Foxtail millet: ஆரோக்கியமான வாழ்வுக்கு அஸ்திவாரம் போடும் தினை மலட்டு தன்மையை நீக்கும்

கிழவராக இருப்பவரும் தினையை தின்றால் இளமை துள்ளும் இளைஞராக மாறி மணம் புரிவார் என்பதற்கு எடுத்துக்காட்டாக, கிழவேடம் தரித்த முருகன், வள்ளியை மணம் புணர்ந்த கதையை சொல்வார்கள்... பழம்பெரு, தானியமான தினையின் சிறப்புக்கு இதைவிட பராம்பரியமான உதாரணம் தேவையா?

Written by - Malathi Tamilselvan | Last Updated : Jul 26, 2021, 03:36 PM IST
  • தினை அதிக சத்து கொண்ட உணவுகளில் ஒன்று
  • மலட்டு தன்மை நீக்கும் உணவுகளில் தினை முக்கியமானது
  • தமிழ் கடவுள் முருகன் வள்ளியை சந்தித்தப்போது தினை உணவு கேட்டாராம்
Foxtail millet: ஆரோக்கியமான வாழ்வுக்கு அஸ்திவாரம் போடும் தினை மலட்டு தன்மையை நீக்கும் title=

தினை நார்ச்சத்து நிறைந்த தானியம். இதற்கு இறடி, ஏளல், கங்கு என்ற வேறு பெயர்களும் உண்டு. வயிறு, குடல், கணையம் போன்ற உறுப்புகளை வலுப்படுத்தி, மலச்சிக்கலை நீக்கும் ஆற்றல் கொண்ட தினையை தினசரி, ஒருவேளை சாப்பிட்டாலே ஆரோக்கியம் என்றென்றும் நீடித்து நிலைத்துநிற்கும். 

ஆண்மை குறைபாட்டை போக்கும் வல்லமை கொண்டது தினை. தினையை மாவாக அரைத்து, அதில் பசும் நெய் கலந்து சாப்பிட்டு வந்தால் உடலில் நரம்புகள் முறுக்கேறும். உயிரணுக்களின் உற்பத்தி அதிகரித்து மலட்டு தன்மை நீங்கும். நரம்பு தளர்ச்சி நீங்கும், ஆண்மை சக்தி பெருகும், விந்து வீரியமாகும். 

தமிழ்க் கடவுள் முருகன் கிழவராக உருவெடுத்து தினைக்களம் காத்து வந்த வள்ளியிடம் சாப்பிட தினை மாவு கேட்டதாகவும், பின் வள்ளியை திருமணம் செய்ததாகவும் புராணக் கதைகள் கூறுகின்றன. முருகனுக்கு தேனும் தினைமாவும் பிடித்தமான உணவு என்பதற்கும் காரணம் இதுதான். கிழவராக இருப்பவரும் தினையை தின்றால் இளமை துள்ளும் இளைஞராக மாறி மணம் புரிவார் என்பதற்கு எடுத்துக்காட்டாக கிராமங்களில் சொல்வார்கள்.

Also Read | Allergy: ஆணுறையும் ஒவ்வாமையை ஏற்படுத்தும் அதற்கான காரணம் தெரியுமா?

அதிக புரதம் கொண்ட தினை கொண்டு செய்ய பட்ட உணவு வகைகளை அவ்வப்போது சாப்பிட்டு வருவதால் உடலில் தசைகள் நன்கு வலுபெறும். தோலில் சுருக்கங்கள் ஏற்படுவதை தடுத்து, பளபளப்பு தன்மையை அதிகரித்து இளமையை நீண்ட நாள் வரை நீட்டிக்கும் தன்மை கொண்டது தினை. 

புரதம் சத்துக்கள் அதிகம் கொண்டிருக்கும் தினை, கொழுப்பு சத்து அறவே இல்லாத தானியம் ஆகும். தினையை அடிக்கடி சாப்பிட்டு வந்தால், உடலில் கொலஸ்ட்ரால் சமநிலையில் இருக்கும். தேவையற்ற கொழுப்புகளை கரைத்து உடல் எடை அதிகம் கூடாமல் தடுக்கும் ஆற்றல் கொண்டது தினை. அதேபோல், மன அழுத்தம், கோபம், கவலை போன்ற உணர்வுகளை குறைக்கக்கூடிய வேதியல் பண்புகள் நிறைந்தது தினை. 

அல்சைமர் நோய் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஏற்படு தீவிரமான ஞாபக மறதி நோய் வந்தவர்கள் தினையை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், மூளை செல்கள் புத்துணர்வு பெற்று நினைவுத்திறனை மேம்படுத்தும். 

Also Read | Easy Weight Loss: உடல் எடையை குறைக்க உடற்பயிற்சி தேவையில்லை தெரியுமா?

வைட்டமின் பி 1 சத்து இதயத்திற்கு செல்லும் ரத்த நாளங்கள், நரம்புகளின் செயல்பாட்டை உறுதி செய்கிறது. இதயத் தசைகளையும் வலுப்படுத்தி இதயம் சம்பந்தமான எத்தகைய நோய்களும் ஏற்படாமல் தடுக்கிறது. விட்டமின் பி சத்து அதிகம் கொண்ட தினையை தொடர்ந்து சாப்பிட்டால் இதய பிரச்சனைகள் ஏற்படும் வாய்ப்புகள் குறையும்.

நோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தினையை கஞ்சியாகவோ, களியாகவோ செய்து கொடுப்பது சிறந்த உணவாகும். கால்சியம் சத்துக்களை அதிகம் கொண்ட தானியம் தினை என்பதால், அதை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், எலும்புகள் உறுதியாகும். அடிபட்டு எலும்பு உடைந்தவர்கள் தினை உணவுகளை சாப்பிட்டு வர உடைந்த எலும்புகள் விரைவில் கூடும். 

நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் சர்க்கரை சத்து அதிகம் மிகுந்த அரிசி உணவுகளை தவிர்த்துவிட்டு தினையை சாப்பிட்டால், நீரிழிவால் உடல் இழந்த சக்தியை மீண்டும் பெறலாம்.    

தினையில் இட்லி, அல்வா, காரப் பணியாரம், பாயசம், அதிரசம், உப்புமா, தோசை, புட்டு, முறுக்கு, பக்கோடா உள்ளிட்ட சுவையான உணவு வகைகளையும் தயாரிக்கலாம்.  

Also Read | Benefits of Neem: நோய் எதிர்ப்பு சக்தியின் பிறப்பிடம் வேப்பிலையின் இனிக்கும் ஆரோக்கியம் 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Trending News