விளக்கு எரிக்க பயன்படுத்தப்பட்டதால் விளக்கெண்ணெய் என்று அறியப்பட்ட விளக்கெண்ணெய், வெறும் எண்ணெய் மட்டுமல்ல. இது உடல்நலத்தை பேணி காத்து, சருமத்தை ஒளிரச் செய்கிறது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

விளக்கெண்ணெய், தாவர எண்ணெய் ஆகும். ஆமணக்கில் இருந்து எடுக்கும் இந்த எண்ணெய் மட்டுமல்ல, ஆமணக்குச் செடியின் இலைகள், வேர், விதை, ஆகியவையும் சிறப்பான மருத்துவப் பண்புகளைக் கொண்டவை. வாதத்தை போக்கும் விளக்கெண்ணெய், உடல் சூட்டை தணித்து, குளிர்ச்சியைத் தருகிறது.  


3 தேக்கரண்டி விளக்கெண்ணெயுடன் சிறிதளவு இஞ்சிச்சாறு கலந்து சாப்பிட்டால், மலச்சிக்கல் தீரும். பேதியாகும் வாய்ப்பும் இருப்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். பேதி ஏற்பட்டால், 2 கிளாஸ் மோர் குடித்தால் போதும்.  மார்பகக் காம்புகளில் ஏற்படும் வெடிப்புகள் மற்றும் புண்கள் குணமாக விளக்கெண்ணெய் பயன்படுத்தப்படுகிறது.  


Also Read | Beauty Tips: முகப்பொலிவு பெற ஆப்பிள் தோல் அற்புதமாய் உதவும், விவரம் இதோ


4 தேக்கரண்டி அளவு ஆமணக்கு எண்ணெய், 1 தேக்கரண்டி அளவு தேன் ஆகியவற்றை நன்றாகக் கலந்து சாப்பிட்டால் பேதியாகும். பேதி மருந்து கொடுக்கவே தேவையில்லை.   


கருவுற்ற பெண்களுக்கு விளக்கெண்ணெய் அருமருந்தாகும். பிற எண்ணெய்களுடன் ஒப்பிடும்போது, அதிக எண்ணெய் பசை கொண்ட விளக்கெண்ணெயை சருமத்தில் பூசினால், தோல் வறண்டு போகாது. கருத்தடை மருந்துகள் மற்றும் களிம்புகளிலும் விளக்கெண்ணெய் பயன்படுத்தப்படுகிறது.


முதியவர்கள் தங்கள் கால் மூட்டுகளில் விளக்கெண்ணெயை கொண்டு தேய்த்து வந்தால், எண்ணெய்ப்பசை குறைபாடு அகலும். வலி குறையும் என்று நம்பப்படுகிறது.


தலைமுடி உதிர்வுக்கு விளக்கெண்ணெய் அருமருந்தாக பயன்படுகிறது. இந்த எண்ணெயை தலையில் தேய்த்த பிறகு, 10 நிமிடத்தில் குளிக்க வேண்டும். வார ஒரு முறை இப்படிச் செய்தால் தலைமுடி நன்கு வளரும்.


Also Rerad | வாயில் கசப்பான சுவை ஏற்பட காரணம் என்ன? அதை போக்கும் வழிகள்


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR