ஆண், பெண் இருபாலருக்கும் முடி உதிர்வு அதிகரித்து வருகிறது.  இன்றைய வேகமான உலகில் தலை முடிக்கென்று தனியாக அக்கறை எடுத்துக்கொண்டு அதனை பராமரிக்க எவரும் நேரமில்லை.  சுற்றுசூழல் மாசு, ஊட்டச்சத்து குறைப்பது, மரபணு மாறுபாடு போன்ற பல காரணங்களால் தலைமுடி பாதிப்படைகிறது.    நமது அழகை மெருகேற்றி காட்டுவதே ஆரோக்கியமான கூந்தல் தான்.  அவற்றை பலவித பக்குவம் செய்து பாதுகாக்க முடியாதவர்களுக்கென்றே சில எளிய வழிமுறைகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது, அவற்றை கடைப்பிடிப்பதன் மூலம் நம் தலைமுடியை ஆரோக்கியமாக வைத்து கொள்ளலாம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


மேலும் படிக்க | Vitamin D பற்றாக்குறை கொரோனா நோயாளிகளில் என்ன தாக்கத்தை ஏற்படுத்தும்?


தற்போது மார்க்கெட்டில் தலைமுடியை பராமரிக்க பலவிதமான தயாரிப்புகள் வந்திறங்கி உள்ளது.  சிலர் மார்க்கெட்டில் புதுசாக வரும் அனைத்தையும் வாங்கி தலைமுடிக்கு பயன்படுத்துவார்கள், அது சரியானதல்ல.  உங்கள் தலைமுடிக்கு சில தயாரிப்புகள் மற்றும் ஒரு பிரத்யேக வழக்கம் மட்டுமே தேவை. நம்முடைய முடியின் தரம் பெரும்பாலும் மரபணு மற்றும் ஹார்மோன்களைப் பொறுத்தது தான்.  சந்தையில் விற்கப்படும் பளபளப்பான தயாரிப்புகளை மட்டுமே வாங்கி பயன்படுத்தினால் தலைமுடி ஆரோக்கியமாக வளர்ந்துவிடாது.  உங்கள் தலைமுடி மற்றும் ஸ்கால்பில் ஏதேனும் பிரச்சனை இருப்பதாக உணர்ந்தால் நீங்கள் ஒரு சிறந்த தோல் மருத்துவரை அணுகவும்.  ஒவ்வொருவரின் தலைமுடியும் வித்தியாசமானது என்பதை அனைவரும் நினைவில் வைத்துக்கொள்ள வேணும்.  ஒருவர் ஒரு தயாரிப்பை பயன்படுத்தி நனமை பெறுகிறார் என்பதற்காக நீங்களும் அதனை பயன்படுத்தக்கூடாது.  மற்ற நபருக்கு நன்மையளித்த ஒன்று உங்களுக்கு நன்மையை தராமல் கூட போகலாம்.



சூரிய ஒளி, ஹீட் ஸ்டைலிங், முடிகளுக்கு சாயம் பூசுதல் போன்றவற்றால் உங்கள் தலைமுடி ஒவ்வொரு நாளும் பல சேதங்களுக்கு உள்ளாகுகிறது.  உங்கள் முடியை நீங்கள் ஹீட் ஸ்டைலிங் செய்வதற்கு முன், முடிகளில் வெப்பத்திலிருந்து பாதுகாக்கக்கூடிய வெப்பப் பாதுகாப்பு கிரீம் அல்லது ஊட்டமளிக்கும் சீரம் போன்ற ஏதேனும் ஒன்றை பயன்படுத்த வேண்டும்.  எப்போதும் தலைமுடிக்கு மென்மையான ஷாம்பு மற்றும் கண்டிஷனரை பயன்படுத்த வேண்டும், தலை குளித்த பிறகு ஹேர் ட்ரையர் எதுவும் அடிக்கடி பயன்படுத்தாமல் முடியை காற்றில் உலரவிடவும்.  பிரத்யேகமாக தலைமுடிகளுக்கென்றே தயாரிக்கப்பட்ட ஹேர் மாஸ்க்குகள் பயன்படுத்துவது மற்றும் இளஞ்சூடான எண்ணெய் கொண்டாய் தலையை மசாஜ் செய்வது போன்றவற்றை செய்வதன் மூலம் தலைமுடி ஆரோக்கியமாகும்.  தலை முடியை மென்மையான துணிகளால் செய்யப்பட்ட ஹேர் பேண்டுகள் மூலம் காட்டி கொள்ளலாம்.



முடி உதிர்தலால் அவதிப்படுபவர்களுக்கு மற்றொரு எளிய வழி என்னவென்றால் சாடின் துணியாலான  தலையணை உறையைப் பயன்படுத்துவதன் மூலம் உங்கள் முடி உதிர்வு கட்டுப்படுவதை நீங்களே பார்க்கலாம்.  சாடின்(satin) ஒரு மென்மையான பொருள் என்பதால், சாதாரண பருத்தி, ரேயான் அல்லது கலவையான பாலிஸ்டர்  துணிகளுக்கு பதிலாக, இரவில் உறங்கும்போது சாடின் துணியிலாலான தலையணைகளை பயன்படப்பியதி கொள்ளுங்கள், இவை உங்கள் முடியை பாதுகாப்பதோடு ராயலான வாழ்க்கையை வாழ்வது போன்றதொரு எண்ணத்தையும் ஏற்படுத்தும்.


மேலும் படிக்க | யார் யாருக்கு கொரோனா பரிசோதனை செய்ய வேண்டும்? வழிகாட்டு நெறிமுறை வெளியீடு


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR