Heart Health: கெட்ட கொலஸ்ட்ராலை நீக்க இந்த மசாலாவை தினமும் உணவில் சேர்க்கவும்
தவறான வாழ்க்கை முறையால், உடலில் கெட்ட கொலஸ்ட்ரால் சேரத் தொடங்குகிறது. இதன் காரணமாக இதய நோய்கள், மாரடைப்பு போன்ற பல கடுமையான உடல் நல பிரச்சனைகளை சந்திக்க நேரிடுகிறது.
தவறான வாழ்க்கை முறையால், உடலில் கெட்ட கொலஸ்ட்ரால் சேரத் தொடங்குகிறது. இதன் காரணமாக இதய நோய்கள், மாரடைப்பு போன்ற பல கடுமையான உடல் நல பிரச்சனைகளை சந்திக்க நேரிடுகிறது.
அத்தகைய சூழ்நிலையில், கொழுப்பைக் கட்டுப்படுத்த தினமும் சமையலறையில் எளிதில் கிடைக்கும் மசாலா ஒன்றை உணவில் சேர்த்து கொள்வது பயனுள்ளதாக இருக்கும் என நிபுணர்கள் கூறுகின்றனர்.
இதனால் உடல் எடை குறைவது மட்டுமின்றி, உடலில் உள்ள கொலஸ்ட்ரால் அளவையும், ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவையும் கட்டுப்படுத்தலாம். இதைத் தவிர அதன் மற்ற நன்மைகளையும் அள்ளித்தரும் அந்த மசாலா நாம் அன்றாடம் பயன்படுத்தும் கருமிளகு தான். இதன் அபரிமிதமான ஆரோக்கிய நன்மைகளை அறிந்து கொள்வோம்.
மேலும் படிக்க | Health Alert: சாப்பிட்ட பின் ஒரு போதும் செய்யக் கூடாதவை
மூளையை சுறுசுறுப்பாக்கும் மிளகு
கருப்பு மிளகு உங்கள் மூளைக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்பது உங்களுக்குத் தெரியுமா? இதை உணவில் சேர்த்துக் கொண்டால், மூளை சுறுசுறுப்பாக இருப்பதோடு, மனமும் புத்துணர்ச்சியுடன் இருக்கும். எனவே இன்றே உங்கள் உணவில் சேர்த்துக்கொள்ளுங்கள்.
சளியை போக்கும்
மிளகை சூடான பாலில் கலந்து குடிப்பதால் சளியில் இருந்து நிவாரணம் கிடைக்கும். இது தவிர அடிக்கடி சளித் தொல்லை ஏற்பட்டு வந்தால், அதிலிருந்து நிரந்திர விடுதலை கிடைக்க, தினமும் மிளகு சாப்பிட நல்ல பலன் கிடைக்கும். ஒரு மிளகு என்ற அளவில் தொடங்கி, இரண்டு மூன்று என தினமும் ஒரு மிளகை அதிகரித்து பதினைந்து நாட்களுக்கு சாப்பிட வேண்டும். பின்னர், ஒரு மிளகு என்ற அளவில் படிப்படியாக, 14, 13 என குறைத்து அடுத்த 15 நாட்களுக்கு ஒரு மிளகு என்ற அளவு வரும் வரை சாப்பிட வேண்டும். இதன் மூலம் சளி பிரச்சனையில் நிவாரணம் கிடைக்கும்.
மேலும் படிக்க | மிதமிஞ்சிய உப்பு உயிருக்கே ஆபத்து; எச்சரிக்கும் மருத்துவ நிபுணர்கள்
நீரிழப்பு நீங்கும்
நீர்ச்சத்து குறைபாடு பிரச்சனை இருந்தால், கருமிளகை வெதுவெதுப்பான நீரில் சேர்த்து சாப்பிட்டால் உடலில் தண்ணீர் சத்து பற்றாக்குறை ஏற்படாது. சோர்வாகவும் இருக்காது. இதனுடன், சருமத்தில் வறட்சியும் இருக்காது.
அதிகரித்து வரும் கொலஸ்ட்ரால் அளவின் காரணமாக சிரமப்படுபவர்கள் அல்லது கெட்ட கொலஸ்ட்ராலை உடலில் இருந்து நீக்க விரும்புபவர்களுக்கு இந்த தகவல்கள் பெரும் உதவிகரமாக இருக்கும்.
(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. அதை ஏற்றுக்கொள்வதற்கு முன், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறுங்கள். ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.)
மேலும் படிக்க | நரை முடி கருமையாக, முடி பளபளக்க இதை செய்தால் போதும்: சூப்பர் டிப்ஸ்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR