Health News: உடல் எடை குறைய Black Coffee-யா, Green Tea-யா? எது சிறந்தது?
உடல் எடையை குறைக்க மக்கள் பொதுவாக கிரீன் டீ மற்றும் பிளாக் காபி அருந்துவார்கள். இவை இரண்டும் சிறந்த பானங்கள்.
புதுடில்லி: உடல் எடையை குறைக்க மக்கள் பொதுவாக கிரீன் டீ (Green Tea) மற்றும் பிளாக் காபி (Black Coffee) அருந்துவார்கள். இவை இரண்டும் சிறந்த பானங்கள். இவை பால் விட்டு குடிக்கும் தேநீர் மற்றும் காபிக்கு ஆரோக்கியமான மாற்றாகும். அவற்றில் குறைவான கலோரிகளும் ஆரோக்கியமான ஊட்டச்சத்துக்களும் உள்ளன. கிரீன் டீ மற்றும் பிளாக் காபி, இரண்டில் எந்த பானம் உடல் எடையை குறைக்க அதிக பயனுள்ளதாக இருக்கும் என்பதை இப்போது தெரிந்து கொள்ளலாம்.
க்ரீன் டீ –யா பிளாக் காபி-யா?
உடல் எடையை குறைக்க (Weight Loss) முயற்சி செய்யும் ஒருவருக்கு, இந்த இரண்டு பானங்களுமே பயனுள்ளதாக இருக்கும் என்பதை நிரூபிக்கும் ஆதாரங்கள் உள்ளன. ஆனால் முழு ஆரோக்கியம் என்ற பேச்சு வரும்போது, பிளாக் காபியை விட கிரீன் டீ அதிக நன்மை பயக்கும். இது ஆண்டிஆக்ஸிடண்டுகளால் (Antioxidants) நிறைந்துள்ளது. பல ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டுள்ளது. ஆனால், இதை அதிகமாக உட்கொள்ளக்கூடாது.
இது தவிர, ஆரோக்கியமான உணவை உட்கொள்வதும், உடல் எடையை குறைக்க தவறாமல் உடற்பயிற்சி செய்வதும் அவசியமாகும்.
கிரீன் டீ (Green Tea) அல்லது பிளாக் காபியை குடித்தால் மட்டும் நீங்கள் எடையை குறைத்து விட முடியாது. உடல் எடையை குறைக்க உங்கள் வாழ்க்கைமுறையில் தேவையான மாற்றங்கள் செய்யப்பட வேண்டும்.
ALSO READ: நட்சத்திர சோம்பின் ஆரோக்கிய நன்மைகள்: சமையலறையில் உள்ள ரகசிய பொருள்!
அதிக எடை இழப்புக்கு கிரீன் டீ
கிரீன் டீயில் (Green Tea) காஃபின் மற்றும் கேடசின் எனப்படும் ஒரு வகை ஃபிளாவனாய்டு (Flavonoid) உள்ளது. கேடசின் உண்மையில் ஒரு வகை Antioxidant ஆகும். கிரீன் டீ பாதுகாப்பான பானமாகக் கருதப்படுகிறது. ஆனால் தினமும் 2 முதல் 3 கப்பைத் தாண்டக்கூடாது. கிரீன் டீ பாதுகாப்பானது மற்றும் ஆரோக்கியமானது என்பது உண்மைதான், ஆனால் அதில் ஓரளவு காஃபின் உள்ளது. ஒரு நாளில் காஃபின் அதிகமாக உட்கொள்வது தூக்க பிரச்சினைகளை ஏற்படுத்தும் மற்றும் இதய பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தீங்கு விளைவிக்கும்.
அதிக எடை இழப்புக்கு பிளாக் காபி
பெரும்பாலான மக்கள் விரும்பும் மற்றொரு பிரபலமான பானம் காபி. குறிப்பாக மக்கள் எடை குறைக்க முயற்சிக்கும்போது, க்ரீன் டீயைப் போலவே, பிளாக் காபியும் (Black Coffee) சில அற்புதமான ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டுள்ளது. இது விழிப்புணர்வை அதிகரிப்பதோடு டைப் 2 நீரிழிவு நோயின் (Type 2 Diabetes) அபாயத்தைக் குறைக்கிறது.
பிளாக் காபி (Black Coffee) பாரம்பரிய காபியின் ஆரோக்கியமான பதிப்பாகும். ஏனெனில் இது கிரீம் மற்றும் சர்க்கரை இல்லாதது. இது பொதுவாக உடல் எடையை குறைக்க முயற்சிப்பவர்களின் தேர்வாக இருக்கிறது. இதையும் அதிகப்படியாக உட்கொண்டால் அது சில எதிர்மறையான உடல்நல பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
ALSO READ: Sugar Alternatives: சர்க்கரைக்கு 5 ஆரோக்கியமான மாற்று வழிகள் உங்களுக்காக...
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR