தொடையில் சதை அதிகமா இருக்கா? ‘இந்த’ யோகாசனங்களை செய்யுங்கள்!

Yoga Asanas For Thigh Fat : ஒரு சிலருக்கு தொடையில் மட்டும் சதை அதிகமாக இருக்கும். அவர்கள் சில யோகாசனங்களை செய்து பழகினால் கண்டிப்பாக அதை குறைக்கலாம். அதற்கு உதவும் ஆசனங்கள் எவை தெரியுமா?

Yoga Asanas For Thigh Fat : உடல் பருமனுடன் இருப்பவர்களுக்கு தொடை சதையும் கூட அதிகமாக இருக்கலாம். அவர்களுக்கு மட்டுமல்ல, தொப்பை இல்லாதவர்களுக்கும் கூட, சில சமயங்களில் தொடை பெரிதாக இருக்கும். இதனால் நீண்ட தூரம் நடக்க முடியாமலும், ஓட முடியாமலும் பலர் தவிப்பர். இவர்கள், சில யோகாசனங்களை செய்தால் நல்ல பலன் உண்டு. அவை என்னென்ன யோகாசனங்கள் தெரியுமா? 

1 /8

தொடை சதையை குறைக்க உதவும் யோகாசனங்கள். இதை செய்தால் மொத்த உடலுக்கும் நன்மை என மருத்துவர்கள் கூறுகின்றனர். அவை என்னென்ன ஆசனங்கள் தெரியுமா? 

2 /8

வீரபத்ராசனம்: இந்த ஆசனம், உங்கள் உள் தொடைகளில் இருக்கும் தசைகளை குறைக்க உதவும். இது, கால்களுக்கு நல்ல உடற்பயிற்சியாகவும் விளங்குகிறது. 

3 /8

உட்கட்டாசனம்: இந்த ஆசனத்தை chair pose என்றும் ஆங்கிலத்தில் குறிப்பிடலாம். இது, காலில் இருக்கும் தசை மற்றும் எலும்புகளை குறிவைத்து செய்யப்படும் உடற்பயிற்சியாகும். இதனால் இடுப்பு மற்றும் தொடை எலும்புகள் வலுவடையும் என கூறப்படுகிறது.

4 /8

உபவிஸ்தோ கோனாசனம்: இந்த ஆசனம், உங்கள் கணுக்காலில் இருந்து இடுப்பு வரை வலு பெற உதவலாம். கால்களுக்கு நல்ல ஸ்ட்ரெட்சிங் உடற்பயிற்சியாகவும் இந்த ஆசனம் விளங்குகிறது. 

5 /8

நடராஜாசனம்: இது, உடல் அமைப்பை மாற்றி அமைக்க  உதவும் உடற்பயிற்சிகளுள் ஒன்றாகும். இதில், தொடையின் உள் மற்றும் வெளி தசைகள் வலுபெறலாம்.

6 /8

மலாசனம்: கால்களுக்கும் இடுப்புக்கும் வலுகொடுக்கும் யோகாசனங்களுள், மலாசனமும் ஒன்ரு. இது, காலுக்கும் இடுப்பிற்கும் சரியான ரத்த ஓட்டம் செல்வதை உறுதிப்படுத்துகிறது. 

7 /8

ஜனு சிரசாசனம்: கால்களில் இருக்கும் எலும்புகளையும், இடுப்பு இணையும் இடத்தையும் வலுவாக மாற்ற உதவுகிறது, ஜனு சிரசாசனம். இதை செய்யும் போது தசைகள் இறுகி, தளர்வான தசைகளை இழக்க உதவுகிறது. 

8 /8

பாத கோணாசனம்: இடுப்பு வலி, முதுகு வலியை நிவர்த்தி செய்வதோடு மட்டுமன்றி, கால் தசைகளையும் குறைக்க உதவுகிறது, பாத கோணாசனம் எனும் ஆசனம். இது, தொடையில் இருக்கும் அதிக கொழுப்பினையும் கரைக்க உதவுகிறது.