தொள தொள தசையை கல் போல வலிமையாக்க..‘இதை’ சாப்பிடலாம்!

Dry Fruits For Muscle Strength : நமது தசையை வலுவாக்குவதற்கு சில உணவு பொருட்கள் இருக்கின்றன. இதனால், நம் முழு உடலுக்கும் நன்மை கிடைக்கும். அவை என்னென்ன உணவுகள் தெரியுமா?

Dry Fruits For Muscle Strength : உடல் எடையை குறைப்பது எவ்வளவு முக்கியமான விஷயமோ, அதே போல நம் உடலை கட்டுக்கோப்பாக பார்த்துக்கொள்வதும், ஆரோக்கியமாக வைத்துக்கொள்வதும் மிகவும் முக்கியமாகும். தசைகளை வலிமையாக்குவதில் மட்டுமல்லாமல், உடலை வலிமை ஆக்குவதிலும் முக்கிய பங்காற்றும் உணவுகளுள் ஒன்று, உலர் பழங்கள். இதில், எந்தெந்த பழங்களை சாப்பிட்டால் ஹெல்தியான முறையில் தசைகளை வலிமையாக்கலாம்? இங்கு பார்ப்போம். 

1 /8

உலர் பழங்களை உங்கள் உணவில் சேர்த்துக்கொள்ள ஆரம்பித்தால், பல்வேறு வைட்டமின் சத்துகள் உங்கள் உடலை வந்து சேரும். இதனுடன் சேர்த்து, சீரான உணவு மற்றும் உடற்பயிற்சி மூலம் உங்கள் கால்சியம் அளவை மேம்படுத்திக்கொள்ளலாம். அப்படிப்பட்ட உலர் பழங்களை இந்த பட்டியலில் பார்க்கலாம். 

2 /8

உலர் திராட்சைகள்: உடலில் புரத சத்தை அதிகரிப்பதில் மிக முக்கிய பங்காற்றுகின்றன, உலர் திராட்சைகள். இவற்றை தண்ணீரில் ஊற வைத்து சாப்பிட்டால் இன்னும் பல பலன்கள் கிடைக்கும். 

3 /8

கடலை: ஆரோக்கியமான முறையில் உடல் எடையை அதிகரிக்க நினைக்கும் மக்கள், கடலையை தங்கள் டயட்டில் முக்கிய உணவாக எடுத்துக்கொள்கின்றனர். இதில் ஆரோக்கியமான கொழுப்பு மற்றும் கனிமங்கள் உள்ளதாக கூறப்படுகிறது.

4 /8

அத்திப்பழம்: உலர் அத்திப்பழம் சாப்பிடுவதற்கு இனிப்பாக இருந்தாலும், இதில் அத்தனை புரத சத்துகள் அடங்கியிருக்கின்றன. இதில், மொத்தம் 55 முதல் 100 மில்லிகிராம் கால்சியம் சத்துகள் நிறைந்திருக்கிறது.

5 /8

ஆப்ரிக்காட் பழங்கள்: உலர்ந்த ஆப்ரிகாட் பழங்கள், கர்ப்ப காலத்தில் எடுத்துக்கொள்வதற்கு ஏதுவான ஸ்நாக்ஸ் ஆகும். இதில் புரத சத்துகளும், வைட்டமின் சத்துகளும் நிறைந்து காணப்படுகின்றன. 

6 /8

பேரிச்சம்பழம்: அதிக கனிம சத்துகள் மற்றும் வைட்டமின் சத்துகள் நிறைந்த ஸ்நாக்ஸ்களுள் ஒன்று, பேரிச்சம்பழங்கள். இதில் ஆண்டி ஆக்சிடண்ட்ஸ் சத்துகளும் இருக்கின்றன

7 /8

முந்திரி: முந்திரியில் புரதம், ஃபைபர் மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகள் ஆகியவை அடங்கியிருக்கின்றன. இவை, ரத்தத்தில் கலந்திருக்கும் சர்க்கரை அளவையும் குறைக்க உதவுவதாக கூறப்படுகிறது. 

8 /8

பாதாம்: பாதாம், தசையை வலிமையாக்குவதோடு மட்டுமன்றி, உடலுக்கு நன்மை பயக்கும் பல சத்துகளையும் கொண்டு வந்து சேர்க்கின்றன. இதில் காப்பர் மற்றும் மாங்கனீஸ் சத்துகளும் இருக்கின்றன.  (பொறுப்பு துறப்பு: அன்புள்ள வாசகரே, எங்கள் செய்திகளைப் படித்ததற்கு நன்றி. இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)