புதுடெல்லி: மனித உடலின் செயல்பாட்டிற்கு முக்கியமான கல்லீரலில் பாதிப்பு ஏற்பட்டாலும், நச்சுகள் அதிகமானாலும் உடலின் வளர்சிதை மாற்ற செயல்முறைகள் சீர் கெடுகின்றன. மேலும் பல உடல்நலப் பிரச்சினைகளும் உருவாகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கல்லீரல் என்பது செரிமான அமைப்பின் ஒரு முக்கியமான உறுப்பு ஆகும், இது மனிதர்களில் அடிவயிற்றின் வலது மேல் பகுதியில், உதரவிதானத்திற்கு கீழே அமைந்துள்ளது.


கல்லீரலின் செயல்பாடு பல்வேறு வளர்சிதை மாற்றங்களை நச்சுத்தன்மையாக்குவது, புரதங்களை ஒருங்கிணைத்தல் மற்றும் செரிமானம் மற்றும் வளர்ச்சிக்கு தேவையான உயிர்வேதிப்பொருட்களை உற்பத்தி செய்வதாகும்.


நாம், நமக்குத் தெரியாமலேயே நமது பழக்க வழக்கங்கள் மூலம் நமது ஆரோக்கியத்தைக் கெடுத்துக் கொள்கிறோம். அதில் கல்லீரல் பாதிப்பும் ஒன்று. மது அருந்துவது, அளவுக்கதிகமாக மருந்துகளை உட்கொள்வது, மோசமான உணவுப்பழக்கம் என பல வழிகளில் கல்லீரலை சேதப்படுத்துகிறோம். 


மேலும் படிக்க | எச்சரிக்கை! அளவிற்கு அதிகமான பாராசிட்டமால் மருந்தால் மரணம் கூட சம்பவிக்கலாம்!


இந்தியாவில் இறப்புக்கான 10 முக்கிய காரணங்களில் ஒன்றாக கல்லீரல் பாதிப்புகள் பட்டியலிடப்பட்டுள்ளது. நாம் என்ன சாப்பிடுகிறோமோ, அது ஆரோக்கியமானதா என்பதை அறிந்து உண்ண வேண்டும்.


இது எவ்வளவு முக்கியமோ அதே அளவு முக்கியமானது, கல்லீரலுக்கு சுமையை ஏற்படுத்தும் உணவுகளையும், பழக்க வழக்கங்களையும் தவிர்ப்பது என்பதை புரிந்துக் கொள்ள வேண்டும்.  


கல்லீரலைப் பாதுகாக்க கடைபிடிக்க வேண்டிய பழக்கங்களும் தவிர்க்க வேண்டிய 5 உணவுகளும்


அதிகப்படியான சர்க்கரை நுகர்வு, கல்லீரலை பாதிக்கும், குறிப்பாக மிட்டாய்கள், குக்கீகள் மற்றும் சோடாக்களில் காணப்படும் சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரை கல்லீரலை சேதப்படுத்தும்.


வெள்ளை மாவு மிகவும் பதப்படுத்தப்பட்டதாகவும், தாதுக்கள், நார்ச்சத்து மற்றும் பிற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் இல்லாததாகவும் இருக்கின்றன. எனவே மைதா உள்ளீட்ட வெண்ணிறமாவுகளில் இருந்து செய்யப்பட்ட உணவுகளை சாப்பிடுவதை தவிர்க்கவும். பீட்சா, பாஸ்தா, பிஸ்கட், ரொட்டி போன்றவற்றை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.



பர்கர், பிரெஞ்ச் ஃப்ரைஸ், சிப்ஸ் போன்ற துரித உணவுகளை உண்ணாமல் இருப்பது கல்லீரலுக்கு நிம்மதியைக் கொடுக்கும் என்று உங்களுக்குத் தெரியுமா?


செரிமாணம் செய்ய கடினமான இந்த உணவுப்பொருட்கள் உங்கள் வாய்க்கு ருசியானதாக இருந்தாலும், கல்லீரலின் ஆரோக்கியத்திற்கு எதிரி என்பதை புரிந்துக் கொண்டு, தவிர்ப்பது நல்லது.


மேலும் படிக்க | Fatty Liver: கல்லீரலில் சேர்ந்துள்ள கொழுப்பை நீக்கும் ‘4’  எளிய வழிகள்!


சிவப்பு இறைச்சி சாப்பிடுவதில் ஆர்வமுள்ளவர்களுக்கு இது கெட்ட செய்தியாக இருந்தாலும் நிதர்சனமான உண்மை இது. உங்கள் கல்லீரலில் மோசமான தாக்கத்தை ஏற்படுத்தும் சிவப்பு இரைச்சிகளை ஜீரணிக்க கல்லீரல் மிகவும் கஷ்டப்படும்.


அதோடு, அதிகப்படியான புரதம் கல்லீரலில் கொழுப்பு படித்து ஃபேட்டி லீவர் என்ற நோயை ஏற்படுத்தும்.


அதிகமாக மது அருந்துவது கல்லீரலை மோசமாக பாதிக்கும். ஆல்கஹால்களால் கல்லீரலில், வீக்கம், செல் இறப்பு மற்றும் ஃபைப்ரோஸிஸ் ஆகிவை ஏற்படும். அதிகமாக மது அருந்துவது, கல்லீரலில் இழைநார் வளர்ச்சி ஏற்பட ஏதுவாக இருக்கும். இதனால், இரத்த வாந்தி, மஞ்சள் காமாலை மற்றும் கல்லீரல் புற்றுநோய் ஏற்படும்.


எனவே மேலே குறிப்பிட்ட இந்த உணவுகளை தவிர்ப்பது, கல்லீரலுக்கு நீங்கள் காட்டும் அன்பாக இருக்கும். நீங்கள் கல்லீரலை நேசித்தால், அது உங்கள் உடலநலனை பாதுகாக்கும்.


(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. அதை ஏற்றுக்கொள்வதற்கு முன், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறுங்கள். ZEE NEWS இதை உறுதிப்படுத்தவில்லை.)


மேலும் படிக்க | அடுத்த 5 மாதங்களுக்கு இலவச ரேஷன் வேண்டுமானால் இத பண்ணுங்க


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR