கொரோனாவின் இரண்டாவது அலை (கோவிட் -19 தொற்றுநோய்) நாட்டில் லட்சக்க்கணக்கான உயிர்களை பரித்துக் கொண்டது. கொரோனாவின் அலை, நாட்டையே உலுக்கியது. கொரோனாவின் இரண்டாவது அலையில் இளைஞர்கள் அதிக அளவில் பாதிக்கப்பட்டனர்.
தற்போது மூன்றாம் அலை வரும் அபாயங்களும் இருக்கிறது. இதுபோன்ற சூழ்நிலையில் கொரோனா வைரஸிலிருந்து பாதுகாத்துக் கொள்ள நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பது மிகவும் முக்கியம். உடற்பயிற்சி, யோகா மற்றும் உணவு மூலம் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கலாம்.
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதற்காக மக்கள் பல்வேறு உணவுகளை உட்கொள்கின்றனர். இருப்பினும், இயற்கை அளித்த வரப்பிரசாதம் ஒன்று இருக்கிறது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வேப்பிலையை விட சிறந்த அருமருந்து வேறு எதுவும் கிடையாது. உணவில் வேப்பமரத்தின் இலைகளைப் பயன்படுத்துவதால் பல நன்மைகள் கிடைக்கும்.
ALSO READ | Easy Weight Loss: உடல் எடையை குறைக்க உடற்பயிற்சி தேவையில்லை தெரியுமா?
ஆயுர்வேதத்தில், வேப்பிலைகளின் பல நன்மைகளை பட்டியலிட்டு காட்டியுள்ளனர். ஒரு வாரத்திற்கும் மேலாக இருமல் இருந்தால், வேப்பிலையை சர்க்கரை அல்லது சோளத்துடன் சேர்த்து உட்கொள்ளலாம். இது இருமலில் இருந்து அற்புதமான நிவாரணம் தரும்.
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வேப்ப இலைகள் முக்கியமாக பயன்படுத்தப்படுகின்றன. வேப்பிலைகள் ஒரு சிறந்த நோய் எதிர்ப்பு சக்தி பூஸ்டராக கருதப்படுகின்றன. 130 க்கும் மேற்பட்ட உயிரியல் சேர்மங்களைக் கொண்டுள்ள வேப்பிலை நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுவாக வைத்திருக்க வேலை செய்கிறது.
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க மட்டுமல்ல. பல்வேறு நோய்களைத் தவிர்க்கவும் வேப்பிலை உதவுகிறது. நீரிழிவு நோயாளிகள், வெற்று வயிற்றில் தினசரி காலைவேளையில் வேப்பிலைகளை மென்று தின்றால் சர்க்கரை நோய் ஓடிப்போகும்.
Also Read | Health: உணவில் அதிக உப்பு சேர்வதை தெரிந்துக் கொள்ள எளிய வழி!
வேப்பிலையில் நிறைந்துள்ள மருத்துவ குணங்கள் ரத்தத்தை சுத்திகரிக்க உதவுகிறது. வேப்பிலை மரத்தின் பூக்கள், இலைகள், பட்டைகள் என ஒவ்வொரு பாகங்களும் மருத்துவ குணங்களை கொண்டவை.
வேப்ப மரத்தின் குச்சிகள் (வேப்பங்குச்சி) கொண்டு பல் துலக்கி வந்தால் பற்களில் உள்ள பாக்டீரியாக்களால் எந்த சேதமும் வராது, பற்சொத்தை வராது. வேப்பம்பூக்கள் பித்தநீர் குழாய் பாதிப்புக்கு சிகிச்சை அளிக்க பயன்படுகிறது. வேப்பிலையில் உள்ள ஆன்டி பாக்டீரியல், அழற்சி எதிர்ப்பு பண்புகள், பல்வேறு நன்மைகளைக் கொடுக்கிறது.
தினமும் காலையில் வேப்பிலை சாற்றை குடித்து வந்தால் செரிமான பிரச்சினைகள் ஏற்படாது. வயிற்று வீக்கம், வாயு மற்றும் வயிற்று மந்தம், மலச்சிக்கல் போன்ற பிரச்சினைகளும் ஏற்படாது.
வேப்பிலையில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள், அல்சர், பெப்டிக் புண்கள், வாய்ப் புண்கள் போன்றவற்றை குறைக்கிறது. இதிலுள்ள பயோஆக்டிவ் சேர்மங்கள் திசு உருவாக்கத்தையும், சேதமடைந்த திசுக்களை மீட்கவும் உதவுகிறது. வேப்பிலையை காயத்தின் மீது பற்று போட்டால், காயங்கள் விரைவில் ஆறிவிடும்.
Also Read | உட்கார்ந்த நிலையில் நீண்ட நேரம் வேலை செய்தால் இத்தனை நோய்கள் வருமா?
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR