Easy Weight Loss: உடல் எடையை குறைக்க உடற்பயிற்சி தேவையில்லை தெரியுமா?

கொரோனாவில் இருந்து மீண்டவர்கள், நல்ல சத்தான உணவுகளை உண்ண வேண்டும், கடினமான உடற்பயிற்சிகளை செய்ய முடியாது என்ற நிலையில் உடல் எடை அதிகரித்துக் கொண்டே போனால், அதுவும் பிரச்சனைகளை ஏற்படுத்தும்

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Malathi Tamilselvan | Last Updated : Jul 18, 2021, 03:29 PM IST
  • உடல் எடையை குறைக்க உடற்பயிற்சி தேவையில்லை
  • உடற்பயிற்சி செய்ய முடியாதவர்கள் எப்படி எடையை கட்டுக்குள் வைப்பது?
  • உணவு முறையில் சில மாற்றங்களே போதும்
Easy Weight Loss: உடல் எடையை குறைக்க உடற்பயிற்சி தேவையில்லை தெரியுமா? title=

ஆரோக்கியமாக இருப்பது என்பது இன்றைய காலகட்டத்தில் கேள்விக்குறியாகிவிட்டது. அதிலும் கொரோனா பெருந்தொற்று காலத்தில் உடல் ஆரோக்கியத்தை பராமரிப்பது மிகவும் அவசியமானது. ஆரோக்கியத்தில் முக்கிய பங்கு வகிப்பது உடல் எடை. 

உடல் எடையை கட்டுப்படுத்துவதற்கு பல்வேறு முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டியிருக்கிறது. குறைந்த கலோரி கொண்ட உணவுகளை சாப்பிடுவது எடை இழப்புக்கு நல்லது. 

எந்தவொரு முயற்சியையும் செய்யாமலேயே வேலையையும் செய்யாமல் உடல் எடையை குறைக்க முடியாது. உடற்பயிற்சி செய்வது, கொழுப்பு மற்றும் கலோரி குறைவான உணவை உண்பது, நடைபயிற்சி என பல்வேறு வழிகள் மூலம் உடல் எடையை கட்டுக்குள் கொண்டுவரலாம். ஆனால், கொரோனா போன்ற நோய்த்தொற்று ஏற்பட்டு குணமடைந்தவர்கள் என்ன செய்ய முடியும்?

கொரோனாவில் இருந்து மீண்டவர்கள், நல்ல சத்தான உணவுகளை உண்ண வேண்டும், கடினமான உடற்பயிற்சிகளை செய்ய முடியாது என்ற நிலையில் உடல் எடை அதிகரித்துக் கொண்டே போனால், அதுவும் பிரச்சனைகளை ஏற்படுத்தும்.

Also Read | கோதுமையை விட 6 மடங்கு நார்ச்சத்து கொண்ட குதிரைவாலியின் நன்மைகள்

வெளி உணவுகளை தவிர்ப்பது உடல் எடையை குறைப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது.  பொதுவாக ஹோட்டலில் நாம் சாப்பிடும் உணவு சுவையாக இருந்தாலும், அது எந்த அளவுக்கு ஆரோக்கியமானது என்பது கேள்விக்குறி. சுவையாக இருக்க வேண்டும், விரைவில் வீணாகிவிடக்கூடாது என்பதற்காக உணவகங்களில் மசாலாக்கள், எண்ணெய் மற்றும் பதப்படுத்தும் பொருட்களை சேர்ப்பார்கள். அது பல்வேறு உடல் நல சிக்கல்களுக்கு வழிவகுக்கும்.

ஆனால் வீட்டில் தயாரிக்கும் உவில் என்னென்ன பொருட்களை சேர்க்கிறோம் என்பது நன்றாகாத் தெரியும். நமக்குக் ஒத்துக் கொள்ளாத பொருட்களையும், கொழுப்பு பொருட்களையும் தவிர்ப்போம். வீட்டில் உணவு தயாரிக்கும்போது கிடைக்கும் மற்றுமொரு நன்மை என்ன தெரியுமா? சமைப்பதற்காக செய்யும் வேலைகளே உடற்பயிற்சியாக மாறிவிடும். மனமும் திருப்தியடையும்.

அதேபோல் சமைத்த உணவை கவனத்துடனும் மெதுவாகவும் சாப்பிட வேண்டும். உணவை விரைவாக சாப்பிடுவது என்பது வெறும் பசிக்காக சாப்பிடுவது. அப்போது உண்ணும் உணவின் அளவும் உணவை அதிகமாகிவிடும். எனவே, மெதுவாக சாப்பிடுங்கள்.  

நம்மைச் சுற்றி ஆரோக்கியமான உணவு பொருட்களே இருக்க வேண்டும். இது மனோரீதியிலான நன்மைகளையும் கொடுக்கும். ஆரோக்கியமற்ற எண்ணெய், பதப்படுத்தப்பட்ட உணவுகளை தவிர்த்து விட்டு, முடிந்தவரை ஆரோக்கியமான உணவுகளுக்கு மாறுவதை உறுதிசெய்யுங்கள்.

Also Read | Healthy Food: ராகியை நீங்கள் மிஸ் செய்தால் ஆரோக்கியம் உங்களுக்கு டாட்டா காட்டும்!

உடல் எடையை சரியாக பராமரிப்பது என்பது, ஹார்மோன் ஏற்றத்தாழ்வு மற்றும் மூளையில் அதிகரிக்கும் மன அழுத்தத்தின் அளவோடு நேரடியாக இணைந்துள்ளது. உடல் எடை அதிகமாக இருந்தால், தூக்கமின்மை, மன அழுத்தம், ஹார்மோன் ஏற்றத்தாழ்வை உருவாக்கும். இது எடை இழப்பு செயல்முறைக்கு இடையூறாக இருப்பதோடு, எடையை மேலும் அதிகரிக்கும்.

மன அழுத்தம் ஏற்படுவதை உணர்ந்தால், நீர் அருந்துவதை அதிகரிக்கவும். அதோடு, மிதமான சூரிய ஒளிக்கு செல்லவும். நீர் மற்றும் வைட்டமின் டி இரண்டுமே எடை இழப்பை துரிதப்படுத்தும் இரண்டு முக்கிய காரணிகள்.

அடுத்ததாக சிற்றுண்டி அதாவது தீனி சாப்பிடும் பழக்கத்தை கட்டுப்படுத்தவும். வேலையில்லாமல் சும்மா இருக்கும்போதும், தொலைகாட்சி பார்க்கும்போதும் சிற்றுண்டிகளை சாப்பிடுவது உங்களுக்கு பிடித்திருக்கிறதா?

ஆனால் அந்த பழக்கத்தை மாற்ற வேண்டிய நேரம் இது. சிற்றுண்டி பழக்கத்தை அடக்க முடியாத நிலையில், பழம், உலர்ந்த பழம், முளைக்கட்டிய பயிர்கள், குறைந்த கலோரி நொறுக்குத் தீனிகளை சாப்பிடவும். எடை இழப்பு என்பது மிகவும் கடினமானது அல்ல.

Also Read | சிறுதானியங்களின் முடிசூடா மன்னன் கம்பு, நோய்களுக்கு இது தரும் வம்பு

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Trending News