உப்பில்லா பண்டம் குப்பையிலே என்பது பழமொழி. அதுவே உப்பு உடலில் அதிகமானால் அது உடல் நோய்நொடிகள் தங்கும் குப்பைத்தொட்டியாக்கிவிடும். அறுசுவைகளில் பிரதானமானது உவர்ப்பு. உணவின் சுவையைக் கூட்ட உப்பு அவசியமான ஒன்று. ஆனால் உணவில் அதிக உப்பு சேர்த்தால், அது ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் சீர்குலைத்துவிடும். எனவே நாம் உண்ணும் உணவில் சேர்க்கும் உப்பின் அளவைக் கவனிக்க வேண்டியது மிகவும் முக்கியம். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

உணவின் சுவையைக் கூட்ட உப்பு அவசியமான ஒன்று, ஆனால் உணவில் அதிக உப்பை கூட்டினால், உடலில் நோய்களும் கூடும். அதே உப்பை மிகவும் குறைத்தாலோ ஆரோக்கியமும் குறைந்துவிடும். அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு தானே?


பொதுவாகவே எல்லா உணவுகளிலும், இயற்கையாகவே உப்பு இருக்கிறது. உணவில் உப்பை அளவாக சேர்த்துக் கொள்வது நல்லது. ரத்த அழுத்தத்தத்திற்கும் உப்புக்கும் தொடர்பு உண்டு. ரத்த அழுத்தம் அதிகமாக இருப்பவர்கள், உப்பை உணவில் குறைத்துக் கொள்ள வேண்டும் என்று மருத்துவர்கள் பரிந்துரைப்பார்கள். வருமுன் காப்போம் என்று நினைப்பவர்கள் தங்கள் உணவில் உப்பை அளவாக எடுத்துக் கொள்ளவேண்டும்.


அதிகப்படியான உப்பு ஒரு பிரச்சனையைக் கொடுக்கும் என்றால், உப்பு சத்து உடலில் குறைந்தால் அது வேறுவிதமான சிக்கலை ஏற்படுத்தும். உப்பின் ரசாயன பெயர் சோடியம் குளோரைடு. உப்புச் சத்து உடலில் குறைந்தால் ரத்தத்தில் சோடியம் அளவு குறையும், உடலில் உள்ள திரவங்களில் சமநிலையை பாதிக்கும். எனவே உடலில் உப்பு என்பது கூடவோ குறையவோ இருக்கக்கூடாது.


Also Read | Easy Weight Loss: உடல் எடையை குறைக்க உடற்பயிற்சி தேவையில்லை தெரியுமா?


உடலில் அதிகளவு உப்பு சேர்ந்தால், அது ஒருசில அறிகுறிகளை வெளிக்காட்டும். அந்த அறிகுறிகளைக் அறிந்துக் கொண்டால் உணவில் அதிக உப்பு இருக்கிறதா என்பதைத் தெரிந்து கொள்ளலாம். நாளொன்றுக்கு ஒருவருக்கு 6 கிராம் உப்பு போதுமானது. 


சிறுநீர்
அதிகமாக சிறுநீர் கழிந்தால், அது உடலில் உப்பு அதிகம் இருப்பதற்கான அறிகுறியாகும். அடிக்கடி சிறுநீர் கழிக்கிறீர்களா?   பெரும்பாலும், நள்ளிரவு நேரத்தில் சிறுநீர் வரும். இருப்பினும், சிறுநீர் கழிப்பது அதிகமாக இருப்பது சிறுநீரக தொற்று, டைப்-2 சர்க்கரை நோய் போன்ற பல ஆரோக்கிய பிரச்சனைகளின் அறிகுறிகளாகவும் இருப்பதால், சரியான காரணம் என்னவென்பதை அறிய பரிசோதனை செய்து பார்ப்பது அவசியம். ஆனால், அதிக உப்பு உணவில் சேர்த்தாலும், சிறுநீர் கழிக்க நேரிடும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளவும். 


அதிக தாகம் எடுப்பது
ஒருவருக்கு தொடர்ந்து தாகம் எடுப்பதற்கான காரணம், உடலில் அதிகளவு உப்பு சேர்ந்திருப்பதற்கான அறிகுறியாக இருக்கலாம். அதிக சோடியம் நிறைந்த உணவுகளை உண்ணும் போது, அது உடலின் திரவ சமநிலையை பாதித்து, தாகத்தை ஏற்படுத்துகிறது. இதை சரிசெய்வதற்கான ஒரே சிறந்த வழி அதிகளவு நீரைக் குடிக்க வேண்டும். 


Also Read | சிறுதானியங்களின் முடிசூடா மன்னன் கம்பு, நோய்களுக்கு இது தரும் வம்பு


உடலில் வீக்கம் 
அதிகளவு உப்பை உட்கொள்வது, உடலில் வீக்கத்தை ஏற்படுத்தும். தூங்கி எழுந்ததும் காலையில் முகம் வீங்கி காணப்பட்டால், உடலில் உப்பு அதிகமாக இருக்கலாம். விரல்கள் மற்றும் கணுக்கால் பகுதியைச் சுற்றி வீக்கம் ஏற்படும். உடலின் திசுக்களில் அதிகளவு திரவங்கள் நிரம்புவதால் இந்த பிரச்சனை எழும். இதற்கு எடிமா என்று பெயர். இந்த எடிமா பிரச்சனை அதிக உப்பு உட்கொள்வதை உணர்த்தும் ஓர் முக்கிய அறிகுறியாக நம்பப்படுகிறது. இதற்கு ஒரு எளிய தீர்வு என்னவென்றால், அது உணவில் உப்பைக் குறைப்பதாகும். ஆனால், எப்போதுமே உடலில் உப்பு சரியான அளவில் இருந்து, குறிப்பிட்ட சில நாட்களில் அதிக உப்புள்ள உணவை உண்பதாலும் வீக்கம் தோன்றலாம். 
உவர்ப்பான உணவில் விருப்பம் 


ஒவ்வொரு முறை உணவு உண்ணும் போதும், உங்கள் உணவில் உப்பு இன்னும் சேர்க்க வேண்டும் என்று தோன்றுவது அதிக உப்பை உணவில் சேர்த்து சாப்பிடும் பழக்கத்தின் எதிரொலியாக இருக்கலாம். வழக்கமாகவே உணவில் அதிக உப்பு சேர்த்து வந்ததால், காலப்போக்கில் நாவில் உள்ள சுவை மொட்டுகள் அந்த சுவையுக்கு பழகிவிடும். அதுவே உணவில் அதிக உப்பு சேர்ப்பதற்கான காரணமாகிறது.


அடிக்கடி தலைவலி 
அடிக்கடி லேசான தலைவலி வந்தால், இது உடலில் உள்ள திரவ சமநிலை மாறுபடுவதை காட்டுகிறது. அதிகளவு உப்பை உட்கொள்ளும் போது, நீரிழப்பு காரணமாக அடிக்கடி லேசான தலைவலி ஏற்படுத்தும். இந்த தலைவலியை அதிக தண்ணீர் அருந்துவதன் மூலம் சரிசெய்யலாம். 


நொறுக்கு தீனிகள் மீது விருப்பம்
உணவில் உப்பை அதிகம் சேர்த்து வந்ததால், நாவின் சுவை மொட்டுகள் உப்பு சுவைக்கு ஏற்றவாறு மாறி, உப்புள்ள உணவுகளை உண்ண வேண்டுமென்ற விருப்பத்தை ஏற்படுத்தும். அதனால் தான் உங்களுக்கு உப்பு வேர்க்கடலை, சிப்ஸ் மற்றும் பிற நொறுக்குத் தீனிகளை சாப்பிட வேண்டுமென்ற ஆவல் எழுகிறது.


Also Read | Healthy Food: ராகியை நீங்கள் மிஸ் செய்தால் ஆரோக்கியம் உங்களுக்கு டாட்டா காட்டும்!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR