Heart Attack: அதிக உடற்பயிற்சி மாரடைப்பை ஏற்படுத்துமா?
உடல் எவ்வாறு செயல்படுகிறது என்பதை மக்கள் கண்காணிக்க வேண்டும் என்று மருத்துவ நிபுணர்கள் பரிந்துரைக்கிறார்கள்.
Risk of Heart Attack: கன்னட திரையுலகின் சூப்பர் ஸ்டாரும், பல வெற்றிப்படங்களை தந்து மக்களின் இதயங்களை ஆண்ட சூப்பர் ஸ்டாருமான புனித் ராஜ்குமார் சமீபத்தில் மாரடைப்பால் காலமானார். தனது 46-ஆவது வயதிலேயே உலகை விட்டு அவர் விடைபெற்றார். இந்த செய்தி அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
உடல் ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்தி உடலை பிட்டாக வைத்திருக்கும் 46 வயது நபருக்கு திடீரென எப்படி மாரடைப்பு (Heart Attack) ஏற்படும் என அனைவருக்கும் அதிர்ச்சியாகவும் வியப்பாகவும் உள்ளது. சில நாட்கள் முன்னர் தான், பாலிவுட் மற்றும் இந்தி சின்னத்திரை பிரபலம் சித்தார்த் சுக்லா மாரடைப்பால் மரணமடைந்தார் என்ற செய்தியும் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
ஜிம் சென்று, உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தி, உடற்பயிற்சி (Exercise), நடை பயிற்சி என அனைத்தும் செய்பவர்களுக்கே இந்த நிலை என்றால், இதையெல்லாம் செய்யாதவர்களின் நிலை என்ன என்ற அச்சம் அனைவரையும் ஆட்கொண்டுள்ளது.
ஒரு ஊடக அறிக்கையின்படி, ஆசியன் ஹார்ட் இன்ஸ்டிட்யூட் VC மற்றும் MD டாக்டர் ரமாகாந்த் பாண்டா கூறுகையில், 20 முதல் 25 ஆண்டுகளுக்கு முன்பு, 6 மாதங்களில் ஒரு முறை அல்லது இரண்டு முறை 30 வயது மற்றும் அதற்கும் குறைவானவர்களில் மாரடைப்பு ஏற்பட்டது பற்றி தெரிய வரும். ஆனால் இப்போது ஒவ்வொரு வாரமும் இத்தகைய சம்பவங்கள் பற்றிய செய்தி வருகின்றது.
ALSO READ: Heart Problems: இதய நோய் உள்ளதா, அலட்சியப்படுத்தக்கூடாத சில அறிகுறிகள்
இந்தியாவின் சிறந்த இதய (Heart) அறுவை சிகிச்சை நிபுணரும் பத்ம பூஷன் விருது பெற்றவருமான டாக்டர் பாண்டா கூறுகையில், ‘உடற்பயிற்சியால் நம் உடலில் நன்மை தீமை என இரண்டும் ஏற்படுகிறது, ஆனால் அது நீங்கள் எப்படி உடற்பயிற்சி செய்கிறீர்கள் என்பதைப் பொறுத்தது. தகாத முறையில் செய்யப்படும் உடற்பயிற்சியால் இளைஞர்களிடையே மாரடைப்பு பிரச்னைகளும் அதிகரித்து வருகின்றன’ என்றார்.
உடற்பயிற்சியின் போது கவனிக்க வேண்டியவை:
உடலுக்கு மிதமான உடற்பயிற்சி தேவை என்பதை வல்லுனர்கள் எடுத்துரைத்துள்ளனர். மிகக் குறைந்த அளவு அல்லது மிக அதிக அளவிலான உடல் செயல்பாடு பாதகமான விளைவுகளை ஏற்படுத்தலாம். இதில் மாரடைப்பு போன்ற நோய்களும் அடங்கும்.
சரியாக உடற்பயிற்சி செய்வது எப்படி
- 5 முதல் 10 நிமிடங்கள் வரை வார்ம்-அப் செய்யவும்
- 20-30 நிமிடங்களுக்கு உடற்பயிற்சி செய்யவும்.
- 5 முதல் 10 நிமிடங்கள் உடலை ரிலாக்ஸ் செய்யவும்.
உடல் எவ்வாறு செயல்படுகிறது என்பதை மக்கள் கண்காணிக்க வேண்டும் என்று மருத்துவ நிபுணர்கள் பரிந்துரைக்கிறார்கள். மார்பின் இடது பக்கத்தில் வலி ஏற்பட்டாலோ அல்லது மூட்டுகளில் வலி ஏற்பட்டாலோ அதை அலட்சியப்படுத்தக் கூடாது. மேலும், அவரவர் உடல் வாகுக்கு ஏற்றவாறு உடற்பயிற்சி செய்வது மிக முக்கியம் என நிபுணர்கள் எடுத்துக்கூறுகின்றனர்.
ஒருவருக்கு ஒப்பும் சில உடற்பயிற்சிகள் மற்றவருக்கு பாதகம் விளைவிக்கலாம். ஆகையால், உடற்பயிசிகளை தேர்ந்தெடுக்கும் முன்னரும், ஜிம்முக்கான கால நேரம் மற்றும் உடற்பயிற்சி செயல்முறையை தேர்ந்தெடுக்கும் முன்னரும், இதற்கான நிபுணர்களிடம் கலந்தாலோசிக்கும் படி நிபுணர்கள் அறிவுறுத்துகிறார்கள்.
ALSO READ:ஹார்ட் அட்டாக் வராம இருக்கணும்னா இதை சாப்பிடுங்க!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR