Weight Loss Tips: கோடை காலத்தை விட குளிர்காலத்தில் உடல் எடையை குறைப்பது சற்று கடினம். ஏனெனில் குளிர்காலத்தில் உடல் பயிற்சிகளும் செயல்பாடுகளும் குறைவாக இருக்கும். மேலும் குளிர்காலத்தில் கிடைக்கும் உணவுகளும் விரைவாக எடையை அதிகரிக்கின்றன. ஆகையால் இந்த காலத்தில் உடல் எடையை குறைகக் சிறப்பு முயற்சி எடுக்க வேண்டும். சில எளிய இயற்கையான வழிகளில் குளிர்காலத்தில் உடல் எடையை குறைக்கலாம். அப்படி ஒரு வழியை பற்றி இந்த பதிவில் காணலாம். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

எடை இழப்புக்கு எடை நூல்கோல் (Turnip For Weight Loss):


குளிர்காலத்தில் உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் நூல்கோல் சாப்பிடலாம். இதில் ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. சோடியம், பொட்டாசியம், நார்ச்சத்து, இரும்பு, புரதம், வைட்டமின் பி மற்றும் வைட்டமின் சி ஆகியவை இதில் அதிகம் காணப்படுகின்றன. இதை உட்கொண்டால் செரிமான அமைப்பை ஆரோக்கியமாக வைத்திருக்க முடியும். இது மட்டுமல்லாமல் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியையும் இது பலப்படுத்துகிறது. நூல்கோலில் இருக்கும் நார்ச்சத்து நீண்ட நேரம் வயிற்றை நிரம்பிய உணர்வுடன் இருக்க வைக்கிறது. இதனால் தேவையற்ற, ஆரோக்கியமற்ற உணவுகளை நாம் அவப்போது உண்பது தவிர்க்கப்படுகின்றது. 


இது தொப்பை கொழுப்பை (Belly Fat) கரைத்து எடையை குறைக்க உதவுகிறது. நூல்கோல் உட்கொள்வது இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவுகிறது மற்றும் அதில் உள்ள ஆண்டி-ஆக்சிடெண்டுகள் தோல் மற்றும் சருமத்திற்கு ஊட்டத்தை அளிக்கின்றன. உடல் எடையை குறைக்க நூல்கோலை எப்படி சாபிடுவது என இங்கே காணலாம்.


நூல்கோல் பொரியல் 


எடை இழப்புக்கு (Weight Loss) நூல்கோலை பொரியலாக செய்து உட்கொள்ளலாம். நூல்கோல் சாப்பிட சுவையாகவும், சத்துக்கள் நிறைந்ததாகவும் இருக்கும். இந்த காயில் உள்ள நார்ச்சத்து வயிற்றை நீண்ட நேரம் நிறைவாக வைத்திருக்கும். இந்த பொரியலை உலர் பொரியலாகவோ அல்லது தளர்த்தியாகவும் செய்யலாம். இந்த பொரியலை சாப்பிடுவதால் வாயு, அஜீரணம் மற்றும் மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகளில் இருந்து நிவாரணம் கிடைக்கும். நூல்கோல் பொரியல் செய்ய, கடாயில் எண்ணெய் ஊற்றி சீரகம், வெங்காயம், இஞ்சி, பச்சை மிளகாய், பூண்டு, தக்காளி சேர்த்து லேசாக வதக்கவும். பின்னர் அதில் நூல்கோலை சேர்த்து சிறிது தண்ணீர் சேர்த்து 10-15 நிமிடங்கள் சமைக்கவும். 


மேலும் படிக்க | கொலஸ்டிராலை எரிக்கும் ஆற்றல் கொண்ட சில காய்கறிகள்!


நூல்கோல் சாலட்


உடல் ஆரோக்கியமாக இருக்கவும், எடையைக் குறைக்கவும் நூல்கோல் (Turnip) சாலட்டை உட்கொள்ளலாம். நூக்லோல் சாலட்களில் ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. நூல்கோல் சாலட் செய்ய, அதை நன்றாக கழுவி, தோலுரித்து சிறிய துண்டுகளாக வெட்டவும். இப்போது ஆப்பிள் மற்றும் கேரட்டை சிறிய துண்டுகளாக நறுக்கி கலக்கவும். இப்போது இந்த சாலட்டில் கருப்பு உப்பு மற்றும் எலுமிச்சை சாறு சேர்க்கவும். உங்கள் சாலட் தயார்!! இதை ஒரு ஆரோக்கியமான சிற்றுண்டியாக சாப்பிடலாம். இதனை உட்கொள்வதால் உடல் பலவீனமும் நீங்கும்.


நூல்கோல் சூப்


எடை இழப்புக்கு நூல்கோல் சூப் சிறந்ததாக இருக்கும். நூல்கோல் சூப் இயற்கையாகவே பசியைக் குறைப்பதோடு, உடலை சூடாகவும் வைக்கிறது. நூல்கோல் சூப் செய்ய, ஒரு பாத்திரத்தில் சிறிது எண்ணெய் சேர்க்கவும். அதனுடன் பூண்டு, வெங்காயம் சேர்த்து லேசாக வதக்கவும். அதன் பிறகு சுவைக்கேற்ப உப்பு சேர்த்து, நூல்கோல், வெஜிடபிள் ஸ்டாக் போட்டு லேசாக வதக்கவும். கலவை குளிர்ந்த பிறகு, அதை ஒரு பிளெண்டர் உதவியுடன் அரைக்கவும். பின் கடாயில் போட்டு லேசாக சூடாக்கி க்ரீம் சேர்த்து பரிமாறவும்.


எடை இழப்புக்கு நூல்கோலை இந்த வழிகளில் உட்கொள்ளலாம். இருப்பினும், உங்களுக்கு ஏதேனும் நோய் அல்லது ஒவ்வாமை பிரச்சனை இருந்தால், மருத்துவரை அணுகிய பின்னரே அதை உட்கொள்ளவும்.


(பொறுப்பு துறப்பு: அன்புள்ள வாசகரே, எங்கள் செய்திகளைப் படித்ததற்கு நன்றி. இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)


மேலும் படிக்க | எச்சரிக்கை! நோய் எதிர்ப்பு சக்தியை காலி செய்யும் ‘சில’ உணவுகள்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ