Children Health Tips: ஒவ்வொரு பெற்றோரும் குழந்தைகளின் ஆரோக்கியத்தில் அக்கறை கொண்டுள்ளனர். எனவே அவர்கள் தங்கள் ஆண் மற்றும் பெண் குழந்தைகளுக்கு ஆரோக்கியமான உணவுகளை சாப்பிட அறிவுறுத்துகிறார்கள். சாக்லேட், மிட்டாய் மற்றும் இனிப்புகள் போன்றவற்றில் இருந்து அவர்கள் தள்ளி இருக்கச்செய்ய வேண்டும் என முயற்சி செய்கிறார்கள். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஆனால் ஒவ்வொரு குழந்தை மருத்துவரும் குழந்தைகளுக்கு உணவளிக்க அறிவுறுத்தும் ஒரு இனிப்பான உணவு உள்ளது. இது அவர்களின் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும் மற்றும் பல நோய்களில் இருந்து அவர்களைப் பாதுகாக்கிறது. அது வேறு ஒன்றுமில்லை, தேன் தான் இந்த அத்தனை நன்மைகளையும் தரும் இனிப்பான உணவாகும். அது நம் குழந்தைகளுக்கு எவ்வாறு பயனுள்ளதாக இருக்கும் என்பதை இங்கே காணலாம். 


ஏன் குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டும்?


நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்


உங்கள் குழந்தைகளுக்கு தினமும் ஒன்று முதல் இரண்டு ஸ்பூன் தேன் கொடுத்தால், அவர்களின் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து, நோய்த்தொற்று ஏற்படும் அபாயம் குறையும். அத்தகைய சூழ்நிலையில், தொற்று நோய்களைத் தவிர்ப்பது எளிது.


மேலும் படிக்க | ஏழையின் முந்திரி வேர்க்கடலையை இப்படி சாப்பிட்டா சட்டுன்னு வெயிட் குறையும்


செரிமானம் சரியாகும்


குழந்தைகள் பெரும்பாலும் காரமான உணவை வெளியில் சாப்பிட விரும்புகிறார்கள், ஆனால் இதன் காரணமாக அவர்களுக்கு சரியான ஊட்டச்சத்து கிடைக்காது, அதுமட்டுமின்றி சில நேரங்களில் வயிறு தொடர்பான பிரச்சினைகள் எழுகின்றன. அத்தகைய சூழ்நிலையில், தேன் அவர்களுக்கு ஒரு மருந்தாக அமையும். தேனில் உள்ள பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் பூஞ்சை எதிர்ப்பு பண்புகள் மலச்சிக்கல் பிரச்சனையை நீக்கும்.


இதய ஆரோக்கியத்திற்கு நல்லது


குழந்தைகளுக்கு இதய நோய்கள் ஏற்படுவது குறைவாக இருந்தாலும், இன்னும் இதுபோன்ற வழக்குகள் காணப்படுகின்றன. எனவே ஆரோக்கியமான இதயத்திற்கு, தேன் ஊட்டுவதை பழக்கப்படுத்துங்கள். இதனால் எதிர்காலத்தில் கரோனரி நோய் அபாயம் குறையும்.


குளிர்காலத்தை எதிர்கொள்ள...


குளர்காலத்தில் குழந்தைகள் அடிக்கடி ஸ்வெட்டர் அல்லது போர்வைகளை தூக்கி எறிவார்கள், இதனால் குளிர் மற்றும் காய்ச்சல், சளி, இருமல் ஆபத்து உள்ளது, அத்தகைய சூழ்நிலையில், அவர்கள் தொடர்ந்து தேனை நக்கினால், இருமல் மற்றும் சளி தாக்குதல் குறையும்.


சந்தையில் பல வகையில் தேன்கள் கிடைத்தாலும், கிராமப்புறங்களில் கிடைக்கும் தேன்களையும், தேனீ பண்ணைகளில் இருந்து நேரடியாக பெறப்படும் தேன்களையும் வாங்கி உங்கள் குழந்தைகளுக்கு கொடுப்பது கூடுதல் நல்லது. ஏனென்றால், சில பேக்கேஜ் செய்யப்பட்ட தேன்களில் செயற்கை சுவையேற்றிகள் சேர்க்கப்பட்டிருக்கலாம். இது உங்கள் குழந்தைகளின் உடல் நலனுக்கு தீங்கு விவைவிக்கும். 


(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. அதை ஏற்றுக்கொள்ளும் முன் மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE NEWS அதை உறுதிப்படுத்தவில்லை.)


மேலும் படிக்க | இதை சாப்பிட்ட விந்தணு கெட்டியாகும்: அப்புறம் இல்லறத்தில் இனிமை கூடும்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ