அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு என்பது போல கொழுப்பு சத்து உடலுக்கு தேவையான ஒன்றுதான், ஆனால் அதிகப்படியான கொழுப்பு ஆபத்தானது.  உடலில் கொலஸ்ட்ராலின் அளவு அதிகரிக்கும்பொழுது  தமனிகளில் அடைப்பு அல்லது சேதம் ஏற்படுவது, இதயத்திற்கு பாதிப்பு ஏற்படுவது, மாரடைப்பு மற்றும் பக்கவாதம் போன்ற உயிருக்கு ஆபத்தான நிலைமைகளை ஏற்படுத்தும்.  ஒவ்வொருவரது உடலிலும் கொலஸ்ட்ரால் இயற்கையாகவே உருவாகும், இது மெழுகு போன்ற ஒரு பொருள்.  ​​நிறைவுற்ற கொழுப்புகள் மற்றும் சர்க்கரை நிறைந்த உணவுகளை நாம் அதிகமாக உட்கொள்ளும்பட்சத்தில் நமது ரத்தத்தில் கொலஸ்ட்ராலின் அளவு அதிகரிக்கும்.  மேலும் அதிகளவு கொலஸ்ட்ரால் இருப்பது கண்கள், தோல் அல்லது முகம் போன்றவற்றின் மூலம் வெளிப்படுகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கண்களில் ஏற்படும் சில அறிகுறிகளை வைத்து நமது உடலில் கொலஸ்ட்ரால் அதிகரித்திருப்பதை கண்டறிய முடியும்.  கண்களின் நிறத்தில் ஏற்படும் மாற்றங்கள், கண் இமைகளின் தோற்றம், பார்வையில் உள்ள கருமையான கோடுகள் போன்றவற்றை கவனிக்க வேண்டியது அவசியமான ஒன்று.  ஆரம்பகாலத்தில் பார்வையில் சிறிதளவு குறைபாடு ஏற்பட்டு மங்கலான பார்வை, கார்னியாவைச் சுற்றி சாம்பல் அல்லது வெள்ளை அல்லது மஞ்சள் படிவுகள், கண்களைச் சுற்றி மஞ்சள் புடைப்புகள் ஆகியவை ஏற்படுவது உடலில் அதிக கொழுப்புகள் இருப்பதற்கான அறிகுறியாகும்.  அதிக கொலஸ்டராலால் சாந்தெலஸ்மா ஏற்படுகிறது, இது கண்களைச் சுற்றி அல்லது மூக்கிற்கு அருகில் உருவாகும் ஒரு உயர்ந்த அல்லது தட்டையான மஞ்சள் நிற பகுதி.  சருமத்தில் கொலஸ்ட்ரால் படிவதால் இது உருவாகிறது, ஆனால் இது பார்வையை பாதிக்காது.  



மேலும் படிக்க | நீரழிவு நோயாளிகள் இந்த காய்கறிகளை மட்டும் தவறாமல் சாப்பிடுங்கள்!


சாந்தெலஸ்மா இருப்பவர்களில் 50 சதவீதம் பேருக்கு அதிக கொலஸ்ட்ரால் இருக்கும்.  இவை புகைபிடிப்பவர்கள், அதிக எடை, உயர் இரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு நோயாளிகலில் அதிகம் காணப்படுகிறது.  கண்ணின் பின்புறத்தில் அமைந்துள்ள விழித்திரையின் தமனி மற்றும் நரம்புகளில் கொழுப்புகள் படிந்து ஒரு தடுப்பை ஏற்படுத்துவதால் ரெட்டினால் வெயின் ஆக்ளூஷன் ஏற்படுகிறது.  இதனால் விழித்திரைகளுக்கு செல்லும் ரத்த ஓட்டத்தில் பாதிப்பு ஏற்படுகிறது, இதற்கு முக்கிய காரணம் உடலில் அதிகப்படியான கொலஸ்ட்ரால் இருப்பது தான்.  இதனால் ஒரு கண்ணில் மங்கலான பார்வை, பார்வையில் இருண்ட கோடுகள் அல்லது புள்ளிகள் தெரிவது, கண்ணில் வலி போன்றவை ஏற்படும்.  அடுத்ததாக அதிக கொலஸ்ட்ராலால் கண்ணில் ஆர்கஸ் செனிலிஸ் எனும் பாதிப்பு ஏற்படுகிறது.  இதனால் வெண்ணிற, நீலம் அல்லது சாம்பல் நிற வளையம் கார்னியாவை சுற்றி உருவாகிறது.  இவ்வாறு கண்களை சுற்றி உருவாகும் படிவுகளை சிகிச்சை மூலம் அகற்றலாம்.


மேலும் படிக்க | கொழுப்பை குறைக்கணுமா? இந்த பழக்கத்தை எல்லாம் விட்டுடுங்க 


 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ