Dengue: நாடு முழுவதும் மழைக்காலம் தொடங்கிவிட்டது. பல மாநிலங்களில் கொசுக்களால் பரவும் டெங்கு நோயால் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். டெங்கு காய்ச்சல் ஏடிஸ் ஈஜிப்டி கொசுக்கள் கடிப்பதால் பரவும் வைரஸ் தொற்றால் ஏற்படுகின்றது. அதிக காய்ச்சல், தலைவலி, உடல் வலி, தசை வலி, தோல் வெடிப்பு ஆகியவை டெங்குவின் முக்கிய அறிகுறிகளில் அடங்கும்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நாடெங்கும் ஆட்டத்தை தொடங்கிய டெங்கு


- மகாராஷ்டிரா, கர்நாடகா மற்றும் கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் டெங்குவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது.


- கர்நாடகாவில் இந்த ஆண்டு இதுவரை 10,000 க்கும் மேற்பட்டோர் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளனர், 


- இதில் 8 பேர் இறந்துள்ளனர். 


- டெல்லி, ராஜஸ்தான், குஜராத் மாநிலங்களிலும் டெங்கு பாதிப்பு அதிகரித்து வருவதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 


- கடந்த 5 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இந்த ஆண்டு டெல்லியில் டெங்கு பாதிப்பு அதிகமாக உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 


டெங்கு அறிகுறிகள்:


டெங்கு அறிகுறிகளை சரியான நேரத்தில் கண்டறிந்து சிகிச்சையளிப்பது மிக முக்கியம். இதன் மூலம் அதன் தீவிர அபாயங்களைக் குறைக்க முடியும். டெங்குவின் அறிகுறிகள் சிலருக்கு லேசாகவும் சிலருக்கு தீவிரமாகவும் இருக்கலாம் என்று சுகாதார நிபுணர்கள் கூறுகின்றனர். 


பிளேட்லெட் எண்ணிக்கை குறைந்தால் அபாயம்


- உயிருக்கு ஆபத்தான பக்கவிளைவுகளைக் கொண்டுள்ள டெங்குவால் உள் இரத்தப்போக்கு ஏற்படும் அபாயமும் உள்ளது.


- பெரும்பாலான டெங்கு நோயாளிகளில், இரத்த பிளேட்லெட்டுகளின் எண்ணிக்கை குறையத் தொடங்குகிறது, 


- இப்படிப்பட்ட நிலைக்கு தீவிர கவனமும் சிகிச்சையும் தேவைப்படுகின்றது.


- பிளேட்லெட் எண்ணிக்கை 40 ஆயிரத்திற்கும் குறைவாக இருந்தால் அது ஒரு தீவிர நிலையாகக் கருதப்படுகிறது. 


- இப்படிப்பட்டவர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அவசர சிகிச்சை அளிக்கப்பட வேண்டும். 


Blood Platelet என்றால் என்ன?


பிளேட்லெட்டுகள் நமது இரத்தத்தில் இருக்கும் சிறிய செல் துண்டுகளாகும். அவை இரத்தக் கட்டிகளை உருவாக்க உதவுகின்றன. இவை இல்லாவிட்டால், ரத்தம் உறையாமல், அதிக இரத்தப்போக்கு ஏற்படும் அபாயம் ஏற்படுகின்றது. போன் மேரோவில் பிளேட்லெட்டுகள் தயாரிக்கப்படுகின்றன.


பிளேட்லெட்டுகளின் பயன்பாடு என்ன?


உடலில் ஏதாவது காயம் ஏற்பட்டால், ​​இந்த பிளேட்லெட்டுகள் (Blood Platelet) காயம் ஏற்பட்ட இடத்தில் கூடி, ஒரு பிளக் போல் செயல்பட்டு, உறைய வைக்கும் செயல்பாட்டில் இரத்தக் குழாய்களை அடைத்து, இரத்தம் உங்கள் உடலை விட்டு வெளியேறுவதைத் தடுக்கின்றன. டெங்கு நோயாளிகளின் உடலில் இந்த பிளேட்லெட்டுகளின் எண்ணிக்கை குறையத் தொடங்குகிறது.


பிளேட்லெட் எண்ணிக்கை எவ்வளவு இருக்க வேண்டும்?


- ஆரோக்கியமான நபரின் உடலில் பிளேட்லெட் எண்ணிக்கை (Blood Platelet Count) ஒரு மைக்ரோலிட்டர் இரத்தத்தில் 150,000 முதல் 450,000 பிளேட்லெட்டுகள் வரை இருக்கும். 


- டெங்குவால் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் உடலில் பிளேட்லெட் எண்ணிக்கை குறையத் தொடங்குவது வழக்கம். 


- பிளேட்லெட் எண்ணிக்கை 150,000 க்கும் குறைவாக போவது கவலைக்குரிய விஷயமாக கருதப்படுகிறது. 


- இந்த எண்ணிக்கை 50,000 -ஐ விட கீழே போனால், அது கடுமையான பிரச்சனைகளின் அறிகுறியாக பார்க்கப்படுகின்றது.


- இதில் உட்புற இரத்தப்போக்கு ஏற்படும் அபாயம் ஏற்படுகின்றது.


- இதன் காரணமாக டெங்குவால் தீவிர நிலையில் பாதிக்கப்படும் நோயாளிகளுக்கு பிளேட்லெட் மாற்ற வேண்டிய அவசியம் ஏற்படுகின்றது. 


மேலும் படிக்க | கெட்ட கொலஸ்ட்ரால் இருந்தால் இந்த ஆபத்தான நோய்களும் கூடவே வரும்: ஜாக்கிரதை


பிளேட்லெட் எண்ணிக்கையை எவ்வாறு அதிகரிப்பது?


= பிளேட்லெட் எண்ணிக்கை குறைந்தால் உடனடியாக மருத்துவ சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும். 


- சிகிச்சை மூலம் இரத்தப்போக்கு பிரச்சனை மற்றும் பிற அறிகுறிகளை கட்டுப்படுத்தலாம். 


= ஒமேகா -3, வைட்டமின்கள், இரும்புச்சத்து மற்றும் பிற தாதுக்கள் நிறைந்த உணவுகளை டயட்டில் அதிகம் சேர்த்துக்கொள்ள வேண்டும்.


- பப்பாளியில் பப்பைன் என்ற என்சைம் உள்ளது. இது பிளேட்லெட் எண்ணிக்கையை அதிகரிக்க உதவுகிறது.


- டெங்கு நோயாளிகள் அதிக அளவு திரவங்கள், பழச்சாறுகள் மற்றும் இளநீர் ஆகியவற்றை உட்கொள்ள வேண்டும். 


- பூண்டில் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும் பண்புகள் உள்ளன. ஆகையால் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் பூண்டை உட்கொண்டால் டெங்கு நோய்த்தொற்றை எளிதாக குணப்படுத்தலாம்.  


(பொறுப்பு துறப்பு: இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)


மேலும் படிக்க | சின்னஞ்சிறு ஓமத்தில் இத்தனை ஆற்றலா... வியக்க வைக்கும் பலன்கள்..!!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ