இப்போதெல்லாம் மக்கள் நீண்ட காலமாக மொபைல் போன் அல்லது லேப்டாப் பயன்படுத்துவதால் கண்பார்வை பாதிக்கப்படுகிறது. அத்துடன் கோடைகாலமும் வந்துவிட்டது. கொளுத்தும் வெயிலும் சேர்ந்து கொள்வதால் கண்களில் வலி இயல்பாகவே எழத் தொடங்குகிறது. இதுதவிர நெருக்கமாகப் பார்ப்பதிலும், செய்தித்தாள்களைப் படிப்பதிலும் சிக்கல்களை எதிர்கொள்கின்றனர். நீங்களும் இதே பிரச்சனையை எதிர்கொண்டால் கவலைப்பட வேண்டாம். இந்த பிரச்சனையிலிருந்து விடுபட, சரியான உணவுகளை எடுத்துக் கொள்ளுங்கள். இது உங்கள் கண்பார்வையை அதிகரிக்க உதவும். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கண் பார்வையை மேம்படுத்த இந்த மூன்று பொருட்களை தினமும் சாப்பிடுங்கள்.


1. முட்டை


முட்டை வைட்டமின்களின் நல்ல ஆதாரமாக கருதப்படுகிறது. வைட்டமின் சி, ஈ மற்றும் துத்தநாகம் இதில் ஏராளமாக உள்ளது. இதனை உட்கொள்வதால் உடலுக்கும் புரதச்சத்து கிடைக்கும். அதுமட்டுமின்றி லுடீன், ஜியாக்சாந்தின் போன்ற சத்துக்களும் இதில் உள்ளதால் கண்பார்வை வலுவாக மாற்றும். இதனால் கண்ணாடி தேவையில்லை.


மேலும் படிக்க | 'ஸ்லோ பாய்சன்’ சர்க்கரையை உணவில் இருந்து குறைக்க சுலபமான வழிகள்


2. கேரட்


கண்களின் சக்தியை அதிகரிப்பதில் கேரட்டுக்கு ஈடு இணையில்லை. இதில் வைட்டமின் ஏ மற்றும் பீட்டா கரோட்டின் அதிக அளவில் காணப்படுகின்றன, இதன் காரணமாக கண்பார்வை அதிகரிக்கிறது. வலி முடிவுக்கு வரும். இது கண்களுக்கு சிறந்த உணவாக கருதப்படுகிறது. கோடைக் காலத்திலும் கடையில் கேரட்டை வாங்கிச் சாப்பிடுங்கள்.


3. பாதாம்


பாதாமின் விளைவு சூடு என்றாலும், இதில் வைட்டமின் ஈ அதிகம் இருப்பதால் கண்பார்வை அதிகரிக்கிறது. இதனுடன், கண்களின் ஆரோக்கியமான திசுக்களை சேதப்படுத்தும் நிலையற்ற மூலக்கூறுகளிலிருந்தும் அவை பாதுகாக்கின்றன. 3-4 பாதாம் பருப்பை இரவில் ஊறவைத்து மறுநாள் காலையில் சாப்பிடலாம்.


(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. அதை ஏற்றுக்கொள்ளும் முன் மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE NEWS அதை உறுதிப்படுத்தவில்லை.)


மேலும் படிக்க | கல்லீரல் பிரச்சனை அண்டாமல் இருக்க... தினசரி டயட்டில் சேர்க்க வேண்டிய உணவுகள்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ