பாதரசம் அதனுடன் உயரும்போது தோல் வியர்வை மற்றும் வெப்ப அலை நிலைகள் எழுகின்றன. கோடை என்பது வெளிர், மந்தமான அல்லது சிவப்பு மற்றும் துண்டிக்கப்பட்ட சருமம் என்றால் இந்த மாதங்களில் மிகவும் பொதுவானது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

போர்டு சான்றளிக்கப்பட்ட தோல் மருத்துவரான ஒமர் இப்ராஹிம் பரிந்துரைத்தபடி மற்றும் சிகாகோ ஒப்பனை அறுவை சிகிச்சை மற்றும் தோல் மருத்துவத்தில் Allure.com இல் மருத்துவ ஆராய்ச்சியின் இணை இயக்குனர்.


கோடைகாலத்தில் பளபளப்பான, பிரகாசமான சருமத்திற்கான சில குறிப்புகள் இங்கே:


கோடை காலத்தில்(summer) எல்லாருக்குமே உடலில் வியர்வை வெளியேறிக்கொண்டே இருக்கும். அதன் விளைவாக துர்நாற்றம் ஏற்படும். எனவே நிறைய தண்ணீர் குடியுங்கள். கீரைகள், ஆரஞ்சுப் பழம், அன்னாசிப் பழம் ஆகியவற்றை நிறைய சாப்பிடுங்கள். வெள்ளரி, தர்பூசணி, இளநீர் போன்றவற்றை அதிகமாக சேர்த்துக் கொள்ளுங்கள்.


வெயிலின் தாக்கம்(summer) முகத்தில் ஏராளமான கரும்புள்ளிகளை கொண்டு வரும். எண்ணைப் பசையான உடம்பு என்றால் முகத்தில் பருக்கள் பாடாய்ப்படுத்தி எடுத்துவிடும். கரும் புள்ளிகள் மற்றும் பருக்கள் மறைய பப்பாளிப் பழச்சாறை முகத்தில் தடவலாம். எக்காரணத்தை கொண்டும் பருக்களை கிள்ளிவிடாதீர்கள். இதனால் பருக்கள் அதிகமாகும்.


தோல் வறண்டு விடாமல் தடுக்க வாரம் இருமுறை பேஸ்பேக் போட்டுக் கொள்ளலாம். தர்பூசணி பழத்தைக் கொண்டு தோழிகள் எளிதாக வீட்டிலேயே பேஸ்பேக் தயாரிக்கலாம். தர்பூசணி பழத்தில் கொஞ்சம் பால், சிறிதளவு தேன் கலந்து முகத்தில் தடவிக்கொள்ளுங்கள். சுமார் இருபது நிமிடங்கள் வைத்திருந்து முகத்தைக் கழுவிவிடுங்கள். தர்பூசணி மற்றும் வாழைப்பழ பேக்குகளை வீட்டிலேயே நீங்கள் தயாரிக்கலாம். அவ்வப்போது தயாரித்து பயன்படுத்தினால் நல்ல பலன் கிடைக்கும்.


அடிக்கடி முகத்தை குளிர்ந்த நீரால் கழுவுங்கள். இது தான் நீங்கள் செய்யவேண்டிய முதல் சரும பராமரிப்பு. அடுத்து ஒரு நாளைக்கு இரண்டு தடவை குளியுங்கள். வெயிலால் மட்டுமின்றி வெயிலின் புழுக்கத்தால் கூட உடல் வியர்த்து சருமத்தில் அழுக்கு தேங்கிவிடும்.


கோடை காலத்தில்(summer) சோப்பை அதிகமாகப் பயன்படுத்த வேண்டாம். அதிகமாக வியர்க்கும் போது பவுடர் பூசுவது நல்லதல்ல. முகத்தை நன்றாக கழுவிய பிறகு அல்லது குளித்து துடைத்த பிறகே பவுடரை பூச வேண்டும்.


கோடை காலத்தில்(summer) அதிகம் பாதிக்கப்படுவது சருமம் தான். வெள்ளரி, தர்பூசணி, இளநீர் போன்றவற்றை அதிகமாக சேர்த்துக் கொள்வது நல்லது. குறிப்பாக சிறிது சீரகத்தை நீரில் போட்டுக் காய்ச்சி அந்த நீரை அடிக்கடி பருகலாம். இதனால் கோடையில் சருமம் மங்காமல், செழுமை அடையும்.