பாகற்காயின் பலே நன்மைகள்: கசப்பு களஞ்சியம் பாகற்காய்

Bitter Gourd Benefits: பாகற்காய் சாப்பிட்டால் பல பிரச்சனைகள் நீங்கும். பாகற்காய் சாப்பிடுவது எப்படி என்று தெரிந்து கொள்ளுங்கள்.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Apr 15, 2022, 05:36 PM IST
  • பாகற்காயின் சுவை பிடித்தாலும் பிடிக்காவிட்டாலும், அதை கண்டிப்பாக அனைவரும் உட்கொள்வது நல்லது.
  • முழங்கால் வலிக்கு நன்மை தரும்.
  • பாகற்காய் வாய்ப்புண்ணை நீக்குகிறது.
பாகற்காயின் பலே நன்மைகள்: கசப்பு களஞ்சியம் பாகற்காய் title=

பாகற்காயின் சுவை கசப்பாக இருப்பதால் பலருக்கு அதை பிடிப்பதில்லை. ஆனால், கருப்பே அழகு, காந்தலே ருசி என்பதுபோல கசப்பே ஆரோக்கியம் என்பதும் ஒரு நிதர்சனமான உண்மையே.

பாகற்காயில் உள்ள பலன்கள் ஏராளம். பாகற்காய் எவ்வளவு கசப்பாக இருக்கிறதோ, அந்த அளவுக்கு அதில் ஆரோக்கிய நன்மைகளும் அதிகமாக இருக்கின்றன. 

உடல் ஆரோக்கியத்துக்கு தேவையான பல சத்துக்கள் பாகற்காயில் உள்ளன. இது நீரிழிவு நோயைக் குணப்படுத்துவது மட்டுமல்லாமல், இன்னும் பல நோய்ககளிலிருந்தும் நிவாரணம் அளிக்கின்றது. 

ஆகையால், பாகற்காயின் சுவை பிடித்தாலும் பிடிக்காவிட்டாலும், அதை கண்டிப்பாக அனைவரும் உட்கொள்வது நல்லது. நீங்கள் பாகற்காயை விரும்பினாலும் விரும்பாவிட்டாலும், நீங்கள் கண்டிப்பாக பாகற்காய் சாப்பிட வேண்டும். பாகற்காய் சாப்பிடுவதன் மூலம் பல உடல் பிரச்சனைகளிலிருந்து விடுபடலாம். பாகற்காய் எந்தெந்த நோய்களை நீக்கும் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம். 

ஆழமான காயங்களை நீக்குகிறது:

பல நேரங்களில் சில காயங்கள் விரைவில் குணமடைவதில்லை. இதன் காரணமாக மக்கள் மேலும் பல பிரச்சனைகளை எதிர்கொள்ள வேண்டி வருகிறது. நீண்ட நாட்களாக குணமாகாத காயங்கள் இருந்தால், அவற்றின் மீது பாகற்காய் வேரை தேய்க்கவும். 

இப்படி செய்வதால், தன் காரணமாக, காயம் விரைவாக பழுத்து, அதிலிருந்து சீழ் வெளியேறத் தொடங்குகிறது. இந்த வழியில் காயம் விரைவில் குணமாகும். பாகற்காய் வேர் இல்லை என்றால், பாகற்காய் இலையை அரைத்தும் காயத்தின் மீது தடவலாம்.

மேலும் படிக்க | லோ பிபி என்றால் என்ன? அதை முற்றிலும் சரிசெய்ய மிக சுலப வழி என்ன? 

வாய்ப்புண்களை நீக்குகிறது:

கோடையில் அடிக்கடி வாயில் கொப்புளங்கள் வருவதுண்டு. இவை சரியாக நீண்ட காலம் எடுத்துக்கொள்ளும். வாயில் கொப்புளங்கள் இருப்பதால், மக்கள் பல்வேறு வகையான மருந்துகளைப் பயன்படுத்துகிறார்கள். ஆனால் பெரும்பாலும், அவை எந்த சிறப்பு விளைவையும் ஏற்படுத்துவதில்லை. 

வாய் கொப்புளங்களுக்கு பாகற்காய் சாறு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். பாகற்காய் சாற்றை கொப்புளத்தின் மீது தடவி உமிழ்நீர் வெளியேற்ற வேண்டும். இப்படிச் செய்தால் கொப்புளப் பிரச்சனை நீங்கும்.

மேலும் படிக்க | Health Alert: டீயுடன் மறந்தும் சாப்பிடக்கூடாத சில உணவுகள் 

3- தலைவலியை நீக்கும்:

உங்களுக்கும் அடிக்கடி தலைவலி ஏற்படும் பிரச்சனை இருந்தால், பாகற்காய் இலைகளை அரைத்து நெற்றியில் தடவவும். இவ்வாறு செய்வதன் மூலம் தலைவலிக்கு உடனடி நிவாரணம் கிடைக்கும்.

4- கற்களை நீக்குகிறது:

பாகற்காய் சாறு குடிப்பதால் சிறுநீரகத்தில் உள்ள கற்களில் இருந்து உடனடி நிவாரணம் கிடைக்கும். உங்களுக்கு இந்த பிரச்சனை இருந்தால், தொடர்ந்து பாகற்காய் சாறு குடித்து வந்தால், கண்டிப்பாக இந்தப் பிரச்சனையில் இருந்து விடுபடலாம்.

5- முழங்கால் வலிக்கு நன்மை தரும்:

சிலருக்கு முழங்கால் வலி இருக்கும். இது பெரும்பாலும் சோர்வு, கால்சியம் குறைபாடு அல்லது முதுமை காரணமாகவும் இருக்கலாம். நீங்கள் முழங்கால் வலியால்  அவதிப்பட்டுக் கொண்டிருந்தால், இந்த செய்முறையைப் பின்பற்றவும். பாகற்காயை நெருப்பில் காட்டி, சுட வைத்து, அதை நசுக்கி, ஒரு பருத்தி துணியில் கட்டி முழங்காலில் வைத்து கட்டினால் முழங்கால் வலி குணமாகும்.

மேலும் படிக்க | சப்போட்டா சாப்பிட்டால் இந்த 4 வகையான பிரச்சனைகள் அடியோடு நீங்கிவிடும் 

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறுங்கள். ஜீ மீடியா இவற்றுக்கு பொறுப்பேற்காது.)

மேலும் படிக்க | தொப்பையால் தொல்லையா: இத செஞ்சா போதும், தொப்பை தொலைந்துவிடும் 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News