Immunity Booster: நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் பலாப்பழம்
பலாப்பழம் மருத்துவ குணங்கள் மிகுந்து இருக்கின்றது. வைட்டமின் ஏ உயிர் சத்திற்கு தொற்றுநோய் கிருமிகளை அழிக்கும் சக்தி இருப்பதால் உடலில் தொற்று நோய் ஏற்படாது.
முக்கனிகளுள் இரண்டாவது கனி பலாப்பழம். இந்தப் பழம் ஒரு குறிப்பிட்ட சீசனில் மட்டுமே கிடைக்க கூடியது. பலாப்பழம் சாப்பிடுவதற்கு சுவையானது மட்டுமல்ல, உடலுக்கும் நல்லது. பலாப்பழம் மருத்துவ குணங்கள் மிகுந்து இருக்கின்றது. வைட்டமின் ஏ உயிர் சத்திற்கு தொற்றுநோய் கிருமிகளை அழிக்கும் சக்தி இருப்பதால் உடலில் தொற்று நோய் ஏற்படாது. அந்தவகையில் பலாப்பழம் சாபிடுவதால் ஏற்படும் நன்மைகள் என்னவென்று பார்போம்.
* வைட்டமின் ‘சி’ (Vitamin C) அதிகமாக உள்ளதால், மிகச்சிறந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட் ஆகவும் செயலாற்றுகிறது. வைரஸ் மற்றும் பாக்டீரியாக்களால் நோய்த்தொற்று உண்டாகாமல் தடுக்கிறது.
ALSO READ | கொரோனா வைரஸ் பயம்: விலை உயர்ந்த பலாக்காய்! அசைவத்திற்கு சிறந்த மாற்றா?
* வெள்ளை அணுக்களின் எண்ணிக்கையை அதிகரித்து, நோய் எதிர்ப்பு சக்தியைக் (Immunity Booster) கூட்டுகிறது. பலாச்சுளைகளில் பொட்டாசியம் அதிகம் இருப்பதால், இரத்த அழுத்தத்தை குறைத்து இதய நோய் வராமல் தடுகிறது.
* ஆஸ்துமாவால் பாதிக்கப்பட்டோர் பலாபழமரத்தின் (Jackfruit Benefits) வேரை வேக வைத்து அந்த நீரோடு, பலாப்பழச்சாற்றை கலந்து குடித்தால் ஆஸ்துமா குணமாகும்.
* பலாப்பழத்திலுள்ள விட்டமின் ‘ஏ’ சத்து, பார்வைக் குறைபாடு வராமல் தடுக்கிறது. மாலைக்கண் நோயையும் குணமாக்கும். தொடர்ச்சியாக பலா சாப்பிடுவோருக்கு கண் நோய்கள் வராது என்கிறது ஒரு ஆய்வு.
* நார்ச்சத்து அதிகம் உள்ள பழம் என்றால் அது பலாப்பழமே. மேலும் இது அல்சர், செரிமானக் கோளாறு, கண்களில் ஏற்படும் கோளாறு ஆகியவற்றை குணப்படுத்தும் தன்மையை உடையது. இதில் கலோரி குறைவாக இருப்பதால் இதய நோய் இருப்பவர்களுக்கு சிறந்த மருத்துவ குணம் வாய்ந்த பழம்.
* கார்போஹைட்ரெட், பொட்டாசியம், கால்சியம், புரதசத்து ஆகிய சத்துக்கள் பலாப்பழத்தில் உள்ளது. புற்றுநோய் வராமல் தடுக்கும் சக்தி பலாப்பழத்திற்கு உண்டு.
* பலா மரத்தில் வரும் பாலினை எடுத்து நெறிக்கட்டிகள், நெடுநாள் உடையாமல் இருக்கும் கட்டிகள் மீது தடவி வர அவை பழுத்து உடையும்.
* பலாப்பழத்தில் உள்ள ஆன்டி-அல்சர் பொருள், அல்சர் மற்றும் செரிமான பிரச்சனையை போக்கும். மேலும் இதில் உள்ள நார்ச்சத்து, குடலியக்கத்தை சீராக்கி, மலச்சிக்கலை சரிசெய்யும்.
ALSO READ | தயிரோடு மறந்துகூட இந்த 5 உணவையும் சேர்த்து சாப்பிடாதீங்க!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR