Constipation Relief Meassures Tamil: சரியான ஊட்டச்சத்துக்களை எடுத்துக்கொள்வதன் மூலம் மலச்சிக்கலை பாதுகாப்பாகவும் இயற்கையாகவும் குணப்படுத்த முடியும் என கூறுகின்றனர், மருத்துவர்கள். பழங்கள், காய்கறிகள், முழு தானியங்கள் மற்றும் பருப்பு வகைகள் மலச்சிக்கலை மென்மையான முறையில் தீர்க்க உதவும். இதற்காக, நார்ச்சத்து அதிகம் உள்ள உணவுகளை தினசரி டயட்டில் சேர்த்துக்கொள்ள வேண்டும். குடலை சரியான முறையில் இயக்கவும், இந்த உணவுகள் உதவுகின்றன. பேரிச்சம்பழங்கள், ஃபைபர் உணவுகள் உள்ளிட்டவை இந்த ஹெல்தி உணவு பட்டியலில் அடங்கும். ப்ரோபயோட்டிக் சத்துகள் நிறைந்த தயிர்,பால் போன்ற உணவுகளும் மலச்சிக்கலை இயற்கையான முறையில் சரிசெய்ய உதவும். இது போன்ற இயற்கையான உணவுகளை இங்கு பார்ப்பாேம். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மலச்சிக்கல் ஏன் ஏற்படுகிறது?


மலச்சிக்கல் ஏற்படுவதற்கு முதல் காரணியாக பார்க்கப்படுவது, உடலில் சரியான ஃபைபர் சத்துகள் இல்லாததுதான். சரியாக தண்ணீர் குடிக்காதது கூட இதற்கு ஒரு காரணமாக அமையும். உடலில் ஃபைபர் சத்துகளை அதிகரிக்க, பழங்கள், காய்கறிகள், சீரியல்ஸ் உள்ளிட்டவற்றை சாப்பிட வேண்டும். ஆரோக்கியமான வாழ்க்கை முறையை பின்பற்றுவது, ஆரோக்கியமான உணவுகளை பின்பற்றுவது போன்றவை மலச்சிக்கலை தீர்க்க உதவும். இதற்காக சில உடற்பயிற்சிகளும் உள்ளன. அவற்றையும் பின்பற்றலாம். பாத்ரூம் போகும் போது மிகவும் குறைவான நேரம் கிடைப்பதும் மலச்சிக்கல் ஏற்படுவதற்கு காரணமாக இருக்கலாம். 


ஆப்பிள்:


ஆப்பிள்கள், ஃபைபர் சத்துகள் அதிகம் நிறைந்துள்ள உணவுகளுள் ஒன்றாகும். அப்பிளில் உள்ல ஃபைபர் சத்துகளை பெக்டின் என மருத்துவ மொழியில் குறிப்பிடுகின்றனர். இதனால் நாம் சாப்பிடும் உணவுகள் எளிதில் ஜீரணமாகின்றன. இதில்  உள்ள நார்சத்துகள் குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். 


மூலிகை தேநீர்:


செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கும் மலச்சிக்கலைக் குணப்படுத்துவதற்கும் மிகவும் பயனுள்ள மூலிகை தேநீர்களுள் ஒன்று இஞ்சி டீ. மேலும், இதனுடன் புதினா, துளசி உள்ளிட்டவற்றையும் சேர்த்துக்கொள்ளலாம். இந்த தேநீர் குடல் இயக்கங்களையும் மேம்படுத்தும். குடல் தசைகளை மென்மையாக்கி, மலம் கழிக்கும் போது ஏற்படும் அசௌகரியத்தை நீக்கும். 


மேலும் படிக்க | கவர்ச்சிகரமான தலைமுடியைக் கொடுக்க கீரைகளே ரெடி! அழக்காக்க நீங்க தயாரா?


சியா விதைகள்:


சியா விதைகள், நல்ல கொழுப்பு விதைகள், ஃபைபர் சத்துகள் உள்ளிட்ட சத்துகள் இருக்கின்றன. அது மட்டுமன்றி சியா விதைகள் தண்ணீரை உறிஞ்சும் சத்துகளையும் கொண்டுள்ளன. அதனால், மலச்சிக்கலை இவை எளிதில் தீர்க்கும் என மருத்துவர்களால் நம்பப்படுகிறது. 


மாம்பழம்:


மாம்பழத்தில் தாவரங்களில் தென்படும், phytochemicals எனும் ரசாயனம் உள்ளது. இது, செரிமானத்தை சீர் செய்ய உதவும். குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தி ஃபைபர் அளவை அதிகரிக்கும். இதனால், மலச்சிக்கலை தவிர்க்கலாம்.


ஆரஞ்சு:


ஆரஞ்சு பழங்களில் கொழுப்பு ஃபைபர் சத்துகள் அதிகரித்து காணப்படுகின்றன. இதனால் கலோரி அளவை குறைத்து உடல் ஆரோக்கியத்திற்கும் உதவும். இது சிட்ரஸ் பழம் என்பதால் சருமத்திற்கும் நன்மை பயக்கும். இதனால், குடல் ஆரோக்கியம் மேம்பட்டு மலச்சிக்கலை தீர்க்கலாம். 


மேலும் படிக்க | ரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுப்படுத்த... இந்த 5 பருப்புகளை உணவில் சேர்த்துக்கொள்ளுங்கள்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ