கைத்தசையை குறைப்பது எப்படி? கவலையே படாம ‘இதை’ மட்டும் பண்ணுணங்க..
Arm Fat Workout : பலருக்கு, கைகள் மட்டும் சதை அதிகமாக இருக்கலாம். இதை குறைக்க பல வழிகள் இருக்கின்றன. அவை குறித்து இங்கு பார்ப்போம்.
Arm Fat Workout : உடல் எடை அதிகமாக இருந்தால், கை, கால் உள்ளிட்ட உடலின் அனைத்து பாகங்களிலும் சதைகள் அதிகமாக இருக்கலாம். இதனால், ஓடுவது, நடப்பது, சாதாரண வேலைகள் செய்வது என அனைத்துமே கடினமான வேலையாக மாறலாம். ஒரு சிலருக்கு, உடல் அவ்வளவு பெரிதாக இல்லை என்றாலும், கைகள் மட்டும் பெரிதாக இருக்கும். இதனால் பிடித்த உடை பாேட முடியாமல் தவிப்பர். இதை தடுக்க ஒரு வழி இருக்கிறது. அது குறித்து இங்கு பார்ப்போம்.
கைகளுக்கான உடற்பயிற்சி:
உடலை குறைக்க உடற்பயிற்சி செய்வது இன்றியமையாதது என்பது அனைவருக்கும் தெரியும். அந்த வகையில், கை தசைகளை குறைப்பதற்கும் சில உடற்பயிற்சிகள் இருக்கின்றன. அவை என்னென்ன என்பது குறித்து இங்கு பார்ப்போமா?
கார்டியோ உடற்பயிற்சிகள்:
இருதயத்திற்கு நன்மை பயக்கும் கார்டியோ உடற்பயிற்சிகளை செய்து பழக வேண்டும். இது, உடல் எடையை மட்டுமன்றி கைகளில் இருக்கும் கொழுப்பை குறைக்கவும் உதவுகிறது. சைக்ளிங், ஜாக்கிங், கயிறு தாண்டுதல், வேகமாக நடத்தல் போன்ற உடற்பயிற்சிகள் இதற்கு உதவும். தினமும் 150 நிமிடங்களுக்கு இது போன்ற கார்டியோ உடற்பயிற்சிகளை செய்து பழகலாம்.
புஷ் அப்ஸ்:
புஷ் அப் உடற்பயிற்சி, உங்கள் தோள்பட்டை, கைகள், மார்பக தசைகள் உள்ளிட்ட அனைத்தையும் வலுவாக்க உதவும். அது மட்டுமன்றி, தேவையற்ற தசைகளை குறைக்கவும் பலர் இந்த உடற்பயிற்சியினை செய்கின்றனர். இதை செய்யத்தெரியாதவர்கள் முதில் சுவற்றை வைத்து புஷ்-அப் எடுக்க வேண்டும். இது முடிந்த பின்பு, தலையணைகளை வைத்து தரையில் புஷ்-அப் எடுக்க வேண்டும். இதன் பிறகு முழுமையாக புஷ்-அப் எடுக்க தொடங்கலாம்.
பைசப் கர்ள்ஸ்:
டம்புல்ஸ்களை வைத்து செய்யக்கூடிய உடற்பயிற்சிகளுள் ஒன்று, பைசப் கர்ள்ஸ். இது, கைகளின் மேல் தசைகளை இருக்கமாக்கவும், தேவையற்ற தசைகளை குறைக்கவும் உதவும். இந்த உடற்பயிற்சி, தோள்பட்டைக்கும் வலுசேர்க்கும்.
மேலும் படிக்க | கால்களில் ரத்த ஓட்டத்தை அதிகரிக்க..‘இந்த’ யோகாசனங்கள் செய்யுங்கள்!
ட்ரைசெப் டிப்ஸ்:
உங்கள் கைகளுக்கு பின்னால் இருக்கும் தசையினை குறைக்க, இந்த உடற்பயிற்சியை செய்து பார்க்கலாம். இதனால், இடுப்பு, கையின் தோள்பட்டை ஆகியவை வலுபெறுவதோடு, தேவையற்ற சதைகளும் குறையும். இதை தரையில் வைத்தும் செய்யலாம். அல்லது, ஏதேனும் நாற்காலி அல்லது பெஞ்சில் கைகளை பின்புறமாக வைத்து செய்யலாம். இந்த உடற்பயிற்சி உங்களது கையின் இரு முட்டிகளுக்கும் நல்லது.
ஆர்ம் சர்கிள்ஸ்:
இந்த வர்க்-அவுட்டை கையில் டம்புள்ஸை வைத்துக்கொண்டும் செய்யலாம். அல்லது, எதுவும் இல்லாமல் வெறும் கைகளாலும் செய்யலாம். இதை செய்ய, முதலில் கைகளை அகலமாக வைத்துக்கொள்ள வேண்டும். பின்னர், உங்கள் கால்களை முன்னால் வைத்து lunges செய்ய வேண்டும். அப்போதும் உங்கள் கைகளை இரு கைகளையும் சுழற்றிக்கொண்டே இருக்க வேண்டும். இதனால், கால் தசைகளும் குறையும், கை தசைகளும் குறையும்.
ப்ளாங்க்:
வயிற்றில் அதிகமாக இருக்கும் கொழுப்பையும், கை கொழுப்பையும் ஒரே வர்க் அவுட்டில் குறைக்கலாம். அதுதான், ப்ளாங்க். இதை செய்ய முதலில் இரு கை முட்டிகளாலும், உங்கள் கால் விரல்களின் நுணிகளாலும் உங்கள் உடலை பேலன்ஸ் செய்ய வேண்டும். இந்த நிலையில் 30 வினாடிகள் முதல் 1 நிமிடம் வரை இருக்கலாம்.
மேலும் படிக்க | தொடையில் சதை அதிகமா இருக்கா? ‘இந்த’ யோகாசனங்களை செய்யுங்கள்!
(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன்னர் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ