உணவில் சிறிதளவு பெருங்காயத்தை சேர்த்துவிட்டால், அதன் சுவை பன்மடங்கு அதிகரிக்கிறது. பெருங்காயம் பெரும்பாலான வீடுகளில் பயன்படுத்தப்படுகிறது. சாம்பார், ரசம், காய்கறிகள் என அனைத்திலும் பெருங்காயம் சேர்த்தால் சுவை கூடும். மோரில் பெருங்காயம் சேர்த்து குடித்தால் சுவை இரட்டிப்பாகும். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

உணவின் சுவையை அதிகரிப்பதைத் தவிர, பெருங்காயம் உடல் ஆரோக்கியத்திற்கும் நன்மை பயக்கும். பெருங்காயத்தை உணவில் சேர்த்துக்கொள்வதால் பல நோய்கள் விலகும். ஆனால் பல சமயங்களில் சந்தையில் கிடைக்கும் பெருங்காயத்திலும் கலப்படம் காணப்படுகிறது. சிலர் பெருங்காயத்தில் மாவு மற்றும் ரசாயனங்களையும் கலக்கிறார்கள். அத்தகைய சூழ்நிலையில், நீங்கள் பயன்படுத்தும் பெருங்காயம் கலப்படம் இல்லாததா என்பதை தெரிந்துகொள்வது மிக அவசியமாகும். 


போலியான பெருங்காயத்தை உண்பது உடல் நலனுக்கு பல தீங்குகளை ஏற்படுத்தும். போலி பெருங்காயத்தை உணவில் சேர்த்தால், அது, நன்மைக்கு பதிலாக பல தீங்குகளை விளைவிக்கும். உண்மையான பெருங்காயம் மற்றும் போலி பெருங்காயத்தை எவ்வாறு அடையாளம் காண்பது என்பதை இந்த பதிவில் காணலாம். 


மேலும் படிக்க | கடுகு எண்ணெயை முடியில் தடவும்போது இந்த தவறை செய்யாதீர்கள்


அசல்-போலி பெருங்காயத்தை கண்டறிவது எப்படி?


- அசல் பெருங்காயத்தின் நிறம் வெளிர் பழுப்பாக இருக்கும். சூடான நெய்யில் இதை போட்டால், அது பரவத் தொடங்கும். பின்னர் அது வெளிர் சிவப்பு நிறமாக மாறும்.
- உங்கள் பெருங்காயத்தில் அத்தகைய மாற்றம் எதுவும் இல்லை என்றால், பெருங்காயத்தில் சில கலப்படம் உள்ளது என்பதை புரிந்து கொள்ளுங்கள்.
- உண்மையான பெருங்காயத்தை அடையாளம் காண்பதற்கான மற்றொரு வழி என்னவென்றால், அதை தண்ணீரில் கரைத்த பிறகு, அதன் நிறம் பால் போல் வெண்மையாக மாறும்.
- அப்படி நிறம் மாறவிலை என்றால், பெருங்காயத்தில் கலப்படம் உள்ளது என்பதை புரிந்து கொள்ளுங்கள்.
- பெருங்காயம் அசலாக இருந்தால், அதன் வாசனை நீண்ட நேரம் இருக்கும். சோப்பு போட்டு கைகளை கழுவினாலும் அதன் வாசனை அப்படியே இருக்கும்.
- போலி பெருங்காயத்தில் கலப்படம் இருப்பதால், கைகளைக் கழுவினால் வாசனையும் போய்விடும்.
- அசல் பெருங்காயத்தை உணவில் சேர்க்க விரும்பினால், பெருங்காய பொடிக்கு பதிலாக, பெருங்காயத்தின் கட்டி வாங்கி வைத்துக்கொள்ளலாம். அதை நீரில் ஊர வைத்து பெருங்காய நீராக பயனபடுத்தலாம். அல்லது, நாமாக அதை பொடி செய்து கொள்ளலாம். 
- பெருங்காய பொடியில் அதிக கலப்படம் இருப்பதால், அதன் விலையுல் சிறிது குறைவாக உள்ளது.
- பெருங்காயத்தை திறந்த வெளியில் வைப்பதற்கு பதிலாக, அதை ஒரு தகர பெட்டி அல்லது கண்ணாடி பாட்டிலில் வைக்க வேண்டும். இது வாசனையை நீண்ட நேரம் இருக்கச்செய்யும். 


மேலும் படிக்க | Anti Aging Facepack: இளமை இதோ இதோ என பாட வைக்கும் சிம்பிள் பேஸ்பேக்


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR