ஆரோக்கிய பயன்கள்: சமீப காலங்களில் நம் உடலின் மீதான அக்கறை அதிகரித்து வருகிறது. அதற்கு காரணம் உலகளாவிய தொற்றுநோயால், நம்மில் பெரும்பாலானோருக்கு பிட்டாகவும் ஆரோக்கியமாகவும் இருக்க வேண்டும் என முன்னுரிமை அளித்து வருகிறார்கள். நமது உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பது முதல் உடற்பயிற்சி செய்வது என நம் வாழ்க்கையின் ஒரு பகுதியாக மாறிவிட்டது. ஆனால் அதே நேரத்தில் பல முயற்சிக்குப் பிறகும், சில நேரங்களில் நமது தொப்பையை குறைக்க முடியாது. கணினியின் முன் உட்கார்ந்துக் கொண்டு பல மணி நேரம் தொடர்ந்து வேலை பார்ப்பதால், நமது உடல் பருமன் அதிகரித்து தொப்பை உருவாகிறது. நமது உடலின் ஆரோக்கியத்தை மோசமாக்கும் எந்த ஒரு செயலையும் அனுமதிக்க முடியாது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அதிக கொழுப்பினாலும் எடையினாலும் உடலில் ரத்த அழுத்தம், மூட்டு வியாதிகள் மற்றும் சர்க்கரை நோய் ஆகியவை வர அதிக  வாய்ப்பிருக்கிறது. வேகமாக நடக்கவும் முடியாது. உடலில் கொழுப்பு கூடினால் பல சிரமங்களுக்கு நாம் ஆளாகிறோம். வாருங்கள், வீட்டில் அன்றாடும் பயன்படுத்தும் பொருட்களை கொண்டு உடல் எடையை (Body Weight Loss) எளிதாக கட்டுக்குள் கொண்டுவர முடியம். தொப்பை கொழுப்பை எவ்வாறு குறைப்பது என்பதற்கான வழிகளை பார்ப்போம். 


உடல் எடையை குறைக்க ஆரோக்கிய குறிப்புகள் (Weight Loss Health Tips) 


தினமும் காலையில் ஒரு டம்ளர் வெது வெதுப்பான தண்ணீரில் எலுமிச்சை சாறு சிறிதளவு தேன் கலந்து குடித்து வரவும்.


உருளைக்கிழங்கு அரிசிமாவு போன்ற மாவுச் சத்துப் பொருட்களை குறைக்கவும், அதற்கு பதிலாக கோதுமை மற்றும் கோதுமை மாவு பொருட்களை சேர்த்துக் கொள்ளலாம்.


தினமும் காலையில் தக்காளி மற்றும் கருவேப்பிலைகளை சாப்பிட்டு வந்தால் உடல் எடை கண்டிப்பாக குறையும்.


ALSO READ |  Beauty Tips: ஒரே வாரத்தில் பொலிவு பன்மடங்கு அதிகரிக்க 5 சூப்பர் டிப்ஸ்


அதிக கலோரி அடங்கிய வெண்ணெய், ஐஸ்கிரீம், சாக்லேட் மற்றும் இனிப்பு போன்ற பொருட்களை உட்கொள்வதை குறைத்துக்கொள்ளவும்.


வைட்டமின் ஏ, சி மற்றும் அமினோ அமிலம் அதிகம் இருக்கும் பழத்தை சாப்பிட்டால் வயிற்றில் இருக்கும் கொழுப்பை கரைத்து உடல் எடையை குறைக்க உதவும்.


குறிப்பாக உணவு உண்பதற்கு முன் தண்ணீர் குடிக்கவும். நீங்கள் குடிக்கும் குடிநீர் எடை இழப்புக்கு உதவும் என்று பெரும்பாலும் கூறப்படுகிறது.


தானியங்களுடன் சேர்ந்து காலை உணவை முட்டையுடன் உண்பதால் அடுத்த 36 மணிநேரங்களுக்கு குறைவான கலோரிகளை சாப்பிட உதவுவதோடு அதிக எடை மற்றும் உடல் கொழுப்பையும் இழக்க உதவும் என்று ஆய்வுகள் காட்டுகின்றன.


உங்களுக்கு பசி எடுக்கும் போது ஆரோக்கியமற்ற உணவை உண்பதை விட ஆரோக்கியமான உணவை சாப்பிட்டால், இதனால் உங்கள் உடல் எடையை குறைக்க உதவும்.


ALSO READ |  உங்கள் அழகை கெடுக்கும் மருக்களை அகற்ற மிக எளிய வீட்டு வைத்தியம்..!!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR