புதுடெல்லி: ஆரோக்கியமான முடி மற்றும் பளபளப்பான கூந்தல் இருக்க வேண்டும் என ஒவ்வொரு பெண்ணும் விரும்புவார். இருப்பினும், புதிய மற்றும் இயற்கையான பொருட்களை பயன்படுத்த முடியாத சகாப்தத்தில் நாம் வாழ்கிறோம். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அனைவருக்கும் கருமையான நீண்ட, பளபளப்பான ஆரோக்கியமான கூந்தல் இருந்த காலம் இப்போது அருகிவிட்டது. பெண்கள் மட்டுமல்ல, ஆண்களும் முடி உதிர்தல், பொடுகு, முடி உதிர்தல், ரசாயன சிகிச்சைகள் மற்றும் வண்ணம் பூசுவதால் தலைமுடி பளபளப்பு இழந்து சோபையற்று காணப்படுகிறது.


ஆனால், இந்த பிரச்சனையைத் தீர்க்கும் வழியை ஆயுர்வேதம் சொல்கிறது. பளபளப்பான கூந்தலுக்கான மந்திரம் செம்பருத்தி என்னும் மலர். முடி பராமரிப்பில் செம்பருத்திக்கு இணையாக வேறு எதையுமே சொல்ல முடியாது. 
தவறாமல் பயன்படுத்தினால், செம்பருத்தி, அழகான பளபளப்பான கருமையான ஆரோக்கியமான கூந்தலுக்கு கேரண்டி சொல்கிறது. 



கெரட்டின் சிகிச்சை
செம்பருத்தி பூவில் கெரட்டின் உற்பத்தி செய்யும் அமினோ அமிலங்கள் உள்ளன. கெரட்டின் நமது தலைமுடியின் கட்டுமானப் பொருளாகச் செயல்பட்டு, முடி உடையும் வாய்ப்புகளை குறைக்கிறது.


செம்பருத்தி எண்ணெயைப் பயன்படுத்துவது முடியின் தன்மையை ஆரோக்கியமாக்குகிறது. வீட்டிலேயே செய்யக்கூடிய செலவு குறைவான அற்புதமான பலன் தரும் கெரட்டின் சிகிச்சை இது. 


செம்பருத்தி பூவில் இளநரைக்கு சிகிச்சை அளிக்கும் பண்புகள் உள்ளன. பண்டைய காலங்களில், மக்கள் தங்கள் நரை முடியை சீராக்க, செம்பருத்திப்பூவை பயன்படுத்தினார்கள்.


மேலும் படிக்க | 25 வயதிலேயே நரை முடி பிரச்சனையா, அப்போ இத ட்ரை பண்ணுங்க


தற்போது, சந்தையில் கிடைக்கும் ஹேர் டைகள் மற்றும் கலர்களைப் போலல்லாமல் செம்பருத்தி தலைமுடிக்கு இயற்கையான ஊட்டச்சத்தை மட்டுமே தரும் என்பது ப்ளஸ் பாயிண்ட்.


செம்பருத்தியில் இயற்கையான ஊட்டமளிக்கும் பண்புகள் தலைமுடியின் ஆரோக்கியத்தையும் அழகையும் பராமரித்து  முடியின் தரத்தை மேம்படுத்துகிறது.


தலைமுடிக்கு இயற்கை வைத்தியம்


செம்பருத்தி செடியின் பல்வேறு நன்மைகளில் சில: தலைமுடிக்கு கண்டிஷனராக செயல்படும் செம்பருத்தியை எவ்வாறு பயன்படுத்துவது என்பதை தெரிந்துக்கொள்வோம்.



ஊட்டத்திற்கு செம்பருத்தி எண்ணெய்
இந்த எண்ணெய் சிகிச்சையை (Hair Care) வீட்டிலேயே தயாரிக்கலாம். செம்பருத்தி எண்ணெய்க்கு 8 செம்பருத்தி இலைகள், 8 செம்பருத்திப் பூக்கள் மற்றும் 1 கப் தேங்காய் எண்ணெய் தேவை. 


பூக்கள் மற்றும் இலைகளை கழுவி, மென்மையான பேஸ்டாக அரைக்கவும். ஒரு பாத்திரத்தில் எண்ணெயை சூடாக்கி, இந்த விழுதை எண்ணெயில் சேர்க்கவும். எண்ணெய் நன்றாக சூடானவுடன் அடுப்பை அணைக்கவும். ஆறின எண்ணெயை சேமித்து வைக்கவும்.


தினசரி அல்லது வாரத்தில் இரு நாட்கள், செம்பருத்தியின் எண்ணெயைக் கொண்டு சில நிமிடங்கள் மசாஜ் செய்து, 30 நிமிடம் அப்படியே விட்டுவிடவும். பின் தலையை அலசவும்.


மேலும் படிக்க | சிவகரந்தை இருக்கும்போது நரைமுடியிருந்தால் கவலை எதற்கு


பளபளப்பான முடிக்கு செம்பருத்தி கற்றாழை மாஸ்க்
செம்பருத்தியுடன் கூட்டு சேரும் கற்றாழை, முடி உதிர்தல், பிளவு மற்றும் முடி உதிர்வதைத் தடுப்பதோடு, தலைமுடிக்கு பொலிவைத் தருகிறது. இந்த சூப்பர் ஜோடியைக் கொண்டு தயாரிக்கும் முடிக்கான மாஸ்க் இது.


2 டேபிள் ஸ்பூன் செம்பருத்தி இதழ்களை கூழாக அரைத்து, அதனுடன் 1 கப் கற்றாழை ஜெல்லை ஒன்றாக கலந்து பேஸ்டாக்கவும்.


இந்த பேஸ்ட்டை உச்சந்தலையிலும் முடியிலும் தடவ வேண்டும். 45 நிமிடங்களுக்கு உங்கள் தலைமுடியில் பேஸ்ட்டை விட்டுவிட்டு, வெதுவெதுப்பான நீரில் கழுவவும், 


வாரத்திற்கு மூன்று முறை இந்த மாஸ்கை பயன்படுத்தினால்,  உங்கள் தலைமுடியில் ஏற்படும் அற்புதங்மான மாற்றங்கள் உங்கள் முகத்தில் புன்னகையையும், தலைமுடியின் ஆரோக்கியத்தையும் நிரந்தரமாக்கும்.


மேலும் படிக்க | Heart Health: கெட்ட கொலஸ்ட்ராலை நீக்கும் இந்த 4 பருப்புகளை உணவில் அவசியம் சேர்க்கவும் 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR