20 நாட்களில் சொட்டை தலையிலும் முடி வளரும். இந்த வீட்டு வைத்தியம் போதும்
Hair Fall Control Oil: இந்த வீட்டுப் பொருட்களை வைத்து தயாரிக்கப்படும் எண்ணெய் முடி உதிர்வதைத் தடுக்க உதவதுடன், 20 நாட்களில் கூந்தலை அடர்த்தியாகவும் வலுவாகவும் மாற்றவும் உதவும்.
Hair Oil For Hair Fall Control: தற்போது முடி உதிர்வு என்பது மக்களிடையே பொதுவான பிரச்சனையாக மாறியுள்ளது. அது ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி, முடி உதிர்தல் பிரச்சனையால் அனைவரும் சிரமப்படுகின்றனர். மறுபுறம் நாம் அனைவருமே நமது கூந்தல் நீளமாகவும், அடர்த்தியாகவும், வலுவாகவும் இருக்க வேண்டும் என்று விரும்புகிறோம், ஆனால் இன்றைய வாழ்க்கை முறை மற்றும் சில சுற்றுச்சூழல் காரணிகள் முடி உதிர்வை ஏற்படுத்துகின்றன. இதனால் இன்று ஆண்கள் முதல் பெண்கள் வரை அனைவரும் வழுக்கையால் சிரமப்படுகின்றனர். முடி உதிர்வதால், தலை வழுக்கையாகிறது, இது நமது தன்னம்பிக்கையையும் பாதிக்கிறது, ஆனால் இனி இதற்கெல்லாம் கவலைப்பட வேண்டியதில்லை, ஏனென்றால் நம் வீட்டில் சில பொருட்கள் உள்ளன, அதனால் தயாரிக்கப்படும் எண்ணெய் இந்த சிக்கலில் இருந்து விடுப்பட உதவும். வீட்டில் தயாரிக்கப்பட்ட இந்த எண்ணெய் முடி உதிர்வைத் தடுப்பதில் பயனுள்ளதாக இருக்கும். வீட்டு உபயோகப் பொருட்களில் தயாரிக்கப்படும் எண்ணெயைத் தடவினால், முடி உதிர்வதை தடுத்து வழுக்கைப் பிரச்சனையை போக்க உதவலாம்.
முடி உதிர்வதைத் தடுக்க வீட்டில் தயாரிக்கப்பட்ட இந்த எண்ணெயை பயன்படுத்தலாம் | Effective Homemade Oil To Prevent Hair Fall:
1. தேங்காய் எண்ணெய் மற்றும் கறிவேப்பிலை | Coconut Oil and Curry Leaves:
தேங்காய் எண்ணெய் மற்றும் கறிவேப்பிலை இரண்டும் கூந்தலுக்கு மிகவும் நன்மை பயக்கும். கறிவேப்பிலையில் உள்ள பீட்டா கரோட்டின் மற்றும் புரோட்டீன் முடியின் வேர்களை வலுப்படுத்தி, முடி உதிர்வை குறைக்க உதவுகிறது.
செய்முறை:
ஒரு கப் தேங்காய் எண்ணெயை எடுத்து, அதில் ஒரு கைப்பிடி கறிவேப்பிலையைச் சேர்த்து, இலைகள் கறுப்பாக மாறும் வரை பொரித்து, பின்னர் எண்ணெயை வடிகட்டி ஒரு பாட்டிலில் நிரப்பவும்.
எப்படி உபயோகிப்பது:
முடியின் வேர்களில் இந்த எண்ணெயை நன்கு மசாஜ் செய்து, காலையில் ஷாம்பூ கொண்டு கூந்தலை கழுவவும்.
மேலும் படிக்க | Fruits For Belly Fat : இடை சிறுத்து சிக்கென மாற வேண்டுமா? ‘இதை’ சாப்பிடுங்க!
2. வெங்காய எண்ணெய் | Onion oil
வெங்காய சாறு முடி வளர்ச்சியை அதிகரிக்க உதவும். இது முடியின் வேர்களுக்கு ஊட்டமளித்து வழுக்கையை குறைக்க உதவும்.
செய்முறை:
இரண்டு பெரிய வெங்காயத்தை துருவி, அதன் சாற்றை ஒரு கப்பில் எடுத்து, அதில் தேங்காய் எண்ணெயை கலந்து, சிறிது நேரம் கழித்து, ஒரு பாட்டிலில் நிரப்பி வைத்துக் கொள்ளவும்.
எப்படி உபயோகிப்பது:
இந்த எண்ணெயை முடியின் வேர்களில் தடவி ஒரு மணி நேரம் கழித்து ஷாம்பூவைக் கொண்டு மெதுவாகக் கழுவவும்.
3. வெந்தயம் மற்றும் கடுகு எண்ணெய் | Fenugreek and mustard oil:
வெந்தய விதைகள் முடியின் வேர்களை வலுப்படுத்தி, முடி உதிர்வதைத் தடுக்க உதவும். மறுபுறம் கடுகு எண்ணெய் முடிக்கு ஆழமான ஊட்டத்தை அளிக்கிறது.
செய்முறை:
ஒரு கப் கடுகு எண்ணெயை எடுத்து, அதில் இரண்டு ஸ்பூன் வெந்தயத்தை சேர்க்கவும், ஆறியவுடன், எண்ணெயை வடிகட்டி ஒரு பாட்டிலில் நிரப்பி வைத்துக் கொள்ளவும்.
எப்படி உபயோகிப்பது:
இந்த எண்ணெயை முடியின் வேர்களில் தடவி இரவு முழுவதும் ஊற வைத்து காலையில் ஷாம்பு கொண்டு கழுவவும்.
4. நெல்லிக்காய் மற்றும் தேங்காய் எண்ணெய் | Amla and coconut oil:
நெல்லிக்காய் முடிக்கு மிகவும் நன்மை பயக்கும். இது முடி வேர்களை பலப்படுத்துகிறது மற்றும் முடி உதிர்வை தடுக்க மிகவும் உதவியாக இருக்கும்.
செய்முறை:
ஒரு கப் தேங்காய் எண்ணெய் எடுத்துக் கொள்ளவும். அதில் உலர் நெல்லிக்காய் பொடியை கலந்து குறைந்த தீயில் சூடாக்கி, எண்ணெயை வடிகட்டி ஒரு பாட்டிலில் நிரப்பி வைத்துக் கொள்ளவும்.
எப்படி உபயோகிப்பது:
முடியின் வேர்களில் இந்த எண்ணெயை நன்கு மசாஜ் செய்து, காலையில் ஷாம்பூவால் கழுவவும்.
(பொறுப்பு துறப்பு: அன்புள்ள வாசகரே, எங்கள் செய்திகளைப் படித்ததற்கு நன்றி. இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | Dry Fruits For Muscle Strength: தொள தொள தசையை கல் போல வலிமையாக்க..‘இதை’ சாப்பிடலாம்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ