எப்போதும் சோர்வாக உணர்கிறீர்களா; சோர்வை விரட்ட சில டிப்ஸ்..!!
உணவு பழக்கங்கள் மற்றும் பானங்கள் முதல் தவறான வாழ்க்கை முறை வரை, உங்கள் சோர்வுக்கு பல முக்கிய காரணங்கள் உள்ளன.
சிலர் எப்போதும் சோர்வாக இருப்பார்கள். இதற்குப் பின்னால் பல காரணங்கள் உள்ளன. உங்கள் உணவு பழக்கங்கள் மற்றும் பானங்கள் முதல் தவறான வாழ்க்கை முறை வரை, உங்கள் சோர்வுக்கு பல முக்கிய காரணங்கள் உள்ளன. இங்கிலாந்தில் ஐந்தில் ஒருவர் எப்போதும் சோர்வாக உணர்கிறார். இதில் பெரும்பாலும் பெண்களே அதிகம் பாதிக்கப்படுகின்றனர். எனவே நீங்கள் ஏன் எப்போதும் சோர்வாக உணர்கிறீர்கள் என்பதையும் அதைத் தடுக்க நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்பதை அறிந்து கொள்ளலாம்.
தவறான மதிய உணவு
எப்பொழுதும் சோர்வாக இருப்பதற்கான முக்கிய காரணங்களில் ஒன்று, தவறான மதிய உணவு. நீங்கள் ஊட்டச்சத்து நிறைந்த உணவை உண்ணவில்லை என்றால், பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். பெரும்பாலான மக்கள் ஆற்றல் தேவை என்பதற்காக அதிக சர்க்கரை பொருட்களை சாப்பிடுகிறார்கள். இது தவிர, பலர் பிஸியாக இருப்பதால் காலை உணவையும் சாப்பிடுவதில்லை, அத்தகைய சூழ்நிலையில் ஊட்டசத்து நிறைந்த மதிய உணவு இல்லை என்றால்,ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல.
மேலும் படிக்க | Health Alert! மறதி, குழப்பம் அதிகமாக இருக்கிறதா; Vitamin B குறைபாடு இருக்கலாம்!
உடற்பயிற்சி செய்யாமல் இருத்தல்
டிவி பார்ப்பதால் பெரும்பாலானோர் உடற்பயிற்சி செய்வதில்லை. இன்றைய வாழ்க்கைமுறையில் மொபைல்-டிவியால் மக்களின் உடல் உழைப்பு கிட்டதட்ட இல்லாமல் போய் விட்டது என்பது அனைவரும் அறிந்ததே. நீங்கள் சுறுசுறுப்பாக இல்லாமல் சோர்வாக உணர இதுவே காரணம்.
காஃபின் அதிகமாக உட்கொள்வது
அதிகப்படியான காஃபின் உட்கொள்வதும் சோர்வாக இருக்கும். இப்போதெல்லாம், பெரும்பாலானோரின் சோர்வாக இருக்கும்போது காபி அல்லது டீ குடிப்பது என்பது பழக்கமாகி விட்டது. இது ஆரோக்கியத்திற்கு கேடு விளைவிக்கும்.
(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொதுவான தகவலுக்காக மட்டுமே. இது எந்த வகையிலும் கோரிக்கையாகவோ அல்லது சிகிச்சைக்கான மாற்றாகவோ இருக்க முடியாது. மேலும் விவரங்களுக்கு எப்போதும் உங்கள் மருத்துவரை அணுகவும்.)
மேலும் படிக்க | Kidney Health: சிறுநீரகத்தை டேமேஜ் செய்யும் இந்த '5' உணவுகளை தவிர்க்கலாமே..!!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR