Home Workouts For Belly Fat : உடல் பருமன் என்பது, ஆண்கள்-பெண்களை தாண்டி அனைவருக்குமான பிரச்சனையாக இருக்கிறது. ஆண்களுக்கு, உடல் பருமனால் ஒரு வகையான உடல்நல பிரச்சனைகள் வர, பெண்களுக்கும் வெளியில் கூற முடியாத அளவிற்கு பெரிய பிரச்சனைகள் இருக்கின்றன. பிசிஓஎஸ் பிரச்சனைகள், மாதவிடாய் கோளாறுகள் உள்ளிட்ட பல வயிறு சம்பந்தமான மற்றும் குழந்தை பேறு சம்பந்தமான பிரச்சனைகள் உருவாகலாம். இதை தவிர்க்க, சில உடற்பயிற்சிகள் இருக்கின்றன. அவை என்னென்ன தெரியுமா? 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஹீல் டச்சஸ்:


உங்களின் வயிற்று தசைகளை குறைக்கும் பல்வேறு உடற்பயிற்சிகள் இருக்கின்றன. அதில் ஒன்றுதான், ஹீல் டச்சஸ். இதை செய்தால், உங்கள் உடலின் நடுப்பகுதி வலுவாகும். அடிவயிற்று தசைகளை குறைக்க இந்த உடற்பயிற்சிகளை செய்யலாம். 


எப்படி செய்வது? 


>தரையில் நேராக படுத்துக்கொள்ள வேண்டும்
>கால்களின் பின்பக்கம் உங்கள் பின்பக்கத்தில் படும் வகையில் மடக்கிக்கொள்ள வேண்டும். 
>இரு பக்கங்களிலும் கைகளை நீட்டி, தலையை தூக்கி, கால்களை தொட வேண்டும். 


க்ரன்ச்:


உடலை வளைத்து நெளித்து செய்யும் உடற்பயிற்சிகளுக்கு பெயர்தான், க்ரன்ச். இதை செய்வதால் இடுப்பின் இரு பக்கங்களில் இருக்கும் தசைகளும் குறையலாம். 


எப்படி செய்வது?
>நேராக தரையில் படுத்துக்கொண்டு, உங்கள் கால்களை மட்டும் தரையில் இருந்து v வடிவில் தூக்க வேண்டும்.
>உங்கள் இடது பக்க கையை தரையில் வைத்து உடலை பேலன்ஸ் செய்யவும்.
>பின்னர் மெதுவாக உங்கள் தலையை, தரையில் சாய்க்கவும்
>இரு பக்கங்களிலும் 8 முறை இதை செய்ய வேண்டும். 


ப்ளாங்க்:


உங்கள் உடலின் தோரணை மாறுவதற்கும், கோர் ஸ்ட்ரெந்த் வளருவதற்கும் உதவுகிறது. இதனால் உடலின் மெட்டபாலிச சக்தியும் அதிகரிக்கும் என கூறப்படுகிறது. வயிற்று தசைகளை குறைக்க பயன்படும் முக்கியமான உடற்பயிற்சிகளுள் இதுவும் ஒன்று. 


எப்படி செய்வது?


>கை முட்டிகளை தரையில் வைத்து உடலை பேலன்ஸ் செய்ய வேண்டும்.
>உங்கள் தோள்பட்டைக்கு நேராக, உங்களது கை முட்டி இருக்க வேண்டும்.
>இடுப்பை மொத்தமாக மேலே தூக்கி விடக்கூடாது
>இந்த நிலையில் 20 முதல் 30 விநாடிகள் வரை இருக்கலாம்.


மேலும் படிக்க | உடல் எடையை குறைக்க கீர்த்தி சுரேஷ் தினமும் செய்த விஷயம்..எளிமையா இருக்கே..!


பைசைக்கிள் க்ரன்ச்:


தரையில் படுத்துக்கொண்டு சைக்கிள் ஓட்டுவது போல உடற்பயிற்சி செய்வதுதான், பைசைக்கிள் க்ரன்ச். இது, உங்கள் இடுப்பு பகுதி மற்றும் வயிற்று பகுதியில் இருக்கும் தசைகளை குறைக்க உதவும். இது, உங்கள் முதுகையும் நேராக்க உதவும்.


செய்வது எப்படி?


>தரையில் நேராக படுத்துக்கொள்ள வேண்டும்
>உங்கள் இரு கைகளின் விரல்களையும் தலையின் இரு பக்கங்களில் வைத்துக்கொள்ள வேண்டும்.
>உங்களது இரு கால்களும் தரையில் அல்லாமல் காற்றில் இருக்க வேண்டும்.
>உங்கள் இடது கையின் முட்டி, வலது கால் முட்டியில் பட வேண்டும்.
>உங்கள் வலது காலின் முட்டி இடது காலின் முட்டியில் பட வேண்டும்
>இப்படியே மாறி மாறி செய்ய வேண்டும்


ரஷ்ஷியன் ட்விஸ்ட்:


வயிற்று பகுதியில் இருக்கும் தசைகளை குறைக்க உதவும் உடற்பயிற்சிகளுள் ஒன்று, ரஷ்ஷியன் ட்விஸ்ட். இது, இடுப்பு, வயிறு, கைகள் ஆகியவற்றிற்கு உதவும் உடற்பயிற்சியாகும். 


எப்படி செய்வது?


>உடலை சாய்த்து, காலின் பாதங்கள் காற்றில் இருக்க வேண்டும்
>உங்கள் கைகளை உடலின் இரு பக்கங்களிலும் உடலுடன் சேர்த்து கைகளை திருப்ப வேண்டும். 


மேலும் படிக்க | கண் பார்வை பிரச்சனைகள் வராமல் இருக்க என்ன செய்யலாம்? ஈசியான வழி!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ