உடல் எடையை குறைப்பது எப்படி என்ற கேள்வி இன்று மிகவும் பிரபலமாக இருக்கிறது. உடல் எடையை குறைக்க பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம். ஆனால், அவற்றில் எது பயன் தருகிறது என்பதை பொறுத்து நாம் அந்த வழியை பின்பற்ற வேண்டும்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஆயுர்வேத முறைப்படி உடல் எடையை குறைக்க முயற்சிக்கும்போது, கலோரிகள் குறைவதோடு, மனநலம் மேம்படும், மன அழுத்தம் குறையும், வாழ்க்கை முறை சீராகும்.  எந்தவித பக்கவிளைவுகளும் இல்லாத ஆயுர்வேதம் காட்டும் உணவு வழிமுறைகளை பின்பற்றுவது பாதுகாப்பான உடல் எடை குறைப்புக்கு நல்லது.


5,000 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவில் தோன்றிய ஆரோக்கியமான ஆயுவேத முறை பெரும்பாலும் இயற்கை மூலிகை மருந்துகளின் அடிப்படையிலேயே அறிவுரைகளை சொல்கிறது. ஆயுர்வேதம் உடலின் நச்சுத்தன்மையை போக்க உதவுகிறது. வளர்சிதை மாற்றத்தை துரிதப்படுத்துகிறது.  


Also Read | Easy Weight Loss: உடல் எடையை குறைக்க உடற்பயிற்சி தேவையில்லை தெரியுமா?


மதிய நேரத்தில் ஆரோக்கியமான, அதிக அளவிலான உணவை உட்கொள்ள பரிந்துரைக்கும் ஆயுர்வேதம், இரவு நேரத்தில் உணவை சுருக்கச் சொல்கிறது. தினசரி உட்கொள்ளும் கலோரிகளின் அதிகபட்ச அளவை பிற்பகலில் உட்கொள்வது ஊட்டச்சத்துக்கள் உடலில் சேர உதவும்.  செரிமானக் கோளாறுகள் ஏற்படாது.  


மதிய உணவில் புரதம், கொழுப்பு, கார்போஹைட்ரேட் ஆகிய மூன்று அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நிரம்பியிருக்க வேண்டும். அரிசி, பருப்பு, கறி மற்றும் சாலட் போன்றவை சாப்பிடலாம். அதேபோல் மதிய உணவில் கொஞ்சம் நெய் மற்றும் தயிர் சேர்க்கவும். 


நாளொன்றுக்கு 2-3 லிட்டர் வெதுவெதுப்பான நீரை குடிப்பதால் உடலில் உள்ள கொழுப்புகள் கரைந்து, அவை எளிதான மூலக்கூறுகளாக மாறும். குளிர்ந்த நீருடன் ஒப்பிடும்போது, சூடான நீர் உங்கள் வளர்சிதை மாற்றத்தையும் ஹைட்ரேட்டுகளையும் அதிகரிக்கிறது. உணவு உண்பதற்கு 30 நிமிடங்களுக்கு முன்பு ஒரு கிளாஸ் வெந்நீர் பருகுவது பசியைக் கட்டுப்படுத்தும்.  


Also Read | Health: உணவில் அதிக உப்பு சேர்வதை தெரிந்துக் கொள்ள எளிய வழி! 


அதிக அளவிலான திரவ உணவுகளை உட்கொண்டால், கொழுப்பை எரிக்கும் செயல்முறை விரைவாகும். அதேபோல, வறுத்த வெந்தயத்தை பொடி செய்து வைத்துக் கொண்டு தினசரி காலையில் வெறும் வயிற்றில் மென்று சாப்பிடலாம் அல்லது தண்ணீரில் சேர்த்தும் பருகலாம். வெந்தயம் செரிமானத்திற்கு உதவுவதோடு மலச்சிக்கலையும் தடுக்கிறது. மூன்று ஆயுர்வேத மூலிகைகளின் கலவையான திரிபலா, வளர்சிதை மாற்றத்தை அதிகரிப்பதோடு, உடலில் இருக்கும் நச்சுகளை அகற்றும். 


எடையை குறைக்க விரும்பினால், வீட்டில் சமைத்த உணவை மட்டுமே சாப்பிட வேண்டும். வீட்டில் சமைத்த உணவில் கொழுப்புச் சத்து குறைவாக இருக்கும், கடைகளில் கிடைக்கும் உணவை விட ஆரோக்கியமானது வீட்டு சமையல். உணவில் அதிக காய்கறிகளையும், பயறு வகைகளையும், தானியங்களையும் சேர்க்க வேண்டும் என ஆயுர்வேதம் பரிந்துரைக்கிறது.


பொதுவாக அசைவ உணவுகள் இதயத்திற்கு சிக்கலை ஏற்படுத்தும் என்பதால், அதை தவிர்க்கலாம். சாப்பிட்ட பிறகு நடைப்பயிற்சி சுறுசுறுப்பாக இருக்க உதவுகிறது. வெறும் உணவு கட்டுப்பாடு மட்டுமே உடல் எடையை குறைக்க உதவாது. டயட் மற்றும் உடற்பயிற்சி இணைந்தே உடல் எடையை குறைக்க உதவும். குறைந்தது நாள்தோறும் 15 நிமிடங்களாவது நடை பயிற்சி அல்லது யோகா பயிற்சி செய்வது ஆரோக்கியமான எடை குறைப்புக்கு உதவும்.


 Also Read | Benefits of Neem: நோய் எதிர்ப்பு சக்தியின் பிறப்பிடம் வேப்பிலையின் இனிக்கும் ஆரோக்கியம் 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.


Android Link: https://bit.ly/3hDyh4G


Apple Link: https://apple.co/3loQYeR