நரைமுடி பிரச்சனை அதிகரித்திருக்கும் நிலையில், உணவு மூலமாக இயற்கையான முறையில் இந்தப் பிரச்சனையை தீர்க்கலாம். அதற்கு இரண்டு கீரைகள் மிகவும் உதவியாக இருக்கும். கரிசலாங்கண்னி கீரை மற்றும் முருங்கைக்கீரை இரண்டுமே உடல் ஆரோக்கியத்திற்கு மட்டுமல்ல, தலைமுடி ஆரோக்கியமாக பளபளப்பாக இருக்கவும் உதவுபவை.
காயகற்ப மூலிகை
கரிசலாங்கண்ணி கீரைக்கு காயகற்ப மூலிகை என்றும் தங்க மூலிகை என்றும் பெயர் உண்டு. இதிலிருந்தே இந்தக் கீரையின் முக்கியத்துவத்தைப் புரிந்துக் கொள்ளலாம்.
கரிசலாங்கன்னி கீரையை அரைத்து தலைமுடியில் பூசி அரைமணி நேரம் ஊறவிட்டு குளித்தால் போதும். இது போன்று மாதத்திற்கு நான்கு முறை அல்லது ஐந்து முறை குளித்து வந்தால் தலை முடி கருமையாக இருக்கும். நரை முடி பிரச்சனை இருக்காது.
இது சுலபமான முறை, குளிப்பதற்கு முன் செய்ய வேண்டியது என்றால், மற்றுமொரு முறையும் இருக்கிறது.
கரிசாலங்கண்ணி கீரையை சுத்தப்படுத்தி அரைத்து அதை சிறு சிறு உருண்டைகளாக தட்டி காய வைத்து வைத்துக் கொள்ளவும்.
தேங்காய் எண்ணெயில் இந்த கரிசலாங்கன்னி வடையைப் போட்டு, ஊறவிடவும். இந்த எண்ணெயை தலைமுடியில் தடவி வந்தால், தலைமுடி கருமையாகவும் நீளமாகவும் வளரும்.
மேலும் படிக்க | இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்துவது இவ்வளவு சுலபமா? இத்தனை நாள் தெரியாம போயிடுச்சே!
இயற்கை அழகு
இது போன்று செய்தால் எந்த கெமிக்கலும் இல்லாமல் இயற்கையான முறையில் நமது தலைமுடியை அழகு மற்றும் பொலிவுடன் பாதுகாக்கலாம். பணத்தை விரையம் ஆகாமல் நரை முடிய சுலபமான முறையில் கருமையாக்கலாம் .
அதேபோல், முடி உதிர்வை தடுத்து, முடி வளர்ச்சியை ஊக்குவிக்க, முருங்கை கீரையும் உதவுகிறது. முடி வளர்ச்சிக்கு முக்கிய பங்கு வகிக்கும் முருங்கைக் கீரையை உணவுக்காக மட்டுமே பயன்படுத்தியிருப்பீர்கள். இரும்புச்சத்துக்கான சிறந்த ஆதாரமாக திகழும் முருங்கையிலை, இரத்தத்தில் உள்ள ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கிறது, முடிக்கு தேவையான இரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது.
முருங்கை கீரையில் உள்ள வைட்டமின் ஏ, பி, சி, பயோட்டின் மற்றும் அமினோ அமிலங்கள் நிறைந்துள்ளன மயிர்க்கால்களை ஆரோக்கியமாக வைத்து கொலாஜனை உற்பத்தி செய்கிறது. அவை கெரட்டின் உற்பத்தியை அதிகரிக்கின்றன.
முடி வளர்ச்சியை ஊக்குவிக்கும் முருங்கை கீரையில் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் உள்ளன. இது முடியில் ஈரப்பதத்தை பராமரிக்க உதவுகிறது. மேலும் இது முடியின் அடர்த்தி மற்றும் pH அளவை சமநிலைப்படுத்த உதவுகிறது. இதிலுள்ள அமினோ அமிலங்கள், வைட்டமின்கள் மற்றும் துத்தநாகங்கள் முடி வறட்சியைத் தடுக்கிறது மற்றும் இயற்கையான ஈரப்பதத்தை பராமரிக்கிறது.
முருங்கை கீரையை தலைக்கு எப்படி பயன்படுத்துவது?
முருங்கை இலையை அரைத்து பேஸ்ட் தயார் செய்துக் கொள்ளவும். அதனுடன் சிறிதளவு எண்ணெயைத் தடவி ஒரு மணி நேரம் ஊறவிட்டு தலையைக் கழுவிவிடவும். முருங்கை இலையை அரைத்து தலையில் தடவி வந்தால், தலைமுடி ஆரோக்கியமாக இருக்கும்.
(பொறுப்பு துறப்பு: அன்புள்ள வாசகரே, எங்கள் செய்திகளைப் படித்ததற்கு நன்றி. இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | ரெண்டே வாரத்துல கத்தை கத்தையா முடி வளர இந்த ஆயுர்வேத மூலிகை ஒன்று போதும்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ