வெப்ப அலையில் இருந்து தப்பிக்க சாப்பிட வேண்டிய 5 உணவுகள்
கோடையில் பல ஆரோக்கிய பிரச்சனைகளை எதிர்கொள்ள நேரிடும் என்பதால், அதற்கேற்ப உணவு விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும்.
கோடைக்காலத்தில் நீர்ச்சத்து குறைபாடு, பக்கவாதம் போன்ற பிரச்சனைகள் பொதுவாக பலருக்கும் ஏற்படும். சுட்டெரிக்கும் கோடை வெயிலுடன், அனல் காற்றும் மக்களை வாட்டி வதைக்கும் என்பதால், இத்தகைய பிரச்சனைகளில் இருந்து நீங்கள் தப்பிக்க சரியான உணவுகளை தேர்ந்தெடுத்து சாப்பிட வேண்டியது அவசியம்.
மருத்துவர்களின் அறிவுரை என்னவென்றால், கோடையில் ஏற்படும் மக்கள் தலைச்சுற்றல், பலவீனம், சோம்பல் மற்றும் சில நேரங்களில் மயக்கம் போன்ற பிரச்சனைகளை கூட ஏற்படும் எனக் கூறுகின்றனர். வெப்ப அலையின் காரணமாக இந்த பிரச்சனைகளை சந்திக்கும் மக்கள், உடலை ஆரோக்கியமாக வைத்திருந்தால் எளிதாக உபாதைகளைக் கடந்துவிடலாம்.
மேலும் படிக்க | பாகற்காயின் பலே நன்மைகள்: கசப்பு களஞ்சியம் பாகற்காய்
பேரீட்சை - சாத்துக்குடி
நீர்ச்சத்து குறைபாடு ஏற்படும்போது இரும்புச் சத்தும் உடலில் குறையும். இதனைத் தவிர்க்க பேரிச்சை மற்றும் சாத்துக்குடியை சாப்பிட வேண்டும். பேரிட்சை மற்றும் சாத்துக்குடி இரண்டும் உங்களை உஷ்ண பக்கவாதத்தில் இருந்து பாதுகாக்கும். பேரிட்சை சாப்பிடுவதால் நாள் முழுவதும் சோர்வில்லாமல் ஆரோக்கியமாக இருப்பீர்கள்.
தயிர்
தயிரில் கால்சியம், புரதம் மற்றும் வைட்டமின்கள் ஏராளமாக உள்ளன. இதில் லாக்டோஸ், இரும்புச்சத்து மற்றும் பாஸ்பரஸ் ஆகியவையும் உள்ளன. இதனால் கோடை காலத்தில் ஏற்படும் செரிமான பிரச்சனைகளுக்கு சிறந்த தீர்வு தயிர். இதனை லஸ்ஸியாகவும் செய்து சாப்பிடலாம். இப்போது லஸ்லியில் பல வெரைட்டிகள் வந்திருந்தாலும், ஆரோக்கியமானதை தேர்ந்தெடுத்து சாப்பிடுவது நல்லது.
புதினா
புதினா இலையில் இயற்கையாகவே ஏராளமான நன்மைகள் உள்ளன. உடலுக்கு குளிர்ச்சியை கொடுக்க வல்ல புதினாவை சட்னி செய்து சாப்பிடலாம். மாதுளை மற்றும் மாம்பலத்துடன் புதினாவை சேர்த்து சாப்பிடுவது இன்னும் சிறந்தது. புதினா ஜூஸ் மற்றும் சிரப் செய்து குடிப்பது கோடையில் உங்களுக்கு ஆரோக்கிய மேம்பாட்டுக்கு உதவும்.
தர்பூசணி
தர்பூசணியில் லைகோபீன் உள்ளது. இதன் காரணமாக இது சருமத்தின் பளபளப்பை பராமரிக்கிறது. இது தவிர, தர்பூசணியில் பொட்டாசியம் சத்து அதிகம் உள்ளதால், குளிர்ச்சித் தன்மையும், 92 சதவீதம் தண்ணீரும் இருப்பதால், உடலில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படாது.
எலுமிச்சைப் பழம்
எலுமிச்சையில் வைட்டமின் சி நிறைந்துள்ளது. இது உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றி, குழந்தைகளிடம் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் உதவுகிறது. அதனால்தான் கோடைக்காலத்தில் எலுமிச்சை ஜூஸை அதிகம் குடிக்க வேண்டும் என்றும் மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துகொள்ளவும், உங்கள் கருத்துகளை பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைதளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
ஃபேஸ்புக்கில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR