ஓமிக்ரான் ஒருவரை எத்தனை முறை பாதிக்கும்? அச்சுறுத்தும் ஆய்வுகள்
அதிகரித்து வரும் கொரோனா வைரஸின் பரவலின் காரணமான ஓமிக்ரான் பிறழ்வு குறித்து ஒரு புதிய விஷயம் கவலையளிக்கிறது...
புதுடெல்லி: கோவிட்-19: நாட்டில் கொரோனா பாதிப்பு வேகமாக அதிகரித்து வருகிறது. பாதிப்பு எண்ணிக்கை தினசரி மூன்று லட்சத்தைத் தாண்டியுள்ளது. இந்த அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பின்பின்னணியில் ஓமிக்ரான் மாறுபாடு உள்ளது.
இது போன்ற ஒரு மாறுபாடு, பரவும் தொற்றுநோயைப் பொறுத்தவரை, இது டெல்டா மாறுபாட்டை விட ஆபத்தானது, இது இதுவரை மிகவும் அழிவை ஏற்படுத்தியது. ஆன்டிபாடிகளை மீறி செயல்படும் ஒமிக்ரான் மாறுபாடு மிகப்பெரிய பிரச்சனையாக உள்ளது.
அந்த ஆன்டிபாடிகள், தடுப்பூசி போடப்பட்டதால் உருவானதாக இருந்தாலும் சரி, கொரோனா தொற்று காரணமாக உருவாக்கப்பட்டதாக இருந்தாலும் அது ஒமிக்ரானை கட்டுப்படுத்துவதில் ஒரு குறிப்பிட்ட அளவுதான் உதவுகிறது.
அதனால்தான், தொற்றால் ஏற்கனவே பாதிக்கப்பட்டவர்களும், தடுப்பூசி பாதுகாப்புப் பெற்றவர்களும் ஒமிக்ரானால் பாதிக்கப்படுகின்றன.
ALSO READ | Omicron: ஒமிக்ரானின் இருந்து உங்களை காக்கும் 'கவச' உணவுகள்...!!
ஒரே நபருக்கு எத்தனை முறை தொற்று ஏற்படலாம்
கொரோனா வைரஸின் முதல் மற்றும் இரண்டாவது அலையில், ஒரே நபருக்கு இரண்டு முறை கொரோனா தொற்று ஏற்பட்டது தெரியவந்தது.
எனவே, ஓமிக்ரான் ஒரு நபரை எத்தனை முறை பாதிக்கும் என்பது இப்போது கேள்வி. கொரோனா தொற்று ஒருவரை மீண்டும் தொற்றும் ஆபத்து இருப்பது தொடர்பான ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
அதன் முடிவுகள் அதிர்ச்சியளிக்கின்றன. டெல்டா மாறுபாட்டை விட 4 மடங்கு அதிக அளவு பாதிக்கும் தன்மையை ஒமிக்ரான் கொண்டுள்ளது. எனவே, ஒரே நபருக்கு 2 முறை ஓமிக்ரான் தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்பு உள்ளது.
Omicron ஆன்டிபாடிகளைத் தடுக்கும் திறனைக் கொண்டிருப்பதால், ஏற்கனவே பாதிக்கப்பட்டவர்களையும் மீண்டும் பாதிக்கிறது. எனவே, தடுப்பூசியின் இரண்டு டோஸ்களையும் எடுத்துக் கொண்டவர்களும் பாதிக்கப்படுகின்றனர்.
ALSO READ | கொரோனாவின் இறுதிச்சுற்று! மருத்துவ நிபுணரின் இனிப்பான செய்தி
ஓமிக்ரானிலிருந்து பாதுகாப்பதற்கான வழிகள்
அரசு வெளியிட்டுள்ள அறிவுரையின்படி, Omicron ஐ தவிர்க்க அவசியம் ஏற்பட்டால் மட்டுமே வீட்டை விட்டு வெளியே செல்லவேண்டும். வெளியே செல்லும் அவசியம் ஏற்பட்டால், இரட்டை முகக்கவசங்களை பயன்படுத்தவும்.
கைகளை அடிக்கடி சுத்தப்படுத்தவும். உணவு உண்ணும் முன் கைகளை சோப்பினால் நன்கு கழுவ வேண்டும். கண்கள், வாய் அல்லது முகத்தை முகத்தை தொடுவதை தவிர்க்கவும்.
கோவிட்-19 இன் ஓமிக்ரான் மாறுபாடு இந்தியாவில் சமூகப் பரவல் நிலையில் உள்ளது மற்றும் புதிய வழக்குகள் அதிவேகமாக அதிகரித்து வரும் பல பெருநகரங்களில் ஆதிக்கம் செலுத்துகிறது என்று INSACOG தனது சமீபத்தில் தெரிவித்துள்ளது.
(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. ஜீ மீடியா இதை உறுதிப்படுத்தவில்லை.)
ALSO READ | COVID-19 தொற்றுக்கு ஒமிக்ரான் முடிவுரை எழுதுமா; UK பேராசிரியர் கூறுவது என்ன...!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR