இந்த சினிமா நடிகை போல் அழகான கூந்தல் வேண்டுமா, அப்போ இத ட்ரை பண்ணுங்க
Home Remedies For Hair Care: சில வீட்டு வைத்தியங்கள் முடியை அழகு படுத்துவதில் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். வீட்டில் சமையலறையில் வைத்திருக்கும் சில பொருட்களை தலைமுடியில் தடவுவதன் மூலம் பொடுகு மற்றும் பிற முடி பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம்.
அழகான கூந்தல் அனைவரையும் கவர்ந்திழுக்கும். பொதுவாக பெண்கள் நீளமான கூந்தலை அதிகவும் விரும்புகிறார்கள், ஆனால் நீண்ட கூந்தலைப் பெறுவது என்பது எளிதானது அல்ல. அதேபோல் பொடுகு என்பது நீளமான முடி பெற செய்ய முடியாமல் தடைக்கும் ஒரு விஷயமாகும். ஏனெனில் பொடுகு முடியின் வேர்களில் அடைப் போல் ஒட்டிக்கொண்டு, அவற்றை வலுவிழக்கச் செய்கிறது. எனவே நீங்கள் நீண்ட மற்றும் அழகான கூந்தலை விரும்பினால், அதற்கு முதலில் பொடுகை வேரிலிருந்து அகற்றப்பட வேண்டும். அந்தவகையில் அழகான, நீளமான, அடர்த்தியான மற்றும் பளபளப்பான கூந்தலைப் பெற விரும்பினால், இங்கே கொடுக்கப்பட்டுள்ள சில வீட்டு வைத்தியங்களை பின்பற்றி வாருங்கள்.
வெந்தயம்
வெந்தயம் முடிக்கு மிகவும் நன்மை பயக்கும். இதில் முடிக்கு நன்மை செய்யும் பல மருத்துவ குணங்கள் உள்ளன. எனவே பொடுகுத் தொல்லையை அடியோட நீக்க வெந்தயத்தை தண்ணீரில் ஊறவைத்து தலைமுடியில் தடவவும். அத்துடன் வெந்தயம் முடியை வலிமையாக்கி வளர்ச்சிக்கு உதவுகிறது.
வேம்பு
வேப்பங்கொட்டையில் பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் பூஞ்சை எதிர்ப்பு பண்புகள் உள்ளன, இது முடியில் சேரும் அழுக்குகளை சுத்தம் செய்யும். எனவே தலைமுடிக்கு வேப்பம்பூ நீரை தடவினால் பொடுகு பிரச்சனை நீங்கும். இந்த நீரால் தலைமுடியைக் கழுவுவதும் முடியில் ஏற்படும் அரிப்பை நீக்க உதவும்.
பூண்டு
பூண்டில் உள்ள ஊட்டச்சத்துக்கள் முடிக்கு நன்மை பயக்கும். பூண்டு பொடுகு பிரச்சனையை சரி செய்ய உதவுகிறது. எனவே பூண்டை அரைத்து அதன் விழுதை சிறிது தண்ணீரில் கலந்து முடியின் வேர்களில் தடவவும். இப்படி பூண்டை தடவினால் முடியில் உள்ள பொடுகு தொல்லை நீங்கும். பூண்டை கடுகு எண்ணெயில் சூடாக்கியும் தடவி வரலாம்.
தேங்காய் எண்ணெய்
தேங்காய் எண்ணெய் முடிக்கு மிகவும் நன்மை பயக்கும். தேங்காய் எண்ணெய் தடவினால் பொடுகு பிரச்சனை நீங்கும். இதற்கு சுத்தமான தேங்காய் எண்ணெயைப் பயன்படுத்தவும், இது முடி வளர்ச்சிக்கு உதவும். அதேபோல் பளபளப்பான கூந்தலுக்கு மல்லிகைப் பூவை தேங்காய் எண்ணெயில் கலந்து தடவவும்.
(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. அதை ஏற்றுக்கொள்ளும் முன் மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.)
மேலும் படிக்க | சர்க்கரை வியாதி இருக்கா? கண்களுக்கு இந்த பாதிப்புகள் வரலாம்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ