முகத்தில் அதிகமாக வியர்க்கிறதா? வியர்வையைக் குறைக்கும் வீட்டு வைத்தியம்
Handling Hyperhidrosis: அதிகமாக வியர்ப்பதன் பின்னால் மருத்துவ காரணங்கள் இருக்கின்றன... இந்த சிக்கல் பிரச்சனையாக மாறாமல் இருக்க என்ன செய்ய வேண்டும்?
புதுடெல்லி: உங்களுக்கு அதிகமாக வியர்க்கிறதா? அதிகப்படியான வியர்வைக்கு பின்னால் சில காரணங்கள் உள்ளன. கோடை காலத்தில் அதிகமாக வியர்த்தால், அது பொதுவானது, ஆனால் எப்போதுமே அதிகமாக வியர்த்தால், அது கருத்தில் கொள்ள வேண்டிய விஷயம் ஆகும். அதிலும் சிலருக்கு முகத்தில் மட்டும் அதிகம் வியர்க்கும் என்றால், பலருக்கு உடல் முழுவதுமே வியர்வையால் நனைந்துவிடும். அதிகப்படியான வியர்வைக்கு சில பொதுவான மற்றும் தீவிரமான காரணங்கள் இருக்கலாம். இந்த காரணங்களைப் பற்றி அறிந்து கொள்வது அவசியம்.
அதிகப்படியான வியர்வை காரணங்கள்
அதிகப்படியான வியர்வைக்கு சில தீவிர காரணங்கள் இருக்கலாம். அதிகப்படியாக வியர்ப்பதற்கு ஹைப்பர்ஹைட்ரோசிஸ் என்று மருத்துவர்கள் அழைக்கின்றனர். அதே நேரத்தில் முகத்தில் அதிகப்படியாக வியர்ப்பதற்கு, கிரானியோஃபேஷியல் ஹைப்பர்ஹைட்ரோசிஸ் என்று சொல்கிறோம்.
முதன்மை ஹைப்பர்ஹைட்ரோசிஸ் உள்ளவர்களுக்கு வியர்வை சுரப்பிகள் குறைவாக இருக்கும் அல்லது அவை அளவில் சிறியவைகளாக இருக்கும். அப்படி இல்லாவிட்டால் தன்னியக்க நரம்பு மண்டலத்தால் கட்டுப்படுத்தப்படுவதில் கோளாறு இருக்கலாம். இது இதய துடிப்பு மற்றும் இரத்த அழுத்தத்தை ஒழுங்குபடுத்தும் நரம்புகள் ஆகும்.
மேலும் படிக்க | ஆரோக்கியத்திற்கான நம்பர் 1 ஜூஸ்: விலையும் மலிவு
மரபணு பிரச்சனைகள் அதிக வியர்வையை ஏற்படுத்தும்.
வியர்வை சுரப்பிகள் அதிக சுறுசுறுப்பாக செயல்படும் போது இந்த பிரச்சனை ஏற்படும்.
வானிலை மாற்றங்களினாலும், இந்த பிரச்சனை ஏற்படலாம்.
மன அழுத்தம், பதற்றம் மற்றும் பிற மன நிலைகளும் ஒரு நபருக்கு அதிக வியர்வையை ஏற்படுத்தும்.
ஒரு நபர் சில மருந்துகளை அதிகமாக உட்கொண்டால், அது அதிக வியர்வைக்கு வழிவகுக்கும்.
நீங்கள் போதைப்பொருள், ஆல்கஹால் அல்லது புகைபிடித்தல் என்பது போன்ற பழக்கங்கள் இருந்தால், அது ஒருவருக்கு அதிகமாக வியர்க்கச் செய்யலாம்.
மேலும் படிக்க | அளவுக்கு மிஞ்சினால் வைட்டமின் பி கேன்சரை உருவாக்கும்: ஆண்களுக்கான எச்சரிக்கை
அதிகப்படியான வியர்வைக்கான தீர்வுகள்
வெப்பமான இடங்களுக்குச் செல்வதைத் தவிர்க்கவும், வெளியே செல்லும் முன் முகத்தில் சன்ஸ்கிரீனைப் பயன்படுத்தவும். இதனால் அதிக வியர்வை பிரச்சனையில் இருந்து விடுபடலாம்.
அதிக வியர்வை பிரச்சனைக்கு தக்காளி நல்ல தீர்வாக அமையும். தக்காளி சாற்றை எடுத்து முகத்தில் பூசி, சற்று நேரம் கழித்து முகத்தைக் கழுவவும். இதன் மூலம், முகத்தில் உள்ள துளைகள் மூடப்பட்டு, வியர்வை குறையும். இது தவிர எலுமிச்சை மற்றும் தக்காளி சாற்றை ஒன்றாக கலந்து அதை முகத்தில் தடவவும்.
இந்தக் கலவையை முகத்தில் பூசி சிறிது நேரம் கழித்து வெறும் தண்ணீரால் முகத்தை கழுவவும். இது, முகத்தில் உள்ள வியர்வை துவாரங்களை அடைத்து விடும். அதோடு, முகத்தின் சருமத்தின் தரத்தை அதிகரிப்பதோடு, சருமத்தில் பொலிவையும் ஏற்படுத்தும்.
(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறுங்கள். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | சருமத்தில் சொறி, அரிப்பு தொல்லையா? இந்த வீட்டு வைத்தியங்களால் நிவாரணம் பெறலாம்
மேலும் படிக்க | கல் உப்பை இப்படி பயன்படுத்தினால் இவ்வளவு நல்லதா? யாரும் சொல்லவே இல்லையே?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ