Heart Health: பலவீனமான இதய நரம்புகள் மாரடைப்பு அபாயத்தை அதிகரிக்கும்; அதற்கான அறிகுறிகள்
இதய நரம்புகள் பலவீனமாக இருந்தால் மாரடைப்பு ஏற்படும் அபாயம் அதிகரிக்கும் என்பதால், இதில் சிறப்பு கவனம் செலுத்தபப்ட வேண்டிய தேவை உள்ளது.
மாறிவரும் வாழ்க்கை முறை மற்றும் தவறான உணவுப்பழக்கத்தால், பல நோய்களால் நாம் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. அதில் ஒன்று இதய நரம்புகள் பலவீனமடைந்தல். அத்தகைய சூழ்நிலையில், நமது உடல் ஆரோக்கியத்தின் மீது கவனம் செலுத்துவது மிகவும் முக்கியம்.
இதய நரம்புகள் ஏன் பலவீனமடைகின்றன என்பது பெரும்பாலானவர்களுக்குத் தெரிவதில்லை. இது உங்கள் இதயத்தையும் பாதிக்கலாம் என்பதோடு, இதய நரம்புகள் பலவீனமடைவதால், மாரடைப்பு போன்ற கடுமையான பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். இதய நரம்புகள் பலவீனமடைவதற்கான காரணங்கள் மற்றும் அறிகுறிகள் என்னவென்று தெரிந்து கொள்வோம்.
இதய நரம்புகள் பலவீனமடைவதற்கு முதல் காரணம் உங்களின் தவறான உணவு முறை மற்றும் வாழ்க்கை முறை. இதயத்தின் நரம்புகள் பலவீனமடைவதற்கு இவை தான் முக்கிய காரணங்கள் காரணமாகக் கருதப்படுகின்றன.
மேலும் படிக்க | Heart Health: இதய நோய்களை மருந்து இல்லாமல் குணப்படுத்த செய்ய வேண்டியவை என்ன
இது தவிர, உங்களுக்கு உயர் இரத்த அழுத்தம் போன்ற பிரச்சினைகள் இருந்தாலுன், இதயத்தின் நரம்புகள் பலவீனமடையும். அதாவது, உயர் ரத்த அழுத்தத்தால், மாரடைப்பு அபாயமும் அதிகரிக்கும்.
உடல் பருமன் பல நோய்களை வரவழைக்கிறது என்பது அனைவருக்கும் தெரியும். இதன் காரணமாக, இதய நோய்கள் ஏற்படும் அபாயமும் உள்ளது. உடல் பருமன் காரணமாக, உங்களுக்கு மாரடைப்பு வருவதற்கான வாய்ப்புகள் அதிகம். இது தவிர, உங்கள் உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ரால் காரணமாக, உங்கள் இதயத்தின் நரம்புகளும் பலவீனமடைகின்றன.
மேலும், புகை பிடிக்கும் வழக்கம் இருந்தால், மாரடைப்பு அபாயமும் அதிகரிக்கிறது. மனச்சோர்வு காரணமாகவும், இதய நரம்புகளும் பலவீனமடையும். உண்மையில், மனச்சோர்வு காரணமாக உங்கள் உடலில் வெளியிடப்படும் மன அழுத்த ஹார்மோன்கள் இதய நரம்புகளுக்கு கடுமையான சேதத்தை ஏற்படுத்துகின்றன.
மேலும் படிக்க | Health Alert! கெட்ட கொலஸ்ட்ரால் அதிகரிக்க காரணமாகும் ‘5’ பழக்கங்கள்
இதய நரம்புகள் பலவீனமடைந்ததற்கான அறிகுறிகள்
- சுவாசிப்பத்தில் பிரச்சனை, மூச்சு திணறல்
- கால்களில் வலி
- பாதங்களில் வீக்கம்
- மார்பில் வலி
- அடிக்கடி ஏற்படும் சளி மற்றும் காய்ச்சல்
(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான நம்பிக்கைகளை அடிப்படையாகக் கொண்டவை. அதை ஏற்றுக்கொள்வதற்கு முன், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறவும். ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.)
மேலும் படிக்க | இதய துடிப்பை சீராக்கும் ‘பொட்டாஷியம்’; இந்த அறிகுறிகளை அலட்சியம் செய்யாதீர்கள்!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR