கண்கள் வறண்டு போவதற்கான காரணம்: கண்கள் நமது உடலில் மிக முக்கியமான அங்கமாகும். கண்களில் அரிப்பு மற்றும் நீர் வடிதல், சொறிவதால் கண் வலி அல்லது வீக்கம் என இதுபோன்ற பிரச்சனைகளை நீங்கள் எதிர்கொண்டால், முதலில் உங்கள் வாழ்க்கை முறையில் கவனம் செலுத்த வேண்டும்.
கண்கள் தொடர்பான இந்த பிரச்சனைகளை நீங்கள் புறக்கணித்தால், அது கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும். பிற்காலத்தில் உங்களுக்கு பார்வைக் குறைபாடு ஏற்படும் சாத்தியக்கூறுகளும் உள்ளன.
வறண்ட கண்களுக்கான காரணம்
- போதுமான தூக்கமின்மை
- அழுக்கு கைகளால் கண்களைத் தொடுதல், அதனால் தொற்று அதிகரித்தல்
- கம்ப்யூட்டரில் அதிக நேரம் செலவழிப்பது, குறைவாக கண் சிமிட்டுவது
- அதிக டிவி பார்ப்பது, இரவில் தாமதமாக தூங்குவது
- குறைந்த அளவு தண்ணீர் குடிப்பது
- அதிக வெயிலில் இருப்பது
- புகை மற்றும் தூசிக்கு மத்தியில் மாசுபட்ட பகுதியில் வாழ்வது
- மோசமான உணவுப் பழக்கம்
- அதிகமான மன அழுத்தம்
- அதிக அழுகை
- நீண்ட நாட்களாக உடல்நலம் சரியில்லாமல் இருப்பது
- சில ஆங்கில மருந்துகளின் அதிகப்படியான பயன்பாடு
- ஹார்மோன் தொந்தரவுகள்
இவர்களுக்கு பொதுவாக அதிக பிரச்சனைகள் ஏற்படுகின்றன
கண் வறட்சி பிரச்சனை ஆண்களை விட பெண்களிடம் அதிகம் காணப்படுகிறது. இதற்கு காரணம் ஹார்மோன் சமநிலையின்மையாகும். அதிலும் குறிப்பாக மெனோபாஸ் காலத்தில் பெண்கள் இதுபோன்ற பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.
மேலும் படிக்க | பெண்களுக்கு வரும் மூட்டு வலி... எளிமையான வீட்டு வைத்தியம்
வறண்ட கண்களைத் தவிர்ப்பதற்கான உதவிக்குறிப்புகள்
- காற்றில் உள்ள மாசுபாட்டை உங்களால் சரி செய்ய முடியாது, ஆனால் நீங்கள் கண்டிப்பாக இந்த திசையில் முன்முயற்சி எடுக்கலாம். முடிந்தவரை மரங்கள் மற்றும் செடிகளை நடவும், புகைபிடிக்க வேண்டாம்.
- உட்புற தாவரங்களை வீட்டிலும் உங்கள் பணியிடத்திலும் வளர்க்கலாம். உதாரணமாக, ஸ்னேக் பிளாண்ட், ஸ்பைடர் பிளாண்ட், கற்றாழை போன்றவை. அவை வீட்டிலுள்ள மாசுபாட்டையும் மூடிய அலுவலகங்களில் உள்ள மாசுபாட்டையும் மிக விரைவாக உறிஞ்சுகின்றன.
- ஒவ்வொரு நாளும் குறைந்தது 7 மணிநேரம் தூங்குவதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
- நீங்கள் 8 மணி நேரம் தூங்குவது நல்லது ஆனால் இது முடியாவிட்டால் கண்டிப்பாக 7 மணி நேரமாவது தூங்க வேண்டும்.
- கணினியில் பணிபுரியும் போது விழிப்புடன் இருங்கள், கண் சிமிட்ட மறக்காதீர்கள்.
- கோடையில் அதிக குளிர்ச்சியுடன் கூடிய ஏசி மற்றும் குளிர்காலத்தில் அதிக வெப்பம் உள்ள அறை ஹீட்டர் ஆகியவற்றை அதிகம் பயன்படுத்த வேண்டாம். இவை இரண்டும் கண்களில் வறட்சியை அதிகரிக்கும்.
- வலுவான சூரிய ஒளியில் வெளியே செல்லும் முன் சன்கிளாஸ்களை அணியுங்கள். தொப்பி அணிவதும் நல்ல பழக்கம்.
- கோடையில் குளிர்ந்த பால், லஸ்ஸி, தயிர், மோர் ஆகியவற்றை தினமும் குடியுங்கள். அவை சருமத்தில் ஈரப்பதத்தைக் கொண்டு வருவதோடு கண்களின் வறட்சியைத் தடுக்கவும் உதவுகின்றன.
- இந்த முறைகளை பின்பற்றியும் உங்களுக்கு நிவாரணம் கிடைக்கவில்லை என்றால், பிரச்சனைக்கான காரணம் புரியவில்லை என்றால், கண்டிப்பாக மருத்துவரிடம் காட்டுங்கள். காலப்போக்கில் தானாகவே சரியாகிவிடும் என்ற எண்ணம் உங்கள் வலியை அதிகரிக்கும்.
(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன்னர் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறுங்கள். ஜீ மீடியா இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.)
மேலும் படிக்க | Fruits for Beauty: பருக்கள் எல்லாம் எனக்கு ஜுஜுபி: சவால் விடும் நாகப்பழம்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR