guard in Summer: உடல் வறட்சியைப் போக்குவதற்கு ஒரே வழி, நீர்ச்சத்து அதிகம் நிறைந்துள்ள பழங்கள், காய்கறிகள், தண்ணீர் மற்றும் ஜூஸ்கள் போன்றவற்றை அதிகம் உட்கொள்ள வேண்டும்.
கோடைகாலத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும். அதிலும் அக்னி வெயில் வந்தால், உடலில் இருக்கும் நீர்ச்சத்துக்கள் எல்லாம் வெயிலால் உறிஞ்சப்பட்டு சோர்வு ஏற்படும். அதனால்தான் கோடைக் காலத்தில், நீங்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் மற்றும் சரியான உணவு மற்றும் பானங்களை மட்டுமே உட்கொள்ள வேண்டும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். இந்த காலத்தில் தண்ணீர்ச்சத்து மட்டுமின்றி, உப்புச் சத்து குறைபாடும் ஏற்படும். அதனால் நாம் உண்ணும் உணவிலும் காய்கறிகளிலும் நீர்ச்சத்துக்கள் அதிகம் உள்ளதாக பார்த்து சாபிடுவது நல்லது. அத்தகைய காய்கறிகள் என்னவென்று இந்த பதிவில் தெரிந்துக் கொள்ளலாம்.
சுரைக்காய் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்
மலச்சிக்கல், வாயுத்தொல்லை மற்றும் பைல்ஸ் போன்றவற்றைத் தடுக்க சுரைக்காய் உதவுகிறது. இதனுடன், செரிமானத்தையும் மேம்படுத்துகிறது. இந்த காய்கறி உடல் எடை குறைக்கவும் உதவுகிறது. சுரைக்காயில் உள்ள வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் உணவு நார்ச்சத்துக்கள் உடலுக்கு நன்கு ஊட்டமளிக்கிறது மற்றும் தேவையற்ற பசியைத் தடுக்கிறது. உயர் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த உதவும் சோடியம், பொட்டாசியம் மற்றும் அத்தியாவசிய தாதுக்களும் இதில் உள்ளன. அத்துடன் இதில் வைட்டமின் பி மற்றும் சி ஆகியவையும் நிறைந்துள்ளது மற்றும் இவை ஆக்ஸிஜனேற்ற செயல்களுக்கும் உதவுகிறது.
மேலும் படிக்க | வறண்ட கண்களால் வாட்டமா? இவை காரணமாக இருக்கலாம், இப்படி தீர்வு காணலாம்
கோடைகாலத்திற்க்கு சுரைக்காய் ஒரு வரப்பிரசாதம்
சுரைக்காய் இந்தியாவில் மிகவும் சுவையான காய்கறிகளில் ஒன்றாக கருதப்படுகிறது. சுரைக்காயில் ஊட்டச்சத்துக்கள் அதிகம். நீர்ச்சத்து மற்றும் வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்த சுரைக்காய், பல உடல்நலப் பிரச்சனைகளுக்கு தீர்வாகும். சுரைக்காயில் சுமார் 96 சதவீதம் நீர்ச்சத்து நிரம்பியுள்ளது. இதனால், நம் உடலை குளிர்ச்சியாக வைத்துக் கொள்ளவும், போதுமான நீர்ச்சத்து வழங்கி புத்துணர்ச்சியாக வைத்துக் கொள்ளவும் இது உதவிகரமாக இருக்கிறது. இந்த காய்கறி உடல் வறட்சியை நீக்குவது மட்டுமின்றி, கண் பார்வையையும் கூர்மையாக்கும்.
சுரைக்காயின் மருத்துவ பயன்கள்
* சுரைக்காயின் சதைப் பகுதியை ரசமாக்கி அதனுடன் ஒரு தேக்கரண்டி எலுமிச்சை பழச்சாற்றை சேர்த்து பருகி வர சீறுநீரக கோளாறுகளிலிருந்து குணம் பெறலாம். சிறுநீர் கட்டு, நீர் எரிச்சல், நீர் கட்டு, ஆகிய நோய்களுக்கு சிறந்தது.
* கை, கால் எரிச்சல் நீங்க சுரைக்காயின் சதைபகுதியை எரிச்சல் உள்ள இடத்தில் வைத்து கட்டினால் எரிச்சல் குறையும். உடலை குளிர்ச்சியாக வைத்து கொள்ள விரும்பினால் சுரைக்காயை பயன்படுத்தலாம்.
* வெப்பத்தினால் வரும் தலைவலி நீங்க சுரைக்காயின் சதைப்பகுதியை அரைத்து நெற்றியில் பற்று போட தலைவலி நீங்கும்.
* சுரைக்காயை மதிய உணவுடன் சேர்த்து அருந்தி வந்தால் பித்தம் சமநிலை அடையும். சுரைக்காய் நரம்புகளுக்கு புத்துணர்வைக் கொடுத்து, உடலை வலுப்படுத்தும்.
(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன்னர் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறுங்கள். ஜீ மீடியா இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.)
மேலும் படிக்க | Cardamom Benefits: ஏலக்காயை சாப்பிட்டால் இத்தனை நன்மைகளா
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR