Health news: முட்டை உங்கள் நண்பனா எதிரியா? அது உங்கள் கையில் உள்ளது!!
நாம் முட்டைகளை குறைந்த அளவில் உட்கொண்டால் அது நம் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. முட்டைகளை உட்கொள்வதால் ஏற்படும் நன்மைகள் மற்றும் தீமைகள் பற்றி இங்கு காணலாம்.
முட்டைகளை உட்கொள்வது ஆரோக்கியத்திற்கு நல்லது என்று கருதப்படுகிறது. இதில் பல ஊட்டச்சத்துக்கள் உள்ளன. முட்டைகள் புரதத்தின் நல்ல மூலமாகக் கருதப்படுகின்றன.
வைட்டமின்-பி, வைட்டமின் பி 12, பயோட்டின், ரைபோஃப்ளேவின், தியாமின் மற்றும் செலினியம் ஆகியவை முட்டையில் உள்ளன. இந்த வைட்டமின்கள் அனைத்தும் நல்ல முடி, தோல் மற்றும் நகங்களுக்கு அவசியம். நாம் முட்டைகளை குறைந்த அளவில் உட்கொண்டால் அது நம் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. முட்டைகளை உட்கொள்வதால் ஏற்படும் நன்மைகள் மற்றும் தீமைகள் பற்றி இங்கு காணலாம்.
முட்டை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்
எடை குறைக்க உதவும்
முட்டை (Eggs) சாப்பிடுவதால் எடை இழப்பில் உங்களுக்கு அதிக உதவி கிடைக்கும். முட்டைகளில் அதிக அளவு புரதம் உள்ளது. ஆனால் கலோரிகள் குறைவாக இருப்பதால் அவை உங்கள் எடையைக் கட்டுப்படுத்த உதவும். முட்டையை சாப்பிடுவதன் மூலம் அதிகப்படியான உணவை நீங்கள் தவிர்க்கலாம். ஏனெனில் முட்டைகளை சாப்பிடுவதால், உங்கள் பசி சரியான அளவிற்கு மட்டுப்படுத்தப்படும்.
கண்கள்
தினசரி உணவில் ஒரு முட்டையை சேர்ப்பதன் மூலம் ஆரோக்கியமான கண் பார்வைக்கான அனைத்து தேவைகளும் பூர்த்தியாகின்றன. தினமும் ஒரு முட்டையை சாப்பிடுவது கண்புரை அபாயத்தையும் குறைக்கும். முட்டைகளை சரியான அளவில் சாப்பிடுவது ஆரோக்கியத்திற்கு நல்லது.
உடல் வலிமை
முட்டைகளை சாப்பிடுவதன் மூலம், உங்கள் உடல் வலிமை அதிகரிக்கும். இதற்கு நீங்கள் தினமும் ஒரு முட்டையை உட்கொண்டால் போதும். முட்டைகளை சாப்பிடுவது உங்கள் உடலுக்கு அத்தியாவசியமான அமினோ அமிலங்களை அளிக்கிறது. இவை உடலின் வலிமையை அதிகரிக்கின்றன. முட்டையால் நோய் எதிர்ப்பு சக்தியும் (Immunity) அதிகரிக்கின்றது.
ALSO READ: Health News: தேன் ஏன்? தித்திக்கும் தேனால் கிடைக்கும் திகட்டாத வாழ்க்கை!!
கொழுப்பு
நீங்கள் உடல் கொழுப்பைக் கட்டுக்குள் வைத்திருக்க விரும்பினால், தினமும் முட்டைகளை உட்கொள்ளுங்கள். நல்ல கொழுப்பை அதிகரிக்க முட்டை உங்களுக்கு உதவும்.
முட்டை சாப்பிடுவதால் ஏற்படும் தீமைகள்
வயிறு
முட்டை அல்லது சில சமயம் சமைக்கப்பாத முட்டைகளை அதிகமாக உட்கொள்வதால், வாந்தி, வயிற்று பிரச்சினைகள் மற்றும் உடலின் சில பாகங்களில் வீக்கம் மற்றும் அசௌகரியங்கள் ஏற்படும்.
நீரிழிவு நோய்
நீரிழிவு நோயாளிகள் (Diabetes) முட்டைகளை அதிகம் உட்கொள்ளக்கூடாது. நீரிழிவு நோயாளிகள் மறந்தும் கூட முட்டையின் மஞ்சள் பகுதியை சாப்பிடக்கூடாது.
இதயம்
அதிக அளவில் முட்டைகளை உட்கொள்வது இதய பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும். இதய நோயுடன் தொடர்புடையவர்கள் முட்டையின் மஞ்சள் பகுதியை சாப்பிடக்கூடாது. இது இதயம் தொடர்பான பிரச்சினைகளை அதிகரிக்கும்.
ALSO READ: அஸ்வகந்தா சிலருக்கு விஷமாகலாம்.. எச்சரிக்கை தேவை..!!
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR