Uric Acid Control Tips: உடலில் யூரிக் அமில அளவு அதிகரிக்கும் போது மூட்டுகளில் அதிக வலி ஏற்படும். யூரிக் அமிலம் மூட்டுகளை சுற்றி படிகங்கள் வடிவில் டெபாசிட் செய்யும் நிலையில், இதனால் கடுமையான வலி ஏற்படும். யூரிக் அமில அளவை குறைக்க சில உணவுகளை தவிர்க்க வேண்டும். அதிக யூரிக் அமிலத்திற்கு பல காரணங்கள் உள்ளன. இருப்பினும், உங்கள் தவறான உணவுமுறையும் இதற்குக் காரணமாக இருக்கலாம். யூரிக் அமிலம் பியூரின் என்ற தனிமத்தில் இருந்து உருவாகிறது அந்த வகையில் பியூரின்களை அதிகரிக்கும் வகை உணவுகளை, தவிர்க்க வேண்டும்


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

யூரிக் அமில பிரச்சனை உள்ளவர்களுக்கு சில உணவுகள் விஷத்திற்கு சமம் என்கின்றனர் சுகாதார வல்லுநர்கள். இந்த உணவுகளை உட்கொள்வதால் யூரிக் அமிலம் வேகமாக அதிகரிக்கும் என்பதால் இந்த உணவுகளை சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது. இந்நிலையில், யூரிக் அமில பிரச்சனை இருந்தால், தவிர்க்க வேண்டிய சில உணவுகளைப் பற்றி (HealthTips) இந்த பதிவில் காணலாம்.


வேர்க்கடலை (Peanut)


வேர்க்கடலை எண்ணற்ற ஊட்டச்சத்துக்கள் கொண்டது. எனவே, ஏழைகளின் பாதாம் என்று அழைக்கப்படுகிறது. வேர்க்கடலை ஆரோக்கியத்திற்கு நல்லது என்றாலும், இதில் அதிக புரதம் உள்ளதன் காரணமாக, வேர்க்கடலையை அளவிற்கு அதிகமாக உட்கொள்வது உடலில் யூரிக் அமிலத்தை அதிகரிக்கலாம். அஇவை தவிர, பீன்ஸ் மற்றும் பட்டாணி, பருப்பு வகைகள், காலிஃபிளவர் மற்றும் காளான் போன்ற காய்கறிகளிலும் பியூரின் அளவு அதிகமாக உள்ளது.


இனிப்பு அதிகம் சேர்த்த பானங்கள் (Sweet Drinks)


சர்க்கரை அதிகம் சேர்ந்த்த எந்த வகையான இனிப்பு கொண்டு சாறும் மூட்டு வலிக்கு எதிரி. இது மூட்டுகளில் விறைப்பு மற்றும் வலியை அதிகரிக்கும். அதிக அளவிலான சர்க்கரை எலும்புகளில் இருந்து கால்ஷியத்தை உறிஞ்சும் தன்மை கொண்டது இது மட்டுமின்றி, மதுபானங்களான வோட்கா, பீர் போன்றவையும் உங்கள் யூரிக் அமில பிரச்சனையை அதிகரிக்கும்.


தயிர் (Curd)


தயிர் ஆரோக்கியத்திற்கு நல்லது என்றாலும், அதில் உள்ள கேசீன் என்ற புரதம் உடலில் வீக்கத்தை ஏற்படுத்தும். இதனால் மூட்டு வலி அதிகரிக்கலாம் என எச்சரிக்கின்றனர் நிபுணர்கள்.


சிவப்பு இறைச்சி (Red Meat)


சிவப்பு இறைச்சி யூரிக் அமில பிரச்சனையை அதிகரிக்கும். குறிப்பாக கல்லீரல் மற்றும் சிறுநீரக இறைச்சிகளில் அதிகபட்ச புரதம் உள்ளது. அதை சாப்பிடவே கூடாது. மாட்டிறைச்சி, பன்றி இறைச்சி மற்றும் செம்மறி ஆட்டு இறைச்சியில் பியூரின்கள் அதிக அளவில் காணப்படுகின்றன. எனவே இதை தவிர்க்க வேண்டும்.


மேலும் படிக்க | ஒரே மாதத்தில் 5 கிலோ எடை குறையணுமா.... உங்களை ஏமாற்றாத டயட் பிளான் இதோ


அரிசி உணவு (Rice Foods)


அரிசியில் காணப்படும் சுத்திகரிக்கப்பட்ட கார்போஹைட்ரேட் வீக்கத்தை அதிகரிக்கிறது. அரிசிக்குப் பதிலாக சிறுதானியங்களை சாபபிடுவது பயன் அதரும்.


பருப்பு வகைகள் (Pulses)


பருப்பு வகைகள் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. ஆனால் யூரிக் அமில பிரச்சனை உள்ளவர்களுக்கு நல்லதல்ல. பருப்புகளில் அதிக அளவு புரதம் இருப்பதால், அது பியூரின்களாக உடைந்து யூரிக் அமிலத்தை அதிகரிக்கிறது.


இனிப்பு வகைகள் (Sweets)


பொதுவாகவே, இனிப்புகள் ஆரோக்கியத்திற்கு குந்தகம் விளைவிக்கக் கூடியவை. இனிப்புகள் யூரிக் அமில பிரச்சனையை மிக வேகமாக அதிகரிக்கும். எனவே, யூரிக் அமில பிரச்சனை இருந்தால், இனிப்பு உணவுகளை உட்கொள்வதை தவிர்க்க வேண்டும். 


பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.


மேலும் படிக்க | கொழுப்பு கரைய, எடை குறைய, இந்த காலை உணவுகள் கைகொடுக்கும்: ட்ரை பண்ணி பாருங்க


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ