அழகுக்காக மட்டுமல்ல, ஆரோக்கியத்திற்காகவும் உடல் எடையை பராமரிப்பது அவசியமாகும். எடை இழப்புக்காக பலரும் பலவிதமான உபாயங்களை பின்பற்றுகின்றனர்.
உடல் எடையை குறைப்பதர்காக சூப் குடிப்பது நல்லது என்றாலும், அதில் சில பொருட்களை சேர்த்தால், அது எதிர்மறையான பலன்களை கொடுத்து, உடல் எடையை அதிகரித்துவிடும். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சூப்பில் சேர்க்கத் தேவையில்லாத உணவு பொருட்கள் இவை… 
சூப்பை மிகவும் சுவையாக மாற்ற, கிரீம், சீஸ் மற்றும் வேர்க்கடலை போன்றவற்றைச் சேர்க்கிறோம், ஆனால் அது எடையை குறைப்பதற்கு பதில் அதிகரித்துவிடும்.  


கிரீம் மற்றும் சீஸ்
சூப்பில் கிரீம் மற்றும் சீஸ் கலக்க வேண்டாம். இது உங்களுக்கு பயனளிக்காது. க்ரீம் மற்றும் சீஸ் சேர்த்த சூப்பை குடிப்பதால் கலோரி மற்றும் கொழுப்பு அளவு அதிகரிக்கும், இது எடை அதிகரிக்க வழிவகுக்கும்.


Also Read | பருமனானவர்களுக்கு உடற்பயிற்சியால் எடை குறையாது!


வேர்க்கடலை வெண்ணெய்
சூப்பில் வேர்க்கடலை வெண்ணெய் சேர்க்க வேண்டாம். வேர்க்கடலை வெண்ணையில் சர்க்கரை மற்றும் டிரான்ஸ் கொழுப்பு அதிகம் உள்ளது. இது எடை அதிகரிப்புக்கு வழிவகுக்கும்.


ஸ்டார்ச்/மைதா
சூப்பை கெட்டியாக்க பெரும்பாலும் ஸ்டார்ச் அல்லது மைதா சேர்க்கப்படுகிறது. ஆனால் ஊட்டச்சத்தின் அடிப்படையில், இவை எதிர்மறையான விளைவுகளையே ஏற்படுத்தும்.  


Also Read | எடை இழப்பு மாத்திரைகள் பலன் தருமா? பக்க விளைவுகள் ஏற்படுத்துமா?


வெள்ளை அரிசி சேர்க்கப்பட்ட சிக்கன் சூப் ஆரோக்கியமானதாகக் கருதப்படுகிறது, ஆனால் அதில் உள்ள கார்போஹைட்ரேட்டுகளின் அளவு மிக அதிகம். தொப்பையைக் குறைக்க விரும்புபவர்கள், வெள்ளை அரிசியை தவிர்த்து, அதற்கு பதிலாக, பார்லி, பழுப்பு அரிசி போன்றவற்றாஇ பயன்படுத்தவும்.  
 
வீட்டில் சூப் செய்யும்போது தக்காளியை சேர்க்கவும், அதில் தக்காளி சாஸை சேர்க்க வேண்டாம். தக்காளி சாஸில் உள்ள சர்க்கரை, உங்கள் குறிக்கோளுக்கு எதிரானதாக செயல்பட்டு, உடல் எடையை அதிகரிக்கும்.
 
பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. அதை ஏற்றுக்கொள்வதற்கு முன், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறுங்கள்.  


Also Read | Foxtail millet: ஆரோக்கியமான வாழ்வுக்கு அஸ்திவாரம் போடும் தினை மலட்டு தன்மையை நீக்கும்


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.


Android Link: https://bit.ly/3hDyh4G


Apple Link: https://apple.co/3loQYeR