தொப்பை கொழுப்பை கரைத்து உடல் எடையை உடனே குறைக்கும் நெல்லிக்காய் டீ
Weight Loss Tips: தொப்பை கொழுப்பை குறைத்து உடல் எடையை குறைக்க பல இயற்கையான எளிய வழிகளும் உள்ளன என்பதை நாம் தெரிந்து கொள்ள வேண்டும். எனினும் இதற்கு சில விஷயங்களில் கவனம் தேவை.
Weight Loss Tips: உடல் எடை அதிகரிப்பது இந்நாட்களில் ஒரு பொதுவான பிரச்சனையாகியுள்ளது. உடலின் பல இடங்களில் கொழுப்பு குவியத் தொடங்குகிறது. முக்கியமாக தொப்பை, தொடை, இடுப்பு ஆகிய பகுதிகளில் குவியும் கொழுப்பு அவ்வளவு எளிதாக குறைவதில்லை. பொதுவாக, கொழுப்பைக் குறைக்க விரும்பினால், உடற்பயிற்சி செய்ய அறிவுறுத்தப்படுகிறது. உடலின் எந்தப் பகுதியில் கொழுப்பைக் குறைக்க வேண்டும் என்பதைப் பொறுத்து வெவ்வேறு உடற்பயிற்சிகள் செய்யப்படுகின்றன. எனினும், உடற்பயிற்சி செய்யாமலும் கொழுப்பை குறைக்க முடியும் என்பது பலருக்கு தெரிவதில்லை.
உடல் எடையை குறைக்க சந்தைகளில் இந்த காலத்தில் பலவித மருந்து மாத்திரைகளும் கிடைக்கின்றன. எனினும் இவற்றால் பக்க விளைவுகள் ஏற்படுவதற்கான அபாயமும் இருக்கின்றது. தொப்பை கொழுப்பை குறைத்து உடல் எடையை குறைக்க பல இயற்கையான எளிய வழிகளும் உள்ளன என்பதை நாம் தெரிந்து கொள்ள வேண்டும். எனினும் இதற்கு சில விஷயங்களில் கவனம் தேவை. நாம் தினமும் எரிக்கும் கலோரிகளை விட உட்கொள்ளும் கலோரியின் அளவு குறைவாக இருக்க வேண்டும் என்பது மிக அவசியம். இதனுடன் ஆரோக்கியமான உணவும், உடற்பயிற்சியும் தேவை.
வேகமாக தொப்பை கொழுப்பை குறைத்து உடல் எடையை குறைக்க உதவும் ஒரு பானத்தைப் பற்றி இந்த பதிவில் காணலாம். இது ஆயுர்வேதத்தில் ஒரு மருந்தாக பயன்படுத்தப்படுகின்றது. இதை சரியான முறையில் எடுத்துக் கொண்டால் எடையும், தொப்பை கொழுப்பும் (Belly Fat) வேகமாக குறையும் என்று நிபுணர்கள் கூறுகிறார்கள்.
உடல் எடையை குறைக்கும் நெல்லிக்காய் தேநீர் (Amla Tea For Weight Loss)
வேகமாக உடல் எடை குறைக்கும் அந்த மேஜிக் பானம் நெல்லிக்காய் டீ!! நெல்லிக்காயில் சக்தி வாய்ந்த ஆன்ட்டி ஆக்சிடென்ட்கள் அதிகமாக உள்ளன. இது தவிர இதில் வைட்டமின் சி, இரும்புச்சத்து மற்றும் பல அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களும் உள்ளன. மேலும் நெல்லிக்காய் பாக்டீரியா எதிர்ப்பு, பூஞ்சை எதிர்ப்பு மற்றும் ஆன்டிஆக்சிடெண்ட் குணங்களைக் கொண்டுள்ளது.
நெல்லிக்காய் டீ இயற்கையான டீடாக்ஸ் பானமாக கருதப்படுகின்றது. அதாவது இது உடலில் உள்ள நச்சுக்களை விரைவாக நீக்குகிறது. நாம் இதை உட்கொள்ளும் பொழுது நச்சுகள் எளிதாக வெளியேறி கொழுப்பு விரைவாக எரிக்கப்படுகின்றது. இது குடல் ஆரோக்கியத்தை சீராக்கி உடலில் ஏற்படும் வீக்கத்தையும் குறைக்கின்றது.
இது மட்டுமில்லாமல் எடை இழப்புக்கு மிகவும் முக்கியமான வளர்சிதை மாற்றத்தை நெல்லிக்காய் மேம்படுத்துகிறது. நாம் உட்கொள்ளும் உணவை விரைவில் ஜீரணிக்கவும் கலோரிகளை விரைவாக எரிக்கவும் நெல்லிக்காய் பயன்படுகிறது. எடை இழப்பு செயல்முறையில் கொழுப்பை எரிக்கும் ஒரு சிறந்த பானமாக இது பார்க்கப்படுகின்றது.
மேலும் படிக்க | நோய்கள் அண்டாமல் இருக்க... சர்க்கரைக்கு பதிலாக வெல்லம் சாப்பிடுங்க...!
உடல் எடையை குறைக்க நெல்லிக்காய் டீ தயார் செய்வது எப்படி?
நெல்லிக்காய் டீயை மிக எளிய வழியில் தயாரிக்க முடியும். ஒரு பாத்திரத்தில் ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி ஒரு நெல்லிக்காயை சுத்தம் செய்து துண்டுகளாக நறுக்கி தண்ணீரில் போடவும். இதை நன்றாக கொதிக்க விடவும். இதில் ஒரு சிட்டிகை இலவங்கப்பட்டை பொடி மற்றும் மிளகு பொடி ஆகியவற்றை சேர்க்கவும். நெல்லிக்காயை நன்றாக கொதிக்க விட வேண்டும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். இதன் பின்னர் இதை வடிகட்டி குடிக்கவும். இதில் அறை எலுமிச்சை பழம் பிழிந்தும் குடிக்கலாம்.
நெல்லிக்காய்க்கு பதில் நெல்லிக்காய் சூரணத்தை பயன்படுத்தியும் இந்த தேநீரை தயாரிக்கலாம். இந்த நெல்லிக்காய் தேனீரை காலையில் வெறும் வயிற்றில் மற்றும் உணவு உட்கொண்ட பிறகு குடித்தால் தொப்பை கொழுப்பு மற்றும் உடல் எடையை வேகமாக குறைப்பதில் உதவி கிடைக்கும்.
(பொறுப்பு துறப்பு: அன்புள்ள வாசகரே, எங்கள் செய்திகளைப் படித்ததற்கு நன்றி. இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | Diabetes Control Tips: எகிறும் சுகர் லெவலை கட்டுப்படுத்தும் ‘சூப்பர்’ ஜூஸ்...!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ