Rapid Weight Loss Tips in Tamil :உடல் பருமனுடன் இருப்பவர்கள் பலர், தங்களது எடையை குறைக்க எவ்வளவோ முயற்சி செய்தும், அதற்கு பல சமயங்களில் பலன் இல்லாமல் பாேகலாம். அவர்கள் உடல் எடை குறைப்பு முயற்சியில் அடிக்கடி பின்வாங்குவதும், சரியாக டயட்டில் இல்லாமல் இருப்பதும் அதற்கு பெரிய காரணங்களாக அமையலாம். அதே நேரத்தில், பலருக்கு காலையில் உடற்பயிற்சி செய்வதற்கு நேரமே இல்லாமல் இருக்கிறது. இதனால், “இன்று முடியவில்லை, நாளை பாரத்துக்கொள்ளலாம்” என ஒவ்வொரு நாளும் இப்படியே தள்ளிப்போட்டு காெண்டே போகின்றனர். இப்படி, காலையில் எழுந்து உடற்பயிற்சி செய்ய முடியாதவர்கள், சமயங்களில் மாலை நேரங்களில் (இரவு நேரங்களில் கூட) உடற்பயிற்சி செய்வதை பார்க்க முடியும். இப்படி செய்வதால் உடல் எடை குறையுமா? 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மாலை நேர உடற்பயிற்சிகள்..


காலையில் உடற்பயிற்சி உடலில் எந்த அளவிற்கு ஆற்றலையும் கலாேரிகளை குறைக்கவும் உதவுகிறதாே, அதே போல மாலை நேரத்தில் உடற்பயிற்சிகளும் உதவும். இந்த நேரத்தில் உடற்பயிற்சி செய்வதால் உடலுக்கும் இன்னும் நிறைய பலன்கள் கிடைப்பதாக மருத்துவர்களும் உடற்பயிற்சி நிபுணர்களும் தெரிவிக்கின்றனர். இந்த நேரத்தில் உடற்பயிற்சி செய்தால், எடையையும் வேகமாக இழக்க கூடும் என்றும் பலனை அனுபவித்தவர்கள் கூறுகின்றனர். 


மேலும் படிக்க | ஓவர் எடையை உடனடியா குறைக்க கிராம்பை இப்படி சாப்பிடுங்க போதும்


மாலை நேரத்தில் உடற்பயிற்சி செய்வதால் ஏற்படும் நன்மைகள்:


>நல்ல தூக்கம்: மாலை நேரத்தில் உடற்பயிற்சி செய்வது நல்ல தூக்கத்திற்கு உதவும் என்கின்றனர், மருத்துவர்கள். இது, நம் உடலில் இருக்கும் சர்காடியன் ரிதத்தை சீர்படுத்தி, உடல் சூட்டை அதிகரித்து வெகு விரைவில் தூக்கம் வரவழைப்பதற்கு உதவுகிறது. 


>மனபதற்றத்தை குறைக்கலாம்: மாலை நேரத்தில் உடற்பயிற்சி செய்வது, மன அழுத்தத்தையும் பதற்றத்தையும் நீக்க உதவும் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். இதனால், மனதளவில் மகிழ்ச்சியாக இருக்கலாமாம். 


>தசைகளுக்கு வலு: மாலை நேர உடற்பயிற்சிகள் உடலில் உள்ள மெட்டபாலிசத்தை அதிகரிக்க உதவும் என கூறப்படுகிறது. இதனால், தசைகள் வலு பெறும் என்றும், கலோரி எரிப்பிலும் ஈடுபடலாம் என்றும் உடற்பயிற்சி நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.


>மெட்டபாலிசத்தை அதிகரிக்கும்: மாலை நேரத்தில் உடற்பயிற்சி செய்து விட்டு, ஓய்வு எடுக்கையில் நிறைய கலோரிகள் எரியுமாம். இதனால், தசைகளின் திசுக்கள் வலுப்பெற்று, கொழுப்பினால் ஏறிய தசைகளையும் குறைக்கலாமாம். 


>இரத்த சர்க்கரை அளவு: மாலை நேர உடற்பயிற்சிகள், இரத்த சர்க்கரை அளவை சரியாக பேலன்ஸ் செய்ய உதவுமாம். இது, டைப் 2 டயாபிட்டீஸ் உருவாகும் ஆபத்து காரணிகள் உடலில் அண்டாமல் தடுக்கும் என்றும் கூறப்படுகிறது.


>மகிழ்ச்சியான மனநிலை: மகிழ்ச்சியான உணர்வுகளை மேம்படுத்த, மாலை நேர உடற்பயிற்சிகள் உதவுமாம். மூளையில் உள்ள செரோடானின், டோப்பமைன் போன்ற திரவங்கள் வெளியேறுவதால் நமக்கு மகிழ்ச்சியான மனநிலை  உண்டாகிறது. எனவே, பதற்றத்தை நீக்கி, மகிழ்ச்சியாக உணர வேண்டும் என்றால் மாலையில் உடற்பயிற்சி செய்யலாம். 


>அறிவாற்றல் அதிகரிக்கலாம்: மாலை நேர உடற்பயிற்சி மூலமாக, அறிவாற்றலும் அதிகரிக்கலாம் என கூறப்படுகிறது. புதிதாக மூளையில் செல்கள் உருவாவதற்கும், அறிவாற்றலை அதிகரிக்கும் செல்கள் மேம்படுவதற்கும் மாலை உடற்பயிற்சிகள் உதவுகின்றன. 


>மன அழுத்தத்திற்கு நிவாரணி: தினசரி கவலைகளிலிருந்து மனதை திசைதிருப்ப, மாலை நேர உடற்பயிற்சிகள் உதவுகின்றன. இதில் கவனம் செலுத்துவதன் மூலம், மன அழுத்த நிவாரணத்திற்கான ஆரோக்கியமான மருந்தாக அமைகிறது, மாலை நேர உடற்பயிற்சி.


(பொறுப்பு துறப்பு: இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)


மேலும் படிக்க | கொளுத்தும் வெயிலில் ஹீட் ஸ்ட்ரோக் வராமல் பாதுகாக்க இதையெல்லாம் சாப்பிடுங்க


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ