உப்பு சேர்த்த நீரில் குளிப்பதால் ஏற்படும் நன்மைகள்: பருவத்திற்கு ஏற்ப, பெரும்பாலான மக்கள் சூடான அல்லது குளிர்ந்த நீரில் குளிக்கிறார்கள். ஆனால் தண்ணீரில் ஒரு பொருளை சேர்த்து குளிப்பது பல பிரச்சனைகளை நீக்குகிறது என்பது உங்களுக்குத் தெரியுமா? 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அந்த விசேஷ பொருள் உப்பு!! நீரில் உப்பு போட்டு குளிப்பது மூட்டு வலியைப் போக்கவும், மன அழுத்தத்தைக் குறைக்கவும் உதவுகிறது. இதைத் தவிர, உப்பு நீரில் குளிப்பதால் வேறு என்ன நன்மைகள் கிடைக்கும் என்பதை இந்த பதிவில் காணலாம். 


மூட்டு வலி குறைவாக இருக்கும்


உப்பு நீர் மூட்டு வலியை குறைக்கிறது. குளிக்கும்போது தண்ணீரில் ஒரு சிட்டிகை உப்பு சேர்த்துக் குளித்தால், எலும்புகளில் ஏற்படும் சிறு வலிகள் போய்விடும். இது தவிர, பாதங்களில் வலி அதிகமாக இருந்தால், வெதுவெதுப்பான உப்பு நீரில் கால்களைக் கழுவுவது நிச்சயம் பலன் தரும். பாதங்களை உப்பு போட்ட வெதுவெதுப்பான நீரில் சிறிது நேரம் வைத்திருப்பதும் நன்மை தரும்.


மேலும் படிக்க | எச்சரிக்கை: இந்த விஷயங்களால் உங்கள் சிறுநீரகம் பாதிக்கப்படலாம் 


தொற்றுநோய்களிலிருந்து பாதுகாப்பு 


எந்தவொரு தொற்றுநோயையும் அகற்ற உப்பு நீர் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். உப்பில் உள்ள தாதுக்கள் பல வகையான தொற்றுநோய்களிலிருந்தும் பாதுகாக்கின்றன. உப்பு நீரில் குளிப்பதால் உடலின் அனைத்து துளைகளும் திறக்கப்பட்டு உடலில் தொற்று ஏற்படும் அபாயம் குறைகிறது.


முகப்பருவிலிருந்து நிவாரணம் 


முகப்பருவைப் போக்க உப்பு நீர் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். உப்பு நீரில் குளித்தால் சருமத்துளைகள் திறக்கப்பட்டு, அதன் பிறகு உடலில் உள்ள அழுக்குகள் எளிதில் வெளியேறும். இதன் மூலம், உடலில் உள்ள நச்சுத்தன்மையின் காரணமாக, முகத்தில் எற்படும் தழும்புகள் மற்றும் முகப்பருக்கள் குறைகின்றன. இதனுடன், இந்த நீர் சருமத்தை ஈரப்பதமாக்குவதற்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.


மன அழுத்தம் குறையும்


வாழ்க்கையின் பிரச்சனைகள் மற்றும் இறுக்கங்கள் காரணமாக மன அழுத்தத்திற்கு ஆளானால், நீங்கள் கண்டிப்பாக உப்பு போட்ட நீரில் குளிக்க வேண்டும். இதன் மூலம் நீங்கள் நிச்சயம் பலன் அடைவீர்கள். உப்பு போட்ட நீரில் உள்ள தாதுக்கள் உடலில் உறிஞ்சப்படுகின்றன. சோடியமும் மூளையில் தாக்கத்தை ஏற்படுத்துவதாக நம்பப்படுகிறது. இது தவிர, உடலில் உள்ள நச்சு நீக்கப்படும்போது உடலின் மன அழுத்தமும் வெளியிடப்படுகிறது. இது மூளையில் நேரடி விளைவை ஏற்படுத்தி, மன அழுத்தம் நீங்கி, புத்துணர்ச்சி கிடைக்கிறது. 


(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன்னர் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறவும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)


மேலும் படிக்க | Weight loss By Walnuts: உடல் எடையை குறைக்க வால்நட்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR