Weight loss in exercise! No way! பருமனானவர்களுக்கு உடற்பயிற்சியால் எடை குறையாது!

உடற்பயிற்சியின் மூலம் உடல் எடையை குறைப்பது உடல் பருமன் உள்ளவர்களுக்கு மிகவும் கடினமாக இருப்பதாக சமீபத்திய ஆராய்ச்சி வெளிப்படுத்தியுள்ளது.

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Malathi Tamilselvan | Last Updated : Aug 29, 2021, 12:05 PM IST
  • பருமனானவர்களுக்கு உடற்பயிற்சியால் எடை குறையாது!
  • உடல் எடையை குறைப்பது எப்படி?
  • 40 வயதிற்குப் பிறகு, உடலின் வளர்சிதை மாற்றம் குறைந்து, எடை அதிகரிக்க தொடங்கும்
Weight loss in exercise! No way! பருமனானவர்களுக்கு உடற்பயிற்சியால் எடை குறையாது! title=

உடற்பயிற்சியின் மூலம் உடல் எடையை குறைப்பது உடல் பருமன் உள்ளவர்களுக்கு மிகவும் கடினமாக இருப்பதாக சமீபத்திய ஆராய்ச்சி வெளிப்படுத்தியுள்ளது.

ஒரு நாளில் நாம் செலவழிக்கும் மொத்த ஆற்றலானது, நமது உடலின் அடிப்படைச் செயல்பாடு மற்றும் செய்யும் வேலைகளுக்கு செலவாகும் ஆற்றலைச் சேர்த்து இருக்கும் என்று ஆரம்பத்தில், ஆராய்ச்சியாளர்கள் நினைத்தனர்.

இருப்பினும், ஆரம்ப ஆய்வக ஆராய்ச்சி தவறாக வழிநடத்தும் என்பதை சுட்டிக்காட்டுவதாக சமீபத்திய ஆய்வு தெரிவிக்கிறது. இதை மேலும் ஆராய, சர்வதேச விஞ்ஞானிகளின் குழு, பல தசாப்தங்களாக சேகரிக்கப்பட்ட மற்றும் சர்வதேச அணுசக்தி நிறுவனத்தால் வழங்கப்பட்ட தரவுத்தொகுப்பிலிருந்து 1,754 பெரியவர்களிடமிருந்து ஆற்றல் செலவினங்களின் அளவீடுகளை பகுப்பாய்வு செய்தது.

Also Read | Weight Loss in Ayurveda: உடல் எடை குறைப்புக்கு ஆயுர்வேதம் சொல்வது என்ன?

இந்த ஆய்வின் படி, அதிக உடற்பயிற்சி செய்வதன் மூலம் செலவாகும் ஆற்றலின் அளவானது, ஒவ்வொரு நபரின் உடலும் அடிப்படை வளர்சிதை மாற்ற செயல்பாடுகளுக்கு செலவழித்த ஆற்றலை நீண்ட காலத்திற்கு கட்டுப்படுத்துவதன் மூலம் ஈடுசெய்ய வழிவகுத்தது என ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

உடல் எடையை குறைப்பது எப்படி என்ற கேள்வி இன்று மிகவும் பிரபலமாக இருக்கிறது. உடல் எடையை குறைக்க பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம். ஆனால், அவற்றில் பயன் தருவது என்பதை கண்டறிந்து நாம் அந்த வழியை பின்பற்ற வேண்டும்.

கச்சிதமான உடல்வாகு அனைவருக்கும் வாய்ப்பதில்லை. எடையை குறைத்து, உடலை சிக்கென்று கச்சிதமாக வைத்துக் கொள்ள உடல் பருமன் ஒரு தடையாக இருக்கிறது. எனவே, உடல் எடையை குறைப்பதாக எடை இழப்பு சப்ளிமெண்ட்ஸ் எடுத்துக் கொள்ளும் வழக்கம் அதிகரித்திருக்கிறது.

Read Also | IVF கருவுறுதல் சிகிச்சை பெறுவதற்கு பெண்ணின் உடல் எடை தடையா?

பருமனாக இருப்பவர்கள், உடல் எடையைக் குறைக்க பல்வேறு முறைகளை பின்பற்றுகிறார்கள். அதில் முக்கியமானது உடற்பயிற்சியாகும். முடிந்த அளவு இதைப் பின்பற்றுவதே ஆரோக்கியமானதாகும்.  

உடலில் இருந்து கூடுதல் கொழுப்பை எரிப்பதாகக் (fat burner) கூறும் உணவு நிரப்பிகள் சரியான பலனைத் தருவதாக இன்னமும் நிரூபிக்கப்படவில்லை. 40 வயதிற்குப் பிறகு, உடலின் வளர்சிதை மாற்றம் குறைந்து, எடை அதிகரிக்க தொடங்கும். எனவே, ஆரம்பத்தில் இருந்தே உடல் எடையை கட்டுக்குள் வைப்பதில் கவனம் செலுத்துவது நலன் பயக்கும்.

இயற்கையான முறையில் உணவு கட்டுப்பாடு, உடற்பயிற்சி போன்றவற்றின் மூலம் உடல் எடை குறைக்க (Weight Loss) முயற்சிக்கவும். கொழுப்பை எரிக்கும் சப்ளிமெண்டுகள் என்றுமே பிரச்சனைகளுக்கு ஆணிவேராக மாறலாம்.

Also Read | Foxtail millet: ஆரோக்கியமான வாழ்வுக்கு அஸ்திவாரம் போடும் தினை மலட்டு தன்மையை நீக்கும்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Trending News