தொப்பை கொழுப்பை வேகமாய் குறைக்க இலவங்கப்பட்டையை இப்படி உட்கொண்டால் போதும்
Weight Loss Tips: உடல் பருமனை குறைக்க தினசரி சமையலில் நாம் பயன்படுத்தும் பல மசாலாக்கள் உதவுகின்றன. இவை எந்த வித பக்கவிளைவுகளையும் ஏற்படுத்தாமல், தொப்பை கொழுப்பை குறைத்து உடல் எடையையும் கட்டுப்படுத்த உதவும்.
Weight Loss Tips: இன்றைய காலகட்டத்தில் பல வித நோய்கள் நம்மை ஆட்கொள்கின்றன. ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை மற்றும் உணவு முறை காரணமாக உடல் பருமன், கொலஸ்ட்ரால், இரத்த அழுத்தம் என பல பிரச்சனைகள் ஏற்படுகின்றன. ஆனால், இவற்றில் பெரும்பாலானவற்றுக்கு நம் சமையலறையிலேயே தீர்வு கிடைக்கும்.
உடல் பருமனை குறைக்கவும் தினசரி சமையலில் நாம் பயன்படுத்தும் பல மசாலாக்கள் உதவுகின்றன. இவை எந்த வித பக்கவிளைவுகளையும் ஏற்படுத்தாமல், தொப்பை கொழுப்பை குறைத்து உடல் எடையையும் கட்டுப்படுத்த உதவும். அவற்றில் ஒன்று இலவங்கப்பட்டை.
எடை இழப்புக்கு இது ஒரு சஞ்சீவியாகப் பயன்படுகிறது. இது மிகவும் சக்திவாய்ந்த மசாலாவாக உள்ளது. இது உணவுக்கு மணத்தையும், சுவையையும் சேர்ப்பதோடு, பல வித ஆரோக்கிய நன்மைகளையும் அளிக்கின்றது. உடல் பருமன் மற்றும் உடல் கொழுப்பைக் குறைப்பதில் இலவங்கப்பட்டை மிகவும் பயனுள்ளதாக இருப்பதாக பல ஆய்வுகள் மூலம் கண்டறியப்பட்டுள்ளது. இது பல வழிகளில் எடை குறைக்க உதவுகிறது.
மேலும் படிக்க | இதயம் தொடர்பான நோய்க்கு புதிய கண்டுபிடிப்பு! இனி மாரடைப்பை தடுக்கலாம்?
உடல் பருமன் மற்றும் தொப்பையை குறைக்க இலவங்கப்பட்டையின் நன்மைகள்
- நீங்கள் இலவங்கப்பட்டை (CInnamon) உட்கொண்ட பின்னர், அது வயிற்றில் நுழைந்த பிறகு பல வழிகளில் எடை குறைக்க உதவுகிறது. இதில் நார்ச்சத்து இருக்கிறது. இதனால். வயிற்றுக்கு நிறைவான உணர்வு கிடைக்கின்றது.
- இலவங்கப்பட்டை உட்கொள்வது ஆரோக்கியமற்ற உணவுகளுக்கான பசியைத் தடுக்க உதவுகிறது. இதன் மூலம் கலோரி உட்கொள்ளலைக் கட்டுப்படுத்துகிறது.
இது உங்கள் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கிறது. மேலும் கலோரிகள் எரிக்கப்படும் வேகத்தையும் இது அதிகரிக்கின்றது.
- இன்சுலின் சென்சிடிவிட்டியை மேம்படுத்த இது ஒரு இயற்கையான மருந்தாக பயன்படுகிறது. இது இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்கிறது.
- இலவங்கப்பட்டையில் இருக்கும் பண்புகள் பசியை அடக்கி தொப்பை கொழுப்பை வேகமாக கரைக்க உதவுகின்றன.
இலவங்கப்பட்டையை பல வழிகளில் உணவில் சேர்க்கலாம். பொதுவாக இதை உணவில் ஒரு மசாலாப் பொருளாக சேர்க்கிறோம். இலவங்கப்பட்டை தேநீர், தண்ணீர் அல்லது காபி வடிவில் அதை உட்கொள்வதே இதை பயன்படுத்த எளிதான வழி.
தொப்பை கொழுப்பை குறைக்க இலவங்கப்பட்டை தண்ணீர் செய்வது எப்படி?
இலவங்கப்பட்டை தண்ணீர், காபி அல்லது தேநீர் தயாரிப்பது மிகவும் எளிதானது. இதற்கு 1 அங்குல இலவங்கப்பட்டை அல்லது ஒரு டீஸ்பூன் இலவங்கப்பட்டை பொடியை ஒரு கிளாஸ் தண்ணீரில் சேர்த்து நன்றாக கொதிக்க வைக்கவும். நீங்கள் விரும்பினால், இஞ்சி போன்ற மற்ற மசாலாப் பொருட்களையும் அதனுடன் சேர்க்கலாம். பிறகு வடிகட்டி எலுமிச்சை சாறு சேர்த்து குடிக்கவும். இது வேகமாக தொப்பை கொழுப்பை (Belly Fat) குறைக்க உதவும்.
உடலில் உள்ள நச்சுகளை நீக்கவும், செரிமான அமைப்பை சீராக்கவும் இது ஒரு நல்ல பானமாக கருதப்படுகின்றது. எனினும், இதை அதிக அளவில் உட்கொள்ளக்கூடாது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
(பொறுப்பு துறப்பு: அன்புள்ள வாசகரே, எங்கள் செய்திகளைப் படித்ததற்கு நன்றி. இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | இந்த பிரச்சனை உள்ளவர்கள் கத்திரிக்காய் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ