Cardamom Benefits: ஏலக்காயை சாப்பிட்டால் இத்தனை நன்மைகளா

வாய் புத்துணர்ச்சி, வாசனை மற்றும் சுவைக்கு பயன்படுத்தப்படும் ஏலக்காய் ஆரோக்கியத்திற்கு பல நன்மைகளை வழங்க உதவுகிறது.

Written by - Vijaya Lakshmi | Last Updated : May 23, 2022, 10:03 AM IST
  • செரிமானத்தை மேம்படுத்தும்
  • நோய்த்தொற்றிலிருந்து நிவாரணம் அளிக்கும்
  • லேசான வாந்தி மற்றும் குமட்டல் சரிசெய்ய உதவும்
Cardamom Benefits: ஏலக்காயை சாப்பிட்டால் இத்தனை நன்மைகளா title=

ஏலக்காய் நம் வாய் புத்துணர்ச்சியாகவும், பல்வேறு உணவுகளில் வாசனைக்காகவும் பயன்படுத்தப்படுகிறது. எனவே உணவின் சுவையை அதிகரிக்க ஏலக்காய் ஒரு மசாலாப் பொருளாக அதிகம் பயன்படுத்தப்படுகிறது. அதில் நன்மைகள் இருக்கும் என்பதை அறிந்திருந்தாலும் அதன் வாசனையே அந்த உணவின் நுகர்வை அதிகரிக்கிறது. ஏலக்காயும் இஞ்சி குடும்பத்தைச் சார்ந்தது என்று சொல்லப்படுகிறது. 

இந்த நிலையில் ஏலக்காயை வெறும் நறுமணம்கூட்டும் பொருள் என்று மட்டும் நாம் வரையறுத்துவிட முடியாது. அதனுள் நிறைய மருத்துவக் குணங்களும் புதைந்துகிடக்கின்றன. ஒரு சிறிய ஏலக்காய் உங்களை பல நோய்களிலிருந்து காப்பாற்ற உதவுகிறது என்பது உங்களுக்கு தெரியுமா? ஆம், இரத்த அழுத்தத்தை சீராக வைத்து மாரடைப்பு அபாயத்தைக் குறைப்பதிலும் ஏலக்காய் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. எனவே ஏலக்காயின் மற்ற நன்மைகள் என்னவென்று பார்ப்போம்.

மேலும் படிக்க | வாழைப்பழத்தின் உதவியுடன் முடிக்கு கெரட்டின் கிரீம் தயாரிக்கலாம்

கேவிட்டி மற்றும் வாய் துர்நாற்றம் போக்க உதவும்
ஏலக்காய் பல நூற்றாண்டுகளாக வாய் துர்நாற்றத்தை போக்கவும் பல் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. நன்றாக விருந்து சாப்பாட்டை ரசித்து ருசித்து சாப்பிட்ட பிறகு வாயில் ஒரு ஏலக்காயை போட்டு மென்று சாப்பிட்டால், அவை வலுவான பூண்டு அல்லது வெங்காய வாசனையை கூட அகற்ற உதவுகின்றன. ஏனென்றால் ஏலாக்காயில் உள்ள பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் வாய் துர்நாற்றத்தை அகற்ற உதவுகின்றன.

இரத்த அழுத்தத்தை குறைக்கிறது
ஏலக்காய் இரத்த அழுத்தத்தைக் குறைப்பதற்கும் உதவியாக இருக்கும். ஏலக்காயில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட் மற்றும் டையூரிடிக் பண்புகள் இரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவுகிறது.

செரிமானத்தை மேம்படுத்தும்
ஏலக்காய் விதைகளில் அதிக அளவிலான நார்ச்சத்து உள்ளது, அது செரிமான பிரச்சனைகளை தீர்க்க உதவுகிறது. ஏலக்காய் விதைகளை தொடர்ந்து உட்கொள்வதன் மூலமாக மலச்சிக்கல், அமிலத்தன்மை, வாயு, வயிறு வீக்கம், வயிறு உப்புசம் போன்ற பிரச்சனைகளை தடுக்கலாம். 

நோய்த்தொற்றிலிருந்து நிவாரணம் அளிக்கும்
பருவ மாற்றத்தால் ஏற்படும் பல்வேறு வகையான பூஞ்சை தொற்று, வயிறு தொடர்பான பிரச்சனைகளை சமாளிக்க ஏலக்காயின் உதவியையும் எடுத்துக் கொள்ளலாம். ஏனெனில் ஏலக்காயில் உள்ள அத்தியாவசிய எண்ணெய்கள் மற்றும் சாறுகள் பல்வேறு வகையான பாக்டீரியாக்களுக்கு எதிராக போராடுவதில் பயனுள்ளதாக இருக்கும்.

லேசான வாந்தி மற்றும் குமட்டல் சரிசெய்ய உதவும்
லேசான வாந்தி மற்றும் குமட்டல் பிரச்சினையை சமாளிக்க ஏலக்காய் உதவுகிறது. எங்காவது பயணம் செய்யும்போது இந்த பிரச்சனைகளிலிருந்து உங்களை பாதுகாத்துக்கொள்ள ஏலக்காயை எப்போதும் உங்களுடன் வைத்திருங்கள். குமட்டல் அல்லது வாந்தி சங்கடம் உங்களுக்கு எற்பட்டால், வாயில் ஒன்று அல்லது இரண்டு ஏலக்காயை போட்டு மெதுவாக மெல்ல வேண்டும். அவ்வாறு செய்வது நிம்மதியைத் தரும். 

ஒரு நாளைக்கு எவ்வளவு ஏலக்காய் சாப்பிட வேண்டும்?
ஏலக்காயை ஒரு நாளைக்கு 2-3 முறை உட்கொள்வது நன்மை பயக்கும்.

ஏலக்காய் சாப்பிட சரியான நேரம்
இரவு தூங்கும் முன் வெதுவெதுப்பான நீரில் 2 ஏலக்காயை சாப்பிட்டு வந்தால் நல்ல தூக்கம் வரும்.

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. அதை ஏற்றுக்கொள்வதற்கு முன், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறுங்கள். ஜீ நியூஸ் இதற்கு பொறுப்பேற்காது.)

மேலும் படிக்க | யார் யாருக்கு கொரோனா பரிசோதனை செய்ய வேண்டும்? வழிகாட்டு நெறிமுறை வெளியீடு

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR 

 

Trending News