Heart Attack: மாரடைப்பு அபாயத்தை குறைக்க கவனத்தில் கொள்ள வேண்டிய ‘முக்கிய’ விஷயங்கள்!

Cholesterol & Heart Attack: கடந்த சில காலங்களாக இதய நோய் மற்றும் மாரடைப்பால் உயிரிழந்த இளைஞர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. 

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Dec 5, 2022, 12:19 PM IST
  • கொலஸ்ட்ரால் என்பது அழுக்குகளின் திரட்சியாகும்.
  • இதயத்திற்கான ரத்த ஓட்ட பாதையை அடைப்பதால், இதயத்தில் அழுத்தம் அதிகரிக்கத் தொடங்குகிறது.
  • கொலஸ்ட்ரால் இரண்டு வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது.
Heart Attack: மாரடைப்பு அபாயத்தை குறைக்க கவனத்தில் கொள்ள வேண்டிய ‘முக்கிய’ விஷயங்கள்! title=

கடந்த சில காலங்களாக இதய நோய் மற்றும் மாரடைப்பால் உயிரிழந்த இளைஞர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இவர்களில் பெரும்பாலோர் பிட்ன்ஸ் பற்றி மட்டும் விழிப்புடன் இருக்கவில்லை, வழக்கமான உடற்பயிற்சி போன்றவற்றிலும் ஈடுபட்டுள்ளனர் என்பது மேலும் அதிர்ச்சி அளிக்கும் செய்தி. உண்மை என்னவென்றால், இதயத்தை பொறுத்தவரை, உடல் நலம் மோசமடைவதற்குப் பல காரணங்கள் இருக்கலாம். இவற்றில் கொலஸ்ட்ரால் முக்கியமாக உள்ளது.

இதய ஆரோக்கியம் என்று வரும் போது, இதய நோயால் பாதிக்கப்பட்டவர்கள் கொலஸ்ட்ரால் அளவை சீராக வைத்திருக்க வழக்கமான மருந்துகளும் கொடுக்கப்படுகின்றன. கொலஸ்ட்ரால் என்பது அழுக்குகளின் திரட்சியாகும். அது திரண்டு கெட்டியாகி இதயத்திற்கான ரத்த ஓட்ட பாதையை அடைப்பதால், இரத்தமும் ஆக்ஸிஜனும் சரியாக உடலுக்குச் செல்லாமல் இதயத்தில் அழுத்தம் அதிகரிக்கத் தொடங்குகிறது. இந்த நிலை இதயத்திற்கு உள் சேதத்தை ஏற்படுத்தும். அதோடு மாரடைப்பு போன்றவற்றை ஏற்படுத்தி உயிருக்கு எமனாக ஆகலாம். 

கொலஸ்ட்ரால் இரண்டு வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது - நல்ல கொலஸ்ட்ரால் அல்லது கொழுப்பு அதாவது HDL மற்றும் கெட்ட கொழுப்பு அதாவது LDL. இதில், நல்ல கொழுப்பின் அளவு 60 அல்லது அதற்கு மேல் இருக்க வேண்டும், கெட்ட கொலஸ்ட்ரால் அளவு 100க்கு குறைவாக இருக்க வேண்டும். உடலில் மொத்த கொலஸ்ட்ராலின் அளவு 200க்குள் இருக்க வேண்டும். எனினும் இந்த அளவு உடல் அமைப்பு, நிலை மற்றும் பாலினம் போன்றவற்றையும் சார்ந்துள்ளது. ஆனால் சராசரியாக, 200க்குள் நல்ல கொலஸ்ட்ரால் அளவு சரியாக இருந்தால், சரியான அளவாக கருதப்படுகிறது.
 
கொலஸ்ட்ரால் அளவை சரிபார்க்க லிப்பிட் பரிசோதனை பயன்படுத்தப்படுகிறது. உடலில் கொலஸ்ட்ரால் சீரான அளவில் இருப்பதும் அவசியம். இரத்தத்தில் அதன் அளவு அதிகரிக்கத் தொடங்கும் போது, தமனிகளின் சுவர்களில் கொழுப்பு குவிந்து, சேதத்தை ஏற்படுத்துகிறது. இதனை கவனிக்காமல் அலட்சியம் செய்தால், பின்னர் மாரடைப்பு அல்லது பக்கவாதம் போன்ற பிரச்சனைகள் உயிருக்கு எமனாக வந்து சேரும். கொலஸ்ட்ரால் அளவைப் பற்றி குறிப்பாக விழிப்புடன் இருக்குமாறு மருத்துவர்கள் கூறுவதற்கு இதுவே காரணம்.

கொலஸ்டிராலை கட்டுக்குள் வைக்க செய்ய வேண்டியவை: 

1. சாப்பிடுவது, தூங்குவது, வேலை செய்வது, உடற்பயிற்சி செய்வது என எல்லாவற்றிலும் ஒழுங்குமுறையை கடைபிடிக்க வேண்டும். 

2. வெள்ளரி, ஆப்பிள், பப்பாளி, தயிர், மோர், கேரட் போன்றவற்றை தினமும் ஒரு முறையாவது உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

3. எப்பொழுதும் எடையை சீராக வைத்திருங்கள், குறிப்பாக தொப்பை கொழுப்பை தவிர்க்கவும்
புகைபிடிக்கும் பழக்கத்தை உடனடியாக கைவிட முயற்சி செய்யுங்கள்.

மேலும் படிக்க | கெட்ட கொலஸ்ட்ரால் இருந்தா அவ்வளவுதான்...உடனே இதச் செய்யுங்க

4. பதப்படுத்தப்பட்ட உணவுகளில் இருந்து விலகி இருப்பதோடு, பஜ்ஜி, பக்கோடா போன்றவற்றை மிகக் குறைவாகவே சாப்பிடுங்கள். மாதம் ஒருமுறை எண்ணெய் பண்டங்களை சாப்பிடுவதால் ஒன்றும் ஆகாது. ஆனால், அதனை வழக்கமாக வைத்திருக்க கூடாது.

5. நீங்கள் இரவு ஷிப்டில் வேலை செய்தால், இரவு உணவை சுமார் 6 மணிக்குள் சாப்பிட்டு விடவும். இதன் பிறகு 8 மணி வரை பால், பழங்கள் போன்றவற்றை உண்ணலாம். 

 6. இரவு உணவிற்குப் பின் உடனடியாக தூங்கக் கூடாது. சிறிது நேரம் நடக்கவும்.

மேலும் படிக்க | நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தும் நெல்லிக்காய் ‘4’ நோயாளிகளுக்கு மட்டும் எதிரி 

7. தினை, வெல்லம், தவிடு உள்ள கோதுமை மாவு போன்ற நார்சத்து நிறைந்த தானியங்களை உணவில் சேர்ப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.

8. உங்களுக்கு ஏற்கனவே அதிக கொலஸ்ட்ரால், உடல் பருமன் போன்ற பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டிருந்தால் முதலில் உணவைக் கட்டுப்படுத்துங்கள்.

9. வருடாந்தர பரிசோதனைகளில் எப்போதும் கவனம் செலுத்துங்கள், நீரிழிவு மற்றும் பிபியை கட்டுக்குள் வைப்பதற்கான மருந்துகள் உங்களுக்கு வழங்கப்பட்டிருந்தால், அவற்றை சரியான நேரத்தில், சரியான அளவில், தவறாமல் எடுத்துக் கொள்ளுங்கள்.

10. நிறைய தண்ணீர் குடிக்கவும், போதுமான தூக்கம் மற்றும் தியானம் போன்ற நுட்பங்களைப் பின்பற்றி மன அழுத்தத்தைத் தடுக்க முயற்சிக்கவும்.

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை ஏற்றுக்கொள்வதற்கு முன்னர் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறுங்கள். ஜீ மீடியா இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.)

மேலும் படிக்க | சர்க்கரை வியாதி இருக்கா? கண்களுக்கு இந்த பாதிப்புகள் வரலாம்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News