கோடைக்காலத்தின் வெப்பத்தினால் திணறிக் கொண்டிருக்கும் வேளையில், உடல் சூட்டை குறைப்பது எப்படி என்பது தெரிந்துக் கொள்வது அவசியமான ஒன்று.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கோடை காலத்திலும் சிலர் வெப்பத்தைக் கொடுக்கும் மூலிகைகளை பயன்படுத்துவார்கள். ஆனால் அவற்றின் வழக்கமான பயன்பாடு உடலுக்கு சிலவிதமான தீங்குகளை ஏற்படுத்தும். 


கோடைகால பிரச்சனைகளை தவிர்க்கவும், வயிற்று பிரச்சனைகளுக்கு தீர்வு சொல்லவும் ஆயுர்வேதம், ஆரோக்கியமான மூலிகைகளை (Health Tips) பரிந்துரைக்கிறது. ஆனால் அதற்கு முன்னதாக கோடையில் தவிர்க்க வேண்டிய மூலிகைகள் எவை என்பதை தெரிந்துக் கொள்வோம்.


பொதுவாகவே மூலிகைகள் அனைத்துமே வயிற்றில் சில ஏற்றத்தாழ்வுகளை ஏற்படுத்தும். இவை வாதம் பித்தம் கபம் என உடலின் நிலைகளில் சீரற்ற தன்மைகளை சரி செய்வதுபோலவே, அவற்றின் தேவையில்லாத நுகர்வு வயிற்றுப் பிரச்சனைகளை மோசமாக்கும் என்பதையும் தெரிந்துக் கொள்ள வேண்டும்.


மேலும் படிக்க | கோடைக்காலத்தில் உடல் எடையை குறைக்க சூப்பர் வழி


எனவே வயிற்றில் உஷ்ணத்தை உண்டாக்கக் கூடிய மசாலாக்கள் மற்றும் மூலிகைகளை தவிர்ப்பது ஆரோக்கியத்தை பாதுகாக்கும்.  


கோடையில் துளசி இலைகளை உட்கொள்வது தீங்கு விளைவிக்கும்  
துளசி இலைகளின் நன்மைகள் பற்றி அனைவருக்கும் நன்றாகவேத் தெரியும். ஆனால் இது ஒரு ஆன்டிவைரல், ஆன்டிஆக்ஸிடன்ட் மற்றும் ஆன்டிபாக்டீரியல் மூலிகை.



இதை தொடர்ந்து வழக்கமாக பயன்படுத்தி வந்தால், வயிற்றின் வெப்பத்தை அதிகரிக்கும். 
வயிற்று சூடு அதிகரித்தால் அது வயிற்றின் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும். இதனால் வயிற்று வலி அதிகரிப்பதோடு, அசிடிடி பிரச்சனையும் அதிகரிக்கும்.  


பிரியாணி இலை அல்லது பிரிஞ்சி இலை


கோடையில் பிரிஞ்சி இலைகளின் நுகர்வு குறைக்க வேண்டும். ஏனென்றால், இது ஒரு சூடான மசாலா ஆகும், உடலின் வெப்பநிலையை அதிகரிக்கும் தன்மை கொண்டது. 


இது உடலின் உஷ்ணத்தை அதிகரிக்கும் அதே வேளையில், அல்சர் போன்ற பிரச்சனைகளையும் அதிகரிக்கச் செய்யும் பிரிஞ்சி இலை என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். வயிற்று வலி, வாய் புண்கள் மற்றும் அசிடிடி பிரச்சனையை அதிகரிக்கும்.


மேலும் படிக்க | பெண்களின் அந்தரங்க உறுப்பை பராமரிக்கும் ஆப்பிள் சிடர் வினிகர்


ஓரிகானோ பயன்படுத்துவதை தவிர்க்கவும்


குளிர்காலத்தில் ஓரிகானோ சாப்பிடுவது நன்மை பயக்கும் ஆனால் கோடையில் அதை உட்கொள்வது தீங்கு விளைவிக்கும். இந்த இத்தாலிய மூலிகை, குளிர்காலத்தில் உடலை சூடாக வைத்திருக்க ஒரு துணைப் பொருளாக செயல்படுகிறது. 


ஆனால் கோடையில் இதனை உட்கொள்வதால் வயிறு மற்றும் குடலின் வெப்பம் அதிகரித்து வாயில் புண்கள் உண்டாகலாம். மேலும், சிறுநீரக கற்கள் பிரச்சனை உள்ளவர்களுக்கு, கோடையில் இதை சாப்பிடுவது தீங்கு விளைவிக்கும்.


கோடையில் சீந்திலை தவிர்க்கவும்


கோடை காலத்தில் சீந்தில் மூலிகையைத் தவிர்க்கவும். பொதுவாக, இது ஒரு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் என்றாலும், கோடையில் இதை உட்கொள்வது உடலின் pH சமநிலையை மாறுபடுத்தும். 
இரத்த சர்க்கரையை குறைக்கும் இந்த மூலிகை சில நேரங்களில் வயிறு தொடர்பான தீவிர பிரச்சனைகளையும் ஏற்படுத்தும்.


மேலும் படிக்க | அமிர்தவல்லி கல்லீரலை சேதப்படுத்துமா? ஆயுஷ் அமைச்சகத்தின் விளக்கம்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR